Nov 14, 2010

நான்கு கவிதைகள்-விக்ரமாதித்யன் நம்பி

 

 

 

1
சிறு தெய்வங்களை
சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்
பெருந் தெய்வம்தான்
பிடிகொடுத்துத் தொலைக்காது

nambi2453
2
முந்தாவிட்டால் ஒன்றும்
மோசமில்லை
பிந்திவிட்டாலோ
பெரும்பாதகம் வந்துவிடும்


3
செடிகள்
வளர்கின்றன
குழந்தைகள்
வளர்கிறார்கள்
எனில்
மரங்களுக்கு
வருவதில்லை மனநோய்


4
பறவைகள்
பறக்கும் ஆகாயத்தில்
புழுக்கள்
வளரும் பூமியில்
மானுடம் மட்டும்
மயங்கும் இடம் தெரியாமல்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

5 கருத்துகள்:

கார்த்திக் பாலசுப்ரமணியன் on November 14, 2010 at 10:45 AM said...

மிக நன்று !

suneel krishnan on November 14, 2010 at 5:45 PM said...

செடிகள்
வளர்கின்றன
குழந்தைகள்
வளர்கிறார்கள்
எனில்
மரங்களுக்கு
வருவதில்லை மனநோய்//
அருமை !

வித்யாஷ‌ங்கர் on February 13, 2011 at 5:21 PM said...

simple way of great things

prof.donstony@blogspot.com on December 21, 2011 at 6:10 PM said...

உங்க கவிதை எல்லாம் படிக்காமல் வெறும் வைரமுத்து. . வாலினே. . பாதி வாழ்க்கை போச்சு..
பல்கலைக்கழகங்ளும். . கல்லூாிகளும் இன்னும் பாரதி பற்றியே பாடம் நடத்துகின்றன. என்னத்த சொல்ல. . மீதி .இருக்க காலத்திலையாவது. . உங்க மாதாி ஆளகள. . . தேடுவோம்

சித்திரவீதிக்காரன் on July 16, 2012 at 6:30 AM said...

காடுகள்
அழிய அழிய
சுடுகாடுகள்
பெருகும்'
விக்ரமாதித்தனின் கவிதையை வாசிக்கும் போது தோன்றிய வரிகள். விக்ரமாதித்தனின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பகிர்விற்கு நன்றி.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்