Showing posts with label தி. ஜானகிராமன். Show all posts
Showing posts with label தி. ஜானகிராமன். Show all posts

Mar 13, 2017

பரதேசி வந்தான் - தி. ஜானகிராமன்

வக்கீல் அண்ணா பந்தியை ஒரு நோட்டம் விட்டார்.


அடியேன்.அவருக்குநேர்த்தம்பி அல்ல.ஒன்றுவிட்டதம்பிகூட அல்ல. அவருடைய மேதா விலாசத்தைக் கண்டு உலகமே அவரை, அண்ணா.அண்ணா! என்று வாய்நிறைய அழைத்தது.அந்த மாதிரித் தம்பிதான் நான். ஒரே தெரு எதிர்த்த வீடு-இந்த உறவைத் தவிர வேறொன்றும்இல்லை.அதேகாரணத்தால் உலகத்தாாைவிடநான்மிக மிக நெருங்கிய தம்பி கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று ஓடும் தம்பி, ஈஸன் ஹோவர் போட்டிபோடுவதிலிருந்து இளம்வித்வான் கச்சேரி வரையில் அவருடைய அபிப்பிராயத்தை எல்லோருக்கும் முன்னால் முதல் முதலாக, அந்தரங்கத்தில் கேட்கும் அபிமானத்தம்பி


அண்ணா பந்தியைச் சாரி சாரியாக நோட்டம் விட்டார். ஜூனியர் பாப்பா பந்துலு, பூதகணங்களாகச் சேவைக்குக் காத்துக் கிடக்கும்
. அண்டைவீட்டு இளைஞர்கள்.எதிர்த்தவீட்டுதான்,இரண்டு
குமாஸ்தாக்கள்-எல்லோரும் செய்த சாப்பாடு ஏற்பாடு சரியாக
ஓவியம் :ஆதிமூலம்
இருக்கிறதா என்று அந்த ராஜாளி நோட்டம் ஆராய்ந்து கொண்டி ருந்தது. அவர் திருப்தி அடைய வேண்டுமே என்று எல்லோருக்கும் கவலைதான். ஜூனியர் பாப்பா, வேற்றுத் தெருவுக்குள் கால் வைத்துவிட்ட நாயைப்போல ஒண்டிஒடுங்கி நடந்துகொண்டிருந்தார். அண்ணாவின் பார்வைகம்பீரமாக ஒவ்வொரு நபரையும் அவருடைய அந்தஸ்தையும் எடைபோட்டு, சரி,ம், சரி என்று ஆமோதம் செய்து கொண்டுவந்தது.


அண்ணா கோர்ட்டில் வக்கீல். வாழ்க்கையில் நீதிபதி. கொலையும் பறியும் புரிந்துவிட்டு, குற்றுயிரும் குலை உயிருமாகச் சட்டத்தின் வாயில் மாட்டிக்கொண்டு இழுத்துக் கொண்டிருந்தவர்களை வெளியே பிடுங்கி எறிந்து அபயம் தந்திருக்கிறார். தீவட்டிக் கொள்ளையோ, கொலை பாதகமோ-எதுவாயிருந்தால் என்ன? அண்ணா திவலை பறக்க, நீர்வீழ்ச்சியைப்போல வாதாடும்போது நீதிபதியின் தனித்தன்மை, நடுநிலைமை எல்லாம்.அமுங்கி ஆற்றோடு போய்விடும். இப்பேர்ப்பட்ட அண்ணா. வாழ்க்கையில் நீதிபதி வாழ்க்கையில் எந்தத்தப்பையும்-குற்றம் கிடக்கட்டும்-தவற்றைக்கூட சின்னத்தப்பைக்கூட லேசில் விடமாட்டார். சாணக்கிய சாகசம்செய்து வேரை எற்றி, நீறாக்கி, வெற்றி அடைந்த பின்புதான் அமைதி காணுவார்.


அண்ணாவின் பிள்ளைக்கு முதல் நாளைக்கு முதல் நாள் கல்யாணம் ஆகிவிட்டது. மறுநாள் இரவு எல்லோரும் திரும்பி விட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் கிருகப் பிரவேசம். மணப் பெண்ண்ை அழைத்தாகி விட்டது. கோலாகலமாகத்தான் எல்லாம் நடந்தது. ஒரே பிள்ளை! சாப்பாட்டுக்கு இலைபோட்டாய்விட்டது.நூற்றைம்பது இலை போடக் கூடிய கூடத்தில் நெருக்கி இன்னும் ஐம்பது இலை விழுந்திருக்கிறது. கொல்லைக் கட்டு, அடுக்களை, கொல்லை நடை வாசல் நடைஎங்கே பார்த்தாலும் இலைபோட்டிருக்கிறது. கூடத்துப் பந்தி பொறுக்கான் பந்தி. இருநூறு இலையும் அண்ணாவின் அபிப்பிராயத்தில் முதல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஜூனியர் பந்துலுவும் நானும்பார்த்துத்தான் உட்கார்த்திவைத்திருக்கிறோம்.


அண்ணா கம்பீரமாகப்பார்க்கிறார்.  வாழ்க்கையில் நீதிபதிஅவர். சின்னத் தவறு நடந்தாலும் தவறுதான். துளி அபஸ்வரம்பேசினாலும் அபஸ்வரந்தானே-அண்ணாவும். வெறும்வக்கீல் அல்ல பெரிய சங்கீத ரசிகர். ரசிகர் என்பதைவிடச் சங்கீத க்ரிடிக் (விமரிசகர்) என்று சொல்வது பொருத்தம். கர்நாடக சங்கீதத்தில் ஊறித் திளைத்து நீந்தியவர். வேங்கமடமகி சார்ங்க தேவர் எல்லாம் அவருக்குத் தலைகீழ்ப் பாடம். தமிழ்ப் பண்களையெல்லாம் துருவித் துருவிக்
கோபத்தில் விம்மிற்று.ஒரே பிடியாகக் கழுத்தைப் பிடித்து அமுக்கித் திருகிப் போட்டுவிடலாமா என்று, கை நெஞ்சு எல்லாம் துடித்தன. ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.உள் மனம் நடுங்கிச் செத்தது. இவ்வளவு ஆத்திரமும் முடவனின் கோபமாகப் புகைந்து அணைவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.  அண்ணா அவனைக் கண்டதும் தேம்பித்தேம்பி அழுதார். “ஸார்.வருத்தப்படாதீர்கள். நான் புண்ணில்கோல் இடுவதற்காக வரவில்லை. வாக்குத் தவறக்கூடாது என்று வந்தேன்” என்ற பரதேசி சொன்னான். அண்ணா சிறிது நேரம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். பெரிய முயற்சி செய்து பல்லைக் கடித்து, உதட்டைக் கடித்து, கண்ணைத் துடைத்து, துக்கத்தை அடக்கிக் கொண்டார். பரதேசி தலை குனிந்து நின்று கொண்டிருந்தான், ஐந்து நிமிஷம் ஆயிற்று. "ஒய் உம்முடைய வாக்குப்பலித்துவிட்டது” என்றார் அண்ணா. "என் வாக்காவது பலிப்பதாவது நடப்பது நடந்துதான் தீரும்” "நீர்தானே ஐயா சாபமிட்டீர்?" “என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்." "எப்படி?”

