Nov 14, 2010

நான்கு கவிதைகள்-விக்ரமாதித்யன் நம்பி

 

 

 

1
சிறு தெய்வங்களை
சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்
பெருந் தெய்வம்தான்
பிடிகொடுத்துத் தொலைக்காது

nambi2453
2
முந்தாவிட்டால் ஒன்றும்
மோசமில்லை
பிந்திவிட்டாலோ
பெரும்பாதகம் வந்துவிடும்


3
செடிகள்
வளர்கின்றன
குழந்தைகள்
வளர்கிறார்கள்
எனில்
மரங்களுக்கு
வருவதில்லை மனநோய்


4
பறவைகள்
பறக்கும் ஆகாயத்தில்
புழுக்கள்
வளரும் பூமியில்
மானுடம் மட்டும்
மயங்கும் இடம் தெரியாமல்.

5 comments:

  1. செடிகள்
    வளர்கின்றன
    குழந்தைகள்
    வளர்கிறார்கள்
    எனில்
    மரங்களுக்கு
    வருவதில்லை மனநோய்//
    அருமை !

    ReplyDelete
  2. உங்க கவிதை எல்லாம் படிக்காமல் வெறும் வைரமுத்து. . வாலினே. . பாதி வாழ்க்கை போச்சு..
    பல்கலைக்கழகங்ளும். . கல்லூாிகளும் இன்னும் பாரதி பற்றியே பாடம் நடத்துகின்றன. என்னத்த சொல்ல. . மீதி .இருக்க காலத்திலையாவது. . உங்க மாதாி ஆளகள. . . தேடுவோம்

    ReplyDelete
  3. காடுகள்
    அழிய அழிய
    சுடுகாடுகள்
    பெருகும்'
    விக்ரமாதித்தனின் கவிதையை வாசிக்கும் போது தோன்றிய வரிகள். விக்ரமாதித்தனின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.