Jan 15, 2010

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

sisuchellappa

வாடிவாசலிருந்து சில பகுதிகள்:

கிழக்கு சீமையில் பிரசித்தி பெற்ற மாடு அணைகிறவன் மகன் அந்தப் பையன் -பேச்சுக்கு பையன் என்றாலும் -அந்த வாலிபன் என்ற செய்தி அந்த ஷணமே வாய்க்கு வாய் மாறி வாடிவாசல் முன் சூழ்ந்து நின்ற அதனை நூற்றுக்கணக்கானவர்களுக்கும் பரவி எட்டிவிட்டது. தொழிலில் ஈடுபட்ட அத்தனை பேரும் அவனையே ஆராய்ந்தார்கள் .கண் உறுத்து பார்த்து அவனவன் யூகத்திற்கு அகபட்டபடி பேசிகொண்டார்கள் .


" மாடு பிடிகத்தான் வந்திருப்பான் பய.அதுக்கு சம்சயம் வேறேயா?"

" கிளகத்தி ஆளு,துடியாதான் இருப்பான் "

" சல்லிகட்டு ரோசமாதான் இருக்கும் "

" உருமாளுக அத்தனையையும் தட்டிகிட்டு போயிர போறான் கிழக்கத்தியான்" "நம்ம பக்கதானுக அசந்தாப் போச்சு "

"ஜமிந்தார் மாட்டை கூட ஒரு கை ..."

"ஹும் ! ஜமிந்தார் மாட்டை புடிக்க இவன்தானா ஆளு? ஆண்டுப் பய !"

"கொம்புலேர்ந்து குதிசுப்புடானோ ? கிளகக்கதியானா ? வெறும் பேச்சுப் பேசிக்கிட்டு !"

" பார்த்தியா பிச்சி, வாடிபுரம் காளைக்கு வந்திருக்கிற மவுசை ?" என்றான்மருதன் கிண்டலாக. "பார்த்துடலாம் ," என்று பிச்சி ஒரே வார்த்தைதான் சொன்னான் ,அதுவும் மெதுவாக .கிழவன் அதை உன்னிப்பாக கேட்டுவிட்டான். அந்த வார்த்தையை பிச்சி அழுத்தின விதம் கிழவனை ஒரு குலுக்கு குலுக்கி விட்டது .

jallikattu1alanganallur3ja

" என்ன தம்பி விளையாட்டுக்கு பேசுறியா, இல்லே ..."என்று தடுமாறக் கலவரத்துடன் பார்த்துக் கிழவன் கேட்டான். பிச்சியின் வார்த்தைக்கு ஒரே அர்த்தம்தான் உண்டு .அந்த அர்த்தத்தில்தான் அவன் சொல்லியிருக்கிறான் என்பதை கேட்டும் அவனால் நம்பமுடியவில்லை "

கிழவனின் கலவர முகத்தை நிலைத்து பார்த்து லேசாக சிரித்து பிச்சி சொன்னான் ," ஏன்,தாத்தா ,சும்மா போகிற மாட்டுமேல மனுஷன் விழறதே ஒரு விளையாட்டுதானே , இல்லிங்களா? சொல்லுங்க ,ஏன் பாக்கிறவங்களுக்கு கூட அது விளையாடதானே இருக்கு. அதுக்குன்னு பிறந்துபோட்டு...... "

அட விடுங்கப்பா கீழே," என்று பிச்சி வற்புறுத்தி உற்சாக தோள்களிலிருந்து கிழிறங்கி நின்றான்.மறுபடியும் ஜமிந்தார் முகத்தை பார்த்து கும்பிட்டான்." டேய் ,வாடிபுரம் காளையை புடிச்சி பாக்றியா?" என்று திடுதிபென ஜமிந்தார் அவனை கேட்டுவிட்டு அவன் முகபாவத்தை ஆராய்ந்தார்.

அந்த சில வினாடிகளுக்கு இருவரும் ஒருவரைஒருவர் நோட்டம் பார்த்து கொண்டார்கள் .அந்த வாலிபனின் வேலையையும் கையாளும் புதுபுது உத்திகளையும் சுதாரிப்பையும் கையுறுதியையும் அந்த இரண்டு காளைகள் விசயத்தில் அவர் பார்த்துவிட்ட பிறகு அவருக்கு திடீர் சந்தேகம் பிறந்துவிட்டது -வாடிபுரம் காளையையும் அவன் பார்த்து விடுவனோ என்று .இதுவரை இருந்த இரட்டை நிச்சயம் அவருக்கு இப்பொது இல்லை,முதல் முதலாக அவர் வாழ்கையில் ,வாடிவாசல் முன்பு.வீசி வந்த கேள்வியை கேட்டு பிச்சியும் சற்று திடுக்கிட்டு விட்டான்.ஜமிந்தார் கேள்விக்கு அர்த்தம் ,அதற்கு பின் உள்ள அவர் நினைப்பு ,இதெல்லாம் நினைத்து பார்த்தான்.அவர் முகத்திலிருந்து நிச்சயமாக மதிப்பிட முடியவில்லை .அனால் ஒன்று மட்டும் நிழல் வீசியது .அவரது சந்தேகத்தை போக்கும்படியாக இரண்டிலொரு பதிலை எதிர்பார்த்தமாதிரி தோன்றியது.

"உறுதியாக சொல்லமுடியாதுங்க " என்று ஜமிந்தார் கண்களை சந்திக்காமலே தலை குனிந்து பிச்சி இழுத்தான் ." நோக்கம் பர்த்துகிடனுங்க."அந்த வார்த்தை முனக்கமாக வந்தது.ஆனால் ஜமிந்தார் காதுக்கு தெளிவாக கேட்டது .

"சரி போ !"என்று ஜமிந்தார் வெட்டி சொன்னார் ." மாடுகளை புடி!" பிச்சியின் வார்த்தைகளில் உள்ள அர்த்தம் அவருக்கு தெளிவாகிவிட்டது .

"ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம் . அது விளையாட்டும் கூட.புய வலு ,தொழில்நுட்பம் எல்லாம் அதற்கு வேண்டும் .தான் போராடுவது மனிதனுடன் அல்ல,ரோசமூடப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை நாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன் அந்த இடத்தில மரணம்தான் மனிதனுக்கு காத்து கொண்டிருக்கும்.காளைக்கு தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது .அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை."என்று வாடிவாசல் -கு முன்னுரை எழுதி இருக்கிறார் சி.சு.செல்லப்பா

****

வாடிவாசல் குறித்து ஜெயமோகன்

உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான vaadivasal_bகதை.

தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. 'ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ' என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.
காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை
இந்த நாவலின் கதாநாயகனான பிச்சி,அவன் கூட்டாளியும் மச்சினனுமான மருதன், அவர்கள் ஜல்லிக்கட்டின் போது சந்திக்கும் கிழவன், காரி காளையை வைத்திருக்கும் ஜமீன்தார் என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.

ஒரே நாளில் நடைபெறும் சம்பவமாக இந்த கதை சித்தரிக்கப்பட்டு இருப்பது கதையின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.தன் தந்தையின் உயிர் பிரிய காரணமாக இருந்த காளையை அடக்க வரும் ஒரு வீரனின் கதையை கச்சிதமாக வார்த்தைகளில் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர்.

வட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் .

மாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன்
எவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது. ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.

40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.

****

No comments:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.