Jul 16, 2009

வ.வே.சு ஐயர்

vavesu-iyer

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்கிற வ.வே.சு. ஐயர் திருச்சி நகருக்கு அருகில் வரகனேரி என்னும் ஊரில் 1881-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார். 1897-ல் வ.வே.சு. ஐயருக்கும் பாக்கியலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. 1907-ல் பாரிஸ்டர் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். 1910-ல் திரும்பி கடல் மார்க்கமாக புதுச்சேரி வந்தார். புதுச்சேரியில் பாரதியார், அரவிந்தர் ஆகியோருடன் ஐயருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தமிழில்  சிறுகதைகளை அதன் வடிவப் பிரக்ஞையுடன் கையாண்ட முதல் எழுத்தாளர் ஐயர்தான். 1915-ஆம் ஆண்டு ஐந்து சிறுகதைகளைக் கொண்ட மங்கையர்க்கரசியின் காதல்' வ.வே.சு. ஐயரின் கம்ப நிலையம் வெளியீடாக வெளிவந்தது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1921-ல் கம்பராமாயணம் குறித்து ஆங்கிலத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். 1925-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி பாபநாசம் கல்யாணி தீர்த்தம் அருவியில் தவறி விழுந்த மகள் சுபத்ராவை காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்த வ.வே.சு. ஐயர் அருவியிலேயே காலமானார். குளத்தங்கரை அரசமரம்' கதை முதலில்  வ.வே.சு. ஐயரின் மனைவி ஸூ. பாக்கியல்டசுமி அம்மாள் பெயரில் விவேகபோதினி என்னும் மாத இதழில் பிரசுரமானது.

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.