Apr 23, 2010

பிரிவுகள் - கலாப்ரியா

கலாப்ரியா

பிரிவுகள்

நாளை இந்தக் குளத்தில் 800px-Kalapriya
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது
இன்று புல்லைத் 
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்

*****

1 comment:

  1. கலாப்ரியா அவர்களின் பார்வையே தனி அழகுதான்,இப்படியும் சில பிரிவுகள்.

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.