"எங்கும் இருக்கிறதுநாதம்கேட்கவா முடிகிறது. கைதட்டியோ, ஏதாவது செய்தோதானே.அதைக்கேட்கமுடிகிறது. அது மாதிரிதான்

 "உமக்கு வருங்காலம் தெரியுமா?" “தெரியாது என்னமோவாயில் வந்ததைச்சொன்னேன்.”

 "ம்.

நீர்பெரிய அறிவாளியாக இருப்பீர்போல் இருக்கிறதே. ஏன் இப்படிச்சோற்றுக்கு அலைகிறீர்?" "அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் செய்ய வேண்டுமா, என்ன? அறிவு இருந்தால்பிச்சைஎடுக்காமல்,சோற்றுக்குஅலையாமல்
இருந்துவிடமுடியுமா?"

 “நீர் சொல்வது எனக்குப்புரியவில்லை”

 “எப்படிப் புரியும்? பந்தியில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்குத் தைரியம் இல்லை. தெம்பு இல்லை. உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. இந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம் இல்லை. சிமின்டில், வலுவில்லாதது போல் தோன்றுகிறது. நீரைக் கலந்தால் அப்புறம் சம்மட்டி போட்டுத்தான் உடைக்கவேண்டும். உம்முடைய கல்நெஞ்சம்வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம்துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால், அது கம்பீரமாக நிற்கும். அத்தர் கலந்தாற்போலப் பரிமளிக்கும். உண்மையான வலு, உம் நெஞ்சுக்கு இல்லை. இருந்திருந்தால் பட்டப்பகலில் இரட்டைக் கொலை செய்த பாண்டிக்கு நீர்வக்காலத்து வாங்கியிருப்பீரா? அவன்கொலை செய்தது உலகறிந்த விஷயம்.நீர் சரமாரியாக வாதாடி, அவனுக்கு நீதியளிக்காமல் காப்பாற்றினர். உம்முடைய அகங்காரத்திற்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார்.ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப் பரதேசி, தரித்திரம்எல்லாவற்றையும் சேர்த்து உட்கார வைத்துக் காது நிறைய கண் நிறைய உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம், இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை."

அண்ணா சூன்யத்தைப்பார்த்துக்கொண்டு தேம்பினார். சற்றுக் கழித்து,"ஒய் காலதேவரே,உட்கார்ந்து பேசுமேன்.கால் வலிக்கவில்லையா?” என்று வேண்டினார். காலதேவன் வயிறு குழைய, கண் குழைய விலா எலும்புகளின் தோல் விம்ம, "ஈசுவரா” என்று பசியின் வடிவாக உட்கார்ந்து கொண்டான். கேட்டிருக்கிறார். மாகாணத்தின் எட்டு மூலையிலும் எங்கே சங்கீத சர்ச்சை நடந்தாலும் அண்ணா அங்கே இருப்பார் தலையின் முன். வழுக்கை பளபளக்க, ஒரு ராகத்தை பேச்சில்தான் விளக்கிக் கொண்டிருந்த மகாநாட்டில் பிரமாதமாக ஒரு அண்ணாவின் தலையை ஒருவர் கார்ட்டுனாக வரைந்திருந்தார். அது பெரிதாகி அண்ணாவின் ஆபீஸில் தொங்குகிறது.


அண்ணாவுக்கு யார் பாடினாலும் பிடிக்காது. அவருடைய லக்ஷ்ய சங்கீதத்தின் வாசற்படியைக்கூடத் தற்கால சங்கீத வித்வான் யாரும் மிதிக்கவில்லை என்பது அவர் கருத்து அவருடைய சொந்த ஊரான பூக்கால் குளத்தில் ஒரு பெண் நன்றாகப் பாடும் அதன் பாட்டைத்தான்.அவர் திருப்தியோடுகேட்பார் ஒன்றரை நூற்றாண்டு களுக்குமுன்வாழ்ந்த ஒருவாக்கேயக்காரரின்பேரனுடைய சிஷ்யனின் பெண் வயிற்றுப்பேத்தி அந்தப்பெண். அவள் இப்போது கல்யான மாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி ஹைதராபாத்தில் குடியும் குடித்தனமுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். கிருகப் பிரவேச வைபவத்திற்கு மாலையில் அவள்தான் கச்சேரி செய்யப் போகிறாள். ஹைதராபாத்திலிருந்து அதற்காகத்தான் அவள் வந்திருக்கிறாள்-அபஸ்வரம் என்ற வார்த்தையிலிருந்து எங்கெங்கோ போய்விட்டது.அபஸ்வரம் என்ன.அவச்சொல்கூட_அண்ணாகாதில் விழக்கூடாது.கல்யாணத்திற்குமுன்.கிருகப்பிரவேசத்திற்காகப்பந்தல் போட்டுக் கொண்டிருந்தான். காலை எட்டுமணி குமாஸ்தாக்கள் இன்னும் வரவில்லை..பிச்சைக்காரன் ஒருவன் வந்துசேர்ந்தான்.அந்த நிழலே அண்ணா வீட்டு வாசலில் விழக்கூடாது. ஆள் புதிது. துந்தனத்தை மீட்டிக்கொண்டு கருதியோடு இழைந்து கள்வியகுரலில் பாடிக்கொண்டுவந்தான்


"காஞ்சிமாபுரியில் வாழும் காமகோடிவாவா.வாங்கூைடியுடன் வந்தெனக்கு வரமருள வாவா, தற்பரம் அளிக்கும் திவ்ய கற்பகமே வா வா”


"ஏய் மறுபடியும்பாடு"

"காஞ்சிமாபுரியில்.வாங்க்ஷையுடன் வந்தெனக்கு." “என்னது?"

"வாங்க்ஷையுடன்."

"வாஞ்சையில்லை?”

"இல்லீங்க”

“ ஏன்”

“எங்க குருநாதன் அப்படித்தான் சொல்லிக்கொடுத்தாரு”

 “யாரு உங்க குருநாதன்?"

“முருகப்பண்டாரம்"

"எங்கே இருக்கார் அவர் இப்போ?”

"சமாதி ஆயிட்டாருங்க”

“போனாப் போறார்.நீ இனிமே வாஞ்சைன்னு சொல்லு'

"அவருவாங்க்ஷைன்னுதானே சொல்லுவாரு”

 "அப்ப உனக்கு அரிசி கிடைக்காது.”

“வேனாமே.”

"நீ வேணும்னுதான் கேட்டுப் பாரேன்-கிடைக்கிறதா பார்ப்போம்.”

"நீவேணும்னுதான் என்னைச்சொல்லச்சொல்லிப்பாரேன். நான் சொல்கிறேனா,பார்ப்போம்”

“சீ.சீ.நாயே! போ! பதில் பேசாதே" "நானா இப்போ வள்ளுவள்ளுனு உளுவறேன்?” போடான்னா”

"அட போய்யா, பிச்சைக்கு வந்த இடத்திலே சண்டைக்குல்ல நிக்கறே கச்சைகட்டிக்கிட்டு" என்று பந்தல்காரன் இடைமறித்தான்.


"போய்யா.போ.ஏங்க அந்த ஆளோடவம்பு? தக்கு பிக்குன்னு ஏதாவது உளறுவான்.நமக்கு என்னாத்துக்குங்க”

“குருநாதன் சொல்லிவிட்டானாம், அவன் சொல்ல மாட்டா னாம்!”

"ஆமாய்யா சொல்லத்தான் மாட்டேன். சொல்லு, மனுசன் உண்டாக்கினதுதான்.காக்காய்க்குக்கிளின்னுபேர் வச்சுநானூறுபேர் அளைச்சா கிளிதான். ஆமாம்”

"நீ இப்பப்போகமாட்டே? போய்யா.அப்புறம் தெரியுமா?" அப்போதுதான் நானும் வந்து சேர்ந்தேன். “ஏதோ தெரியாத பயல்’

“யாரு, அவனா?நீன்னா தெரியாத பயல் பாயின்ட் பாயின்டாப் பேசறான் தெரியாத பயலாம்.பிடிவாதக்காரப் பயன்னா அவன்'

"தொலையறான் அண்ணா:விடுங்கோ' அண்ணா வாழ்க்கை,வார்த்தை எல்லாவற்றிலும் நீதிபதி:ஆமாம்.

அண்ணா பந்தியைப் பார்த்துக்கொண்டேவந்தார்.திடீரென்று முகம் இருண்டது.புருவத்தைச்சுளித்தார்.மூக்கின் இதழ் விரிந்தன.

"ஏய், பஞ்சாமி”

"அண்ணா.”

"வா, இப்படி”

ஒடினேன்.

"யாரது”

“யாரது”

"எங்கே?"

“அதோ பார்!"

கூடத்தில் நடைநிலைக்கு எட்டியதாழ்வாரத்தில் போட்டிருந்த
பந்தியில் ஒரு பரதேசி உட்கார்ந்திருந்தான்.நடுப்பருவத்தைக் கடந்து கிழத்தனத்தில் கால் வைத்த பருவம் எலும்பும் தோலுமான உடல் அளவுக்கு மிஞ்சிய நரை கன்னம் முழுவதையும் மறைத்த தாடி ஒழுங்கில்லாத குரங்குத் தாடி பல பல பட்டினிகளால் வயதை மீறிய மூப்புத்தோற்றம் கண்ட தண்ணிரில் நனைத்துநனைத்துப் பழுப்பேறிய, மடித்துப்போன, ஒட்டுகள் போட்டவேட்டி பக்கத்தில் அதே பழுப்பு நிறத்தில் ஒரு மூட்டை இவ்வளவு காபந்துக்களுக்கிடையே, ராகுவந்து அமுதத்திற்கு அமர்ந்ததுபோல அமர்ந்துவிட்டான்.அமுதசுரபியை ஏந்தி வரும் மால் பூண்ட மோகினி வேடந்தான் மயங்கிவிட்டது: அண்ணாகூட ஏமாந்துவிடுவாரா.என்ன?

 “எப்படிடா வந்தான் அவன்” என்று இரைச்சல் போட்டார்.

மெளனத்தைத் தவிர வேறு விடை எதைச் சொல்ல? "

அழகா இருக்கடா நிர்வாகம் கிளப்புடா அந்தக் கழுதையை'

"உட்கார்ந்துவிட்டானே, அண்ணா” என்று மெதுவாகச் சொன்னேன்.

"அப்படியா, மன்னிக்கணும்' என்று ஒரே ஒட்டமாக ஓடினார். அந்த இலைக்கு முன் நின்றார். இருநூறு முகங்களும் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன.

"ஏய், எழுந்திர்றா"

அவன் வாய் பேசாமல் அவரை நிமிர்ந்து பார்த்தான். வாயில் போட்ட கறி உள்ளே செல்லாமல் அந்தரத்தில் நிற்க, எச்சிலான கை இலையில் இருக்க, அவரை மெளனமாகப்பார்த்தான். "எழுந்திருடா" மீண்டும் அதே தீனமான பார்வை.

“எழுந்திருடான்னா'

“பசிக்கிறது, எச்சில் பண்ணிவிட்டேன்."

அவ்வளவுதான்.

அப்படியே தலைமயிரை ஒரு லாவு லாவினார் அண்ணா. உடும்புப் பிடி!

"எழுந்திர்றாங்களேன்.பதில்சொல்லிண்டா உட்கார்ந்திருக்கே"

பிடித்த பிடியில், பரதேசியின் கை தானாகவே பக்கத்திலிருந்த மூட்டையை அனைத்துக்கொள்ள, காலும் தானாகவே எழுந்து விட்டது. இடது கையால் அப்படியே தர தரவென்று அவனைத் தள்ளிக்கொண்டு, நடையைக் கடந்து, வாசல் திண்ணையைக் கடந்து, ஆளோடியைக் கடந்து, படியில் இறங்கி, பந்தலுக்கு வெளியே ஒரு தள்ளுத் தள்ளினார் அண்ணா தலை அவிழ்ந்து அலங்கோலமாகக் குப்புறவிழுந்தான் அவன்.

"அப்பா, அம்மா, பாவி” என்று முனகிக்கொண்டே எழுந்தான். திரும்பி அவரைப் பார்த்தான். முகம் கொதித்தது. பசியின் எரிச்சல் கண்ணில் எரிந்தது.கைக்கு எட்டிவாய்க்குக்கூடத்துளி எட்டிபசியைக் கிளப்பிவிட்டு முழுவதும் கிட்டாமல் போனதன் எரிச்சல் முகத்தில் எரிந்தது. ஆற்றாமையும் கோபமும் தொண்டையை அடைக்கபசியால் மூச்சு வேகமாக சின்னச் சின்னதாகச் தொண்டையில் ஏறி இறங்கி, வயிறு குழைய, ஒரே கத்தாகக் கத்தினான் அவன்.

"ஒய் வக்கிலே, நீர் நன்னா இருப்பீரா? இலையில் உட்காந்து எச்சில் பண்ணினவனைக் கிளப்பி, யமது தன் மாதிரி தள்ளிண்டு வந்திரே”

"ஏய், போறயா,நொறுக்கி விடட்டுமா?"

கண் கனல் கக்க, சாணக்கியனைப்போல, விரிந்த குரலில் ஒர் இரைச்சல் போட்டான் அவன்.

"போறேன், இதோ போறேன், ஆனால் திரும்பி வருவேன். அடுத்தமாசம் இதே தேதிக்கு உம்மவீட்டிலேயே சாப்பிடவரேன்.நீர் அழுதுகொண்டு போடற சாப்பாட்டுக்கு வரேன். பார்த்துக்கும்.”

விறுவிறுவென்று நடந்தான். எனக்குச் சொரேர் என்றது.என்னமோ சொல்லிவிட்டானே! அண்ணா ரெளத்ரம் பொங்கச் சீறினார்,

"ஏய் போய் அந்தப் பயலை இழுத்துண்டுவாடா,சும்மாவிட்டு விடுகிறதா அந்தப்பயலை”

"அண்ணா, உள்ளே போங்களேன். சகதியிலே கல்லைத்துக்கி எறியலாமா? என்று.அவரை இறுகஅனைத்துஉள்ளே தள்ளிக்கொண்டு போனேன்.என் பிடியை மீறமுடியாமல் அண்ணா மெதுவாக உள்ளே சென்றார்.

என்ன அவச்சொல் ஆபாசமான வார்த்தைகள் மங்களமான வைபவத்தில் கேட்கவொண்ணாத கொடுர அவச் சொல் ருசிக்க முடியாத அவச்சொல் உதட்டில் வைத்துப் பருகும் பாலில் மேலே யிருந்து ஒரு துளிநஞ்சு விழுந்து,வாய்க்குள் போய்விட்டதுபோல் என் கண் இருண்டது; உள்ளம் இருண்டது. எப்படிப் பேசினான் இந்த வார்த்தைகளை!பாவி இனியநாதம்பொழியும் தந்தியை அறுத்து அவ ஓசையை எழுப்பிவிட்டான்.என் மனம் படபடஎன்று பறந்தது.

"எலே, உம் மூஞ்சிஏண்டா அசடுவழியறது. முட்டாள்:”

மாலையில் கச்சேரி நடந்தது. பூக்கால் குளத்துப்பர்வதம் பாடினாள். இனிய ஞானம். நல்ல ஞானம். ஆனால் மூன்று குழந்தைகளுக்குத் தாயார் என்பதைக் குரல் காட்டிக்கொண்டே வந்து, பாட்டைக்கூட மூன்றாம் தரமான பாட்டாக அடித்துவிட்டது. அண்ணா முன்னால் உட்கார்ந்து கைமேல் கையில் தாளம் போட்டு, விரலை எண்ணி, சிரக்கம்பம் செய்துகொண்டிருந்தார். இரண்டு மணிநேரம் ஆவதற்குள் இரண்டாயிரம் ஆஹாகாரம் வந்துவிட்டது. ஆட்டுகிற ஆட்டலில் தலை ஒடிந்து விழுந்துவிடும்போல் இருந்தது.அண்ணாவின் கற்பனை பயங்கரமானதுதான்.

 மணமகனும் மணமகளும் ஒரு சோபாவில் உட்கார்ந்து கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நடுவில் மணமகன் எழுந்து கொல்லை
நடைப்பக்கம் சென்றான்.

பத்து நிமிஷத்திற்கெல்லாம் அண்ணாவின் சம்சாரம் பரபர வென்று என்னைக் கூப்பிட்டாள்.

"ஏய் பஞ்சு, அண்ணாவைக்கூப்பிடு”

அண்ணாவும் நானும் உள்ளே போனோம். அடுக்களையில் கல்யாணப்பையன்பிரக்ஞைதவறிப்படுத்துக்கிடந்தான்.கொல்லையில் போனவன் ஒரு முறை வாந்தி எடுத்தானாம். பிறகு “தலை கிறுகிறு என்கிறது”என்று முனகினானாம்.அடுக்களையில்வந்து மடேர் என்று விழுந்தானாம். மூர்ச்சை போட்டுவிட்டது. ஸ்திரீகள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அண்ணாவின் தமக்கை விசிறிக் கொண்டிருந் தாள.

"குழந்தே குழந்தே' என்று அண்ணா அழைத்தார்.

"விஸ்வநாதா.விஸ்வநாதா” என்று நான் அழைத்தேன். நல்ல மூர்ச்சை, பதில் வரவில்லை.

"பஞ்சு, நான் என்னடா செய்வேன்” என்று உட்கார்ந்தவாறே என்னை நிமிர்ந்து பார்த்தார் அண்ணா.

திகில்படர்ந்த அந்தப் பார்வையை அந்த முகத்திலேயே நான் பார்த்ததில்லை. "ஒண்ணுமில்லேண்ணா! இதோ போய் டாக்டரை அழைச் கண்டுவரேன்.கவலைப்படாதிங்கோ”
என்று ன்சொல்லிவிட்டு ஓடினேன். டாக்டர் வந்தார். அரை மணி தட்டிக்கொட்டிப்பார்த்தார். ஊசி போட்டார். மருந்து எழுதிக் கொடுத்தார். மூர்ச்சை தெளியவில்லை. பெரிய டாக்டரை அவரேபோய் அழைத்து வந்தார்.கோமா சோமா என்று ஏதோ வைத்தியபாஷையில்பேசிக்கொண்டார்கள். என்னத்தைச் சொல்கிறது. மூர்ச்சைதெளியும் வழியாக இல்லை. ஒரே பேத்தல், பிதற்றல், ஏழெட்டு நாள் கண்திறக்கவில்லை. உள்ளூர் டாக்டர்கள், மந்திரவாதிகள் எல்லோரும் பார்த்தார்கள். திருச்சியி லிருந்து இரண்டு டாக்டர்கள், பிறகு ராஸிலிருந்து ஐந்தாறு டாக்டர்கள்! கடைசியாகக் கல்கத்தாவிலிருந்து விமானத்தில் ஒரு நிபுணர் வந்தார். கையைப் பார்த்தார்."இன்னும் நாற்பத்தெட்டுமணி நேரத்திற்குப்பிறகுதான் சொல்ல வேண்டும்; பிறகுமூர்ச்சைதெளிந்தால் கொடுங்கள்” என்று ஒரு மருந்தை எழுதிக்கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாய் பீஸையும்வாங்கிக்கொண்டுபோய்விட்டார்.

அவ்வளவு பெரிய டாக்டர் சொல்வது வீணாகவாபோய்விடும்? மூன்றாம்நாள் காலையில் எல்லாம் அடங்கிவிட்டது.

 எல்லாம் மாயாஜாலம்போல் இருந்தது எனக்கு எவ்வளவு வேகம் அண்ணாவின் ஒரே பிள்ளை ஒரே இன்பக்கனவு அவருடைய ஜகமே அவன்தான்.அது அழிந்துவிட்டது!

அண்ணாதேம்பினார். திடீரென்று நினைத்துக் கொண்டு வாய்விட்டு அழுவார். அழாத நேரத்தில் சூன்யத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். திடீரென்று புன் சிரிப்புச் சிரிப்பார்; பேய் சிரிக்கிறாற்போல் இருந்தது எனக்கு குலைநடுங்கிற்று!

“என்னடாபஞ்சாமி, என்ன சிரிக்கிறேனென்று பார்க்கிறாயா? நாளைக்குத் தேதி ஐந்து, அதனால்தான் சிரிக்கிறேன்.”

 நான்பதில் சொல்லவில்லை.சோகத்தில் சிரிக்கிறார்.அழுகிறார், புலம்புகிறார். இஷ்டப்படி பேசட்டும் என்று விட்டுவிட்டேன். பிரமையடைந்து, நிதானமிழந்து ஆடிக் கொண்டிருந்த சித்தத்தில் என்ன என்ன தோன்றுகிறதோ? மோகம் சோகத்தின் இரட்டை

"நாளைக்குத் தேதி ஐந்துடா.நாளைக்குத்தான் பன்னிரண்டாம் நாள் என் உயிர் போய் போன ஐந்தாம் தேதி கிருகப் பிரவேசம்.அந்தப் பரதேசிப்பயனவ்வளவுகணக்காக ஆணியடித்தாற் போலச் சொன்னான்,பார்”.

எனக்கு ஞாபகப்படுத்தத் தேவையில்லை. பரதேசியின் நினை வாகத்தான் இருந்தேன்.

மறுநாள் பன்னிரண்டாம் நாள் காலையில் ஈமக்கடன்கள் தொடங்குகிற சமயம் காலை எட்டு மணி இருக்கும், வாசலில் வந்து நின்றான் அவன் சவம் உயிர் பெற்று வந்ததுபோல் வந்து நின்றான். வெளுத்துப்போன தாடி, மீசை, எலும்பும் தோலுமான உடல் பழுப்பேறிய நைந்துபோனதுணி,கையில் மூட்டை கல்யாணத்தன்று வந்த அதேவேஷந்தான்.

எனக்கு ஒரேயடியாகப் பற்றிக்கொண்டு வந்தது. நெஞ்சு கோபத்தில் விம்மிற்று.ஒரே பிடியாகக் கழுத்தைப் பிடித்து அமுக்கித் திருகிப் போட்டுவிடலாமா என்று, கை நெஞ்சு எல்லாம் துடித்தன. ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.உள் மனம் நடுங்கிச் செத்தது. இவ்வளவு ஆத்திரமும் முடவனின் கோபமாகப் புகைந்து அணை வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.

அண்ணா அவனைக் கண்டதும் தேம்பித்தேம்பி அழுதார்.

“ஸார்.வருத்தப்படாதீர்கள்.நான் புண்ணில்கோல் இடுவதற்காக வரவில்லை. வாக்குத் தவறக்கூடாது என்று வந்தேன்” என்ற பரதேசி சொன்னான்.

அண்ணா சிறிது நேரம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். பெரிய முயற்சி செய்து பல்லைக் கடித்து, உதட்டைக் கடித்து, கண்ணைத் துடைத்து, துக்கத்தை அடக்கிக் கொண்டார். பரதேசி தலை குனிந்து நின்று கொண்டிருந்தான், ஐந்து நிமிஷம் ஆயிற்று.

"ஒய் உம்முடைய வாக்குப்பலித்துவிட்டது” என்றார் அண்ணா.

"என் வாக்காவது பலிப்பதாவது நடப்பது நடந்துதான் தீரும்”

"நீர்தானே ஐயா சாபமிட்டீர்?"

 “என் பசி சாபமிட்டது. ஆனால் இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்."

 "எப்படி?”

"எங்கும் இருக்கிறதுநாதம்கேட்கவா முடிகிறது. கைதட்டியோ, ஏதாவது செய்தோதானே. அதைக்கேட்கமுடிகிறது. அது மாதிரிதான்

"உமக்கு வருங்காலம் தெரியுமா?"

 “தெரியாது என்னமோவாயில் வந்ததைச்சொன்னேன்.”

 "ம்.நீர்பெரிய அறிவாளியாக இருப்பீர்போல் இருக்கிறதே. ஏன் இப்படிச்சோற்றுக்கு அலைகிறீர்?"

"அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் செய்ய வேண்டுமா, என்ன? அறிவு இருந்தால்பிச்சைஎடுக்காமல்,சோற்றுக்குஅலையாமல் இருந்துவிடமுடியுமா?"

“நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை”

“எப்படிப் புரியும்? பந்தியில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்குத் தைரியம் இல்லை.தெம்பு இல்லை.உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. இந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு:உம்மிடம் இல்லை.

சிமின்டில்,வலுவில்லாதது போல் தோன்றுகிறது. நீரைக் கலந்தால் அப்புறம் சம்மட்டி போட்டுத்தான் உடைக்கவேண்டும்.உம்முடைய கல்நெஞ்சம்வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம் துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால், அது கம்பீரமாக நிற்கும். அத்தர் கலந்தாற்போலப் பரிமளிக்கும். உண்மையான வலு, உம் நெஞ்சுக்கு இல்லை. இருந்திருந்தால் பட்டப்பகலில் இரட்டைக் கொலை செய்த பாண்டிக்கு நீர் வக்காலத்து வாங்கியிருப்பீரா? அவன் கொலை செய்தது உலகறிந்த விஷயம்.நீர் சரமாரியாக வாதாடி, அவனுக்கு நீதியளிக்காமல் காப்பாற்றினர். உம்முடைய அகங்காரத்திற்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார்.ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப்பரதேசி, தரித்திரம் எல்லாவற்றையும் சேர்த்து உட்கார வைத்துக் காது நிறைய கண் நிறைய உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம், இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை."

அண்ணா சூன்யத்தைப்பார்த்துக்கொண்டு தேம்பினார். சற்றுக் கழித்து,"ஒய் காலதேவரே,உட்கார்ந்து பேசுமேன்.கால் வலிக்கவில்லையா?” என்று வேண்டினார்.

 காலதேவன் வயிறு குழைய, கண் குழைய விலா எலும்புகளின் தோல் விம்ம, "ஈசுவரா” என்று பசியின் வடிவாக உட்கார்ந்து கொண்டான்.

நன்றி: rrn.rrk.rrn@gmail.com





Dec 13, 2012

'எதற்காக எழுதுகிறேன்' - தி.ஜானகிராமன்

சென்னையில் 08.04.1962ல், 'எதற்காக எழுதுகிறேன்' என்ற தலைப்பில் நடந்த எழுத்தாளர் கருத்தரங்கில் தி.ஜானகிராமன் வாசித்த கட்டுரை. – எழுத்து - மே 1962

ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகி றாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடு கிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று ஜிஹ்வா சாபல்யத்தினால் சாப்பிடுகி றோம். சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத் துக்கொள்ளப் போகிறார்களே என்று சாப்பிடுகி றோம். சில பேர் சாப்பிடுவதாற்காகவே சாப் பிடுகிறார்கள். ருசி, மணத்தைக் கூடப் பாராட்டாமல் சாப்பிடுகிறார்கள். நம் நாட்டு அரசியல் பிரமுகர் ஒருவர் அமெரிக்கத் தூத ராலய விருந்து, உடனே கவர்னர் விருந்து, உடனே ராமநவமி உத்சவச் சாப்பாடுthija-logo மூன்றையும் ஏழிலிருந்து எட்டு மணிக்குள் சாப்பிடுவார். இத்தனை காரணங்கள் எழுத்துக்கும் உண்டு - அதாவது நான் எழுதுகிறதற்கு.

*

பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக் கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாக்ஷிண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று தெரியாமல் - இப்படி பல மாதிரியாக எழுதுகிறேன். சில சம யம் நாடகத் தயாரிப்பாளர் சொல்லுகிறார் - ஒரு பிரமிப்பு, ஒரு தினுசான தாக் குதல் ஏற்படுத்த வேண்டும்; பார்க்கிறவர்கள் மனதில் என்று- சரி என்று சொல் கிறேன். கடைசியில் பாக்கும்பொ ழுது, இத்தனை காரணங்களும் அல்லாடி அலைந்து மூன்று கழிகளில் பிரிந்து விழுந்துவிடுகின்றன. எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும் - இந்த மூன்று தினுசு தான் கடைசியாக உண்டு என்று தோன்றுகிறது. இந்த மூன்றும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே எழுத்தில் இருக்கிறாற் போல சில சமயம் ஒரு பிரமை ஏற்படலாம். அது பிரமைதான். உண்மையில்லை.

*

இரவு எட்டு மணிக்குக் காய்கறி வாங்கும்பொழுது, நேற்றுமாலையில் வந்தது, இன்று காலையில் வந்து இன்று முழுவதும் வெயிலில் காய்ந்தது, இன்று மாலை வந்தது மூன்றும் ஒரே குவியலாகக் கிடக்கும். ஆனால் சற்று உற்றுப் பார்த்து, தொடாமல்கூட, கலந்துகட்டி என்று கண்டுபிடித்து விடலாம்.

*

எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப் பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் சொல்ல முடியும்? விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போ தல், வேதனை - எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு - எல்லாம் அதில் இருக்கின்றன. கண்யநஷ்டம், பாபம் பாபம் என்று மூலை யில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனச்சாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள், - இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறு கிற பிடிவாதம், வெறி, அதாவது ஆனந்தம் - எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்குப் பணியாதவர்களைக் கண்டு நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.

*

சரி எனக்கே எனக்காக எழுதும்பொழுது என்ன எழுதுகிறேன்? எப்படி எழுதுகிறேன்? என்ன எழுத வேண்டும் என்று எனக்கு நானே உபதேசம் செய்து கொள்கிறேனோ? பசியே தொழிலாகக் கொண்டிருக்கிற ஏழைகளைப் பற்றி, பிச்சைக்காரர்களைப் பற்றி, பாட்டாளிகளைப் பற்றி, விருப்பமில்லாமல் வழுக்கி விழுந்த பெண்களைப் பற்றி, பள்ளிக்கூடம் போக முடியாமல், பிண ஊர்வலத்தில் நடனம் ஆடிக்கொண்டு போகிற குழந்தைகளைப் பற்றி, விருப்பமில்லாமல் திருட நேர்ந்தவர்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று வகுத்துக் கொள்கிறேனா? இதையெல்லாம் எழுதி, உன்னைச்சுற்றி சாக்கடை தேங்கிக்கிடக்கிறது... ஏன் பார்க்கவில்லையென்று சமுதாயத்தைப் பார்த்துக் கோபித்துக் கொள்ள சங்கற்பிக்கிறேனா? அல்லது குடும்ப உறவுகள், உணர்ச்சிகள், கலைஞர்கள், பெரிய உத்தியோஸ்தர்கள், நடுவகுப்பு, உயர்வகுப்பு மனிதர்கள், அவர்களுடைய ஆச்சாரங்கள், சீலங்கள், புருவம் தூக்கும் பாங்கு, கண்ணிய வரம்புகள், மேல்பூச்சுகள், உள்நச்சுகள் இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொள்கிறேனா? அல்லது சிம்ம விஸ்ணு, கரிகாலன், ராணாப் பிரதாப், வல்லவ சேனன், அலெக்ஸாண்டர் - இவர்க ளைப் பற்றி எழுதி பழையகாலத்தை மீண்டும் படைக்க வேண்டும், இன்றைய மனிதனின் மூதாதையரின் நற்குண, துர்குணங்கள், இவற்றையெல்லாம் எழுதி சரித்திரக் கொள்கைகளையோ சித்தாந்தங்களையோ வகுத்து நிலைநாட்ட வேண்டும் என்று எழுதும்பொழுது திட்டம் போட்டுக் கொள்கிறேனா?

*

எனக்கே எனக்காக எழுதும் பொழுது இந்தப் பிடுங்கல்கள் ஏதும் என்னைத் தொந்தரவு செய்வதில்லை. நான் இத்தனை பெயரைப் பற்றியும் எழுதினாலும் எழுதுவேன், எழுதாமலும் இருப்பேன். யாரைத்தெரியுமோ அவர்களைப்பற்றி எழுதுவேன். அதாவது அவர்கள் அல்லது அதுகள் என்மனதில் புகுந்து, தங்கி, அமர்ந்து என்னைத் தொந்தரவு பண்ணினால் எழுதுவேன். தொந்தரவு தாங்க முடியாமல் போனால்தான் எழுதுவேன். நானாகத் தேடிக் கொண்டு போய் 'உன்னைப் பற்றி எழுதுவதாக உத்தேசம்' என்று பேட்டி காணமாட்டேன் - அப்ஸர்வ் பண்ணமாட்டேன். அவர்களாக, அதுகளாக வந்து என்னைத் தாங்கினால்தான் உண்டு. அதனால்தான் எனக்கு எழுதுவதற்காக யாத்திரை பயணங்கள் செய்வதில் உற்சாவம் கிடையாது. அதைவிட காதல் செய்து பொழுதைப்போக்கலாம்.(என்ன காதல் என்று நிர்ணயித்துக் கொள்வது என்னுடைய இஷ்டம், வசதியைப் பொறுத்தது.)

*

அப்படியென்றால் நீர் எழுதுவதற்காகப் பயணம் செய்வதில்லையா என்று யாராவது கேட்டால்? ம்....செய்கிறதுண்டு. அது உங்களுக்காக, உங்களுக்கும் எனக்குமாக எழுதும்பொழுதுதான். அதனால் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம், ஏமாளிகளைப் பிரமிக்க அடிக்கலாம் என்று தோன்றினால் செய்வதுண்டு. நடுநடுவே அல்ப சந்தோசங்கள் படுவதில் தப்பொன்றுமில்லை.

*

ஆக, எனக்குத் தெரிந்தவர்களையும், தெரிந்ததுகளையும் பற்றி எழுதுகிறேன்.... அல்லது என் கண்ணிலும் மனதிலும் பட்டவர்களையும் பட்டவைகளைப் பற்றியும் எழுதுகிறேன். சிலசமயம் என்ன அம்மாமி பாஷையாக இருக்கிறதே என்று சிலர் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய அம்மாமிகளைத்தான் எனக்கு அதிகமாகத் தெரியும். ஆத்தாள்களைப் பற்றி ஏதோ சிறிதளவுதான் தெரி யும். தெரிந்த விகிதத்துக்குத்தான் எழுத்தும் வரும்.

*

எதற்கு எழுதுகிறாய் என்று கேட்டதற்கு, என்ன எழுதுகிறேன் என்று சொல்வ தா பதில் என்று யாராவதுகேட்கலாம். எனக்காக என்று சொல்லும் பொழுது, என்ன, எப்படி இரண்டும் சொல்லத்தான் வேண்டும் என்று முன்னாலேயே சொல்லிவிட்டேன். மறு படியும் சந்தேகம் வரப்போகிறதே என்பதற்காக ஞாபக மூட்டினேன்.

*

எப்படி என்ற கேள்விக்குப் பதில் சொல்லுவதுகூட அவ்வளவு கடினமில்லை, ஏனெனில் எனக்காக எழுதுவது சொல்பம்தான். எழுதுகிறது என்னமோ அதிகம் தான். கூலிக்கு மாரடிப்பதும், கோயில் மேளம் வாசிப்பதும் நிறைய உண்டு. ஆனால் அது என்றும் சொந்தத்திற்கு என்று எழுகிற எழுத்தைப் பாதிப்பதில் லை என்று நிச்சயமான உணர்வு இருக்கிறது. கூலிக்கு மாரடித்தால், மார்வலி யோ சோர்வோ இருந்தால்; வலியடங்கிக் சோர்வகன்ற பிறகு அதுவும் அவசியமானால் முடிந்தால் எழுதுகிறதே தவிர, வலியோடும் சோர்வோடும் எழுதுகிறது கிடையாது. எவனாவது எழுதுவானோ அந்த மாதிரி! எழுதத்தான் முடியுமா? திரானி எங்கே இருக்கும்?

*

எப்படி எழுதுகிறேன் என்று சொல்வதைவிட எப்படி எழுத ஆரம்பிக்கும் நிலைக்கு வருகிறேன் என்று சொல்வதுதான் இன்னும் பொருந்தும். புகையிலையை மென்றுகொண்டு சும்மா உட்கார்ந்து மனம் சுற்றி ஒன்றை முற்றுகையிடுகிற, வழிகாணாமல் தவிக்கிற, வழி காணப் பறக்கிற ஆட்டங்களைப் பார்த்துக் கொண்டே உட்காந்திருக்கிறேன். சாப்பிடும் பொழுது வேறுவேலைசெய்யும் பொழுது, வேறுஏதோ எழுதும்பொழுது, யாருடனோ பேசும்பொழுது இந்த அமர்க்களமும் தவிர்ப்பும் நடந்துகொண்டுதானிருக் கின்றன. நடப்பது தெரிகிறது. வழி தெரிந்ததும் எழுதமுடிகிறது. அவ்வளவுக்கு மேல் அதைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை.

*

கலை வடிவத்துக்கும் எனக்காக எழுதுவதற்கும் என்ன சம்பந்தம்? எனக்காக எழுதுவது எல்லாம் கடைசல்பிடித்த கலைவடிவம் கொண்டிருக்க வேண்டுமா? அவசியம் இல்லை. கலைவடிவம் என்பது தவத்தையும், அதன் தீவிரத்தையும் பொறுத்தது. அந்த முனைப்பு சிறு நொடியிலோ, பல வருடங்களிலோ சாத்தியமாகலாம். காலம் முக்கியம் என்றாலும் அவ்வளவு முக்கியமில்லை. உணர்வின் அனுபூதியின், அமுங்கி முழுகுவதின் தீவிரத் தன்மைதான் முக்கியமானது. இது எனக்காக எழுதும் எழுத்திலும் சாத்தியம். உங்களுக்காக எழுதும் எழுத்திலும் சாத்தியம். எனக்காக எழுதும் எழுத்தில் கலைவடிவம் சில சமயம் மூளியாகவோ, முழுமை பெறாமலோ, நகாசு பெறாமலோ இருக்கலாம். ஆனால் அதுதான் அதன் வடிவம். அதாவது மூளியும் முழுமையில்லாததும் அதனுடைய ஒரு அம்சம்.

*

கூலிக்காக நான் எழுதும் எழுத்திலும் அல்லது உங்கள் சந்தோஷத்துக்காக நான் எழுதும் எழுத்திலும் கலைவடிவம் என்ற ஒன் றைக் கொண்டுவந்துவிட முடியும். இங்கு கலை வடிவம் என்பது பயிற்சியின், சாதகத்தின் ஒரு விளை வாகப் பரிணமித்து விடுகிறது. இந்த இடத்தில்தான் ஒரு முக்கியமான வேற்றுமை தோன்றுகிறது. கலைக்கும் நுண் தொழிலுக்கும் உள்ள வேற்றுமை அது. சில சமயம் நான் செய்கிற நுண் தொழிலைக் கண்டு கலைவடிவம் என்று தப்பாகப் புரிந்து கொண்டு விடுபவர்கள் உண்டு. அப்படிச் சொல்லி என்னையே ஏமாற்றப் பார்ப்பார்கள்.

*

ஆனால் எனக்குத் தெரியும் எது கொம்பில் பழுத்தது, எதை நான் தடியால் அடித்து குடாப்பில் ஊதிப்பழுக்க வைத்திருக்கிறேன் என்று. எனக்காக நான் எழு தும் போது, கொம்பில் பழுத்த பழம். நான் பண்ணிய தவத்தின் முனைப்பில் பழுத்த பழம் அது. என் தவம் எத்தனைக்கெத்தனை தீவிரமாக ஒன்றிப்பிலும் தன் மறப்பிலும் கனிந்து எரிகிறதோ அப்போது வடிவம் தானாக அமைந்து விடும். அது சிலசமயம் மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்கலாம். ஆனால் பூப்புநிலையில் பூவில் இட்ட முட்டை வண்டாக வளர்கிறமாதிரி, அதை நான் தடுத்திருக்கமுடியாது. அந்த ஒரு கறுப்பு, கசப்பு எல்லாம் அதன் அம்சம். தவிர்க்க முடியாத நிலையில் எழுதப்பட்ட விதி. இந்தக் கனிவில்தான், இந்த தவத்தில்தான் என் சுயரூபம் எனக்குத் தெரிகிறது. என்னுடைய உள்பிரபஞ்சத்தில் உள்ளதெல்லாம் மேலே மேலே இருள் நீங்கி என் சிந்தைக்கும் உணர்விற்கும் புலனாகிறது. என் தவம் மிக மிக, மேலும் மேலும் என் சுயரூ பம் எனக்குத் தெரியும். அதற்கு வளர்ச்சி என்றோ மாறுதல் என்றோ பெயர்களிட நான் விரும்பவில்லை.

*

இந்தக் கலைவடிவம்தான் வடிவம். இதை ஒரு மரச்சட்டமாகச் செய்து இறுகச் செய்துவிடுகிறார்கள் இலக்கியச் சட்டம் சேர்க்கிற தச்சர்கள். அதை வைத்துக் கொண்டு பிறகு வரும் கலைவடிவங்களையும் பிறருடையவற்றையும் அதிலே பொருத்திப் பார்க்கிறார்கள். தானே வடித்த வடிவத்தை, சட்டத்தில், திருவாசியில் அடைக்க முடியாது. இப்படி அடைத்து, சமஸ்கிருத நாடகத்தை வளரவிடாமல் அடித்த ஒரே பெருமை தச்சர்களுக்கு உண்டு. சமஸ்கிருத நாடகம் சூம்பிப் போனதற்கு, பல காரணங்களில் இதுவும் ஒன்று.

*

அதற்காகத்தான் மீண்டும் சொல்கிறேன். கலைவடிவம் என்னுடையது. என் தவத்தின் பெருமையைப் பொருத்தது. மூளியும் அதன் பெருமை. சட்டம் போட்டு என்னைப் பயமுறுத்தாதீர்கள் என்று. நான் உங்களுக்காக எழுதுகிறதைப் பற்றி நீங்கள் அந்தத் தீர்ப்பெல்லாம் சொல்லலாம். நான் கவலைப்பட வில்லை. வாலைப் போட்டுவிட்டு பல்லியைப் போல் தப்பிவிடுவேன்.

*

நன்றி: தி.ஜானகிராமன்/ நினைவோடை - சுந்தரராமசாமி.

தட்டச்சு & வடிவம்: தாஜ்

Apr 1, 2012

அம்மா வந்தாள்-தி. ஜானகிராமன்

அம்மா வந்தாள் நாவலின் சிறு பகுதி

பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை. கார் ஓடுகிறது. குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது. எருமை ஓயாமல் கத்துகிறது. கடல் இரவெல்லாம் சீறுகிறது. கூர்க்காக்காரன் தடியால் இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான். கொளகொளவென்று குழாய் நீர் குறை சொல்லிt_janakiraman_2க் கொண்டேயிருக்கிறது. எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான். அப்பா மொலு மொலு வென்று வேதமோ சுலோகமோ சொல்லிக்கொண்டு சுவாமியைக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டே யிருக்கிறார். அண்ணா வழக்கம் போல உச்ச ஸ்தாயியில் ட்யூசன் சொல்லுகிறான். தெருவில்   எங்கெங்கோ கிடக்கிற ஏழெட்டு நாய்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு - ஒன்று கூடி - கச்சேரியின் மிருதங்கம், பானை டோலக்கு, கஞ்சிரா, கொன்னக்கோல் எல்லாரும் சேர்ந்து சண்டை போடுவார்களே... அதுபோல், ஒன்றின்மேல் ஒன்று விழுந்து கட்டுப் பட்டாசுப்போல வெடிக் கின்றன. சை சை என்று யாரோ கத்துகிறார்கள். ஒரு நாய் உயீ உயீ என்று அழுதுகொண்டே ஓடுகிறது. பொட்டென்று கச்சேரி ஓய்ந்துவிட்டது; இருந்த இடம் தெரியவில்லை. அடுத்த வீட்டு கார்ப்பரேஷன் பில் கலெக்டர் சேர்ந்தாற்போல நாற்பது ஐம்பது தும்மல் போடுகிறார். நாலு நாள் வட்டம்; அவருக்கு அது ஒரு கணக்கு.

ஆனால் நிசப்தமாகத்தான் இருக்கிறது. அப்பு மறந்து போகமாமலிருப்பதற்காக காலையிலும் பகலிலும் வேதம் சொல்லிக்கொண்டே இருப்பான். அப்போதெல்லாம் அவனுக்கு நிசப்தமாகத்தான் இருக்கும். இரவில் மனதுக்குள் சொல்லிக் கொண்டேயிருப்பான். அப்போதும் அவனுக்கு நிசப்தமாகத்தானிருக்கும்.

விடியற்காலையில் எழுந்து விடுகிறான் அவன். குளிக்கிறான். ஓதுகிறான். மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வருகிறான். பஸ் ஏறி மாம்பலம் போகிறான். ஓய்வெடுத்துக்கொண்ட ஒரு என்ஜினீ யரின் வீட்டுக்குப் போகிறான். ஒரு ஏழெட்டுப் பேர் வருகிறார்கள். வயதானவர்கள். ஆனால், தளதள வென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுக்கிறான். அர்த்தமும் சொல்லு கிறான். பத்து மணி சுமாருக்கு வீடு திரும்புகிறான். மீண்டும் தானே சொல்லுகிறான். காலையில் போலவே மாலையில் இன்னொரு நாலு கிழவர் களுக்கு ஒரு பள்ளிக்கூடக் கட்டிடத்தில் பாடம். அது வாரம் நான்கு நாள். மற்ற நாட்களில் பீச்சில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பான். அங்கே கடல் இரைகிறது. கூட்டம் மொணமொணவென்று முனகு கிறது. இத்தனையும் நிசப்தமாகத்தான் இருக்கிறது.

ஆனால், அம்மாவைப் பார்க்கும்போது, அப்பாவைப் பார்க்கும்போது, சிவசுவைப் பார்க்கும்போது, அந்த நாய்க்கச்சேரிக்கு மேலே காதில் ஒரு இரைச்சல் - அம்மாவை எப்போதும் பார்க்கும்போது இல்லை. அப்பாவை எப்போதும் பார்க்கும் போதுமில்லை; சிவசு வந்துவிட்டுப் போகும் நாட்களில்தான் - அல்லது, அவன் நினைவு வரும் பொழுதுகளில்தான்.

திடுதிப்பென்று சிவசுவின் குரல் சில நாட்களில் பிற்பகல் நேரத்தில் கேட்கும். ஒரு ஐந்து நிமிஷம் கேட்கும். ஒரு நாள் மாடி அறைக்குள்ளேயே கேட்டது. அன்று அப்பு முழங்கை மீது தலை வைத்து, பெஞ்சின் மீது சுவர்ப்பக்கம் திரும்பி, கண்ணை மூடி ஒருக்களித்திருந்தான்.

''ஓகோ, சார் படுத்திண்டிருக்காரா!'' என்று குரல் கேட்டது. அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் சிவசுவின் முதுகும் பின் தலையும் மாடிப்படியில் இறங்குவதுதான் தெரிந்தன. அப்புவுக்கு உடலில் நடுக்கம் எடுத்தது. ''போ வெளியே'' என்று தொண்டை கிழிய, நெற்றி நரம்பு புடைக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. கீழே சிவசு சிரிப்பது கேட்டது. காதில் இரைச்சலெடுத்தது. விரலைக் காதுக்குள் விட்டு அடைத்துக்கொண்டான். ஆனால் இரைச்சல் அடங்கவில்லை. மார்புக்குள் ளெல்லாம் புரையோடி விண்விண் என்று புண்ணின் நோவாக மோதிக் கொண்டேயிருந்தது. விறுவிறு வென்று கீழே இறங்கினான். சிவசு ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பது போலிருந்தது. தூணோரமாக அம்மா நிற்கிறாள். அதைப் பார்க்காமலேயே, முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டே விறுவிறுவென்று நடையைக் கடந்து, ஹைரோடில் ஏறினான். அப்பாடா! என்ன இரைச்சல்! என்ன சந்தடி! எத்தனை பஸ்கள்! எத்தனை கார்கள்! கார்ப்பரேஷன் குப்பை வண்டிகள் ஒரு வரிசை - பெரிய பெரிய மாடுகளுடன் லொங்கு லொங்கென்று கடகடவென்று வருகின்றன. 'எங்கோ கடையிலிருந்து வரும் நாடகக் கூச்சலும், ஒரு தட்டான் கடைச் சத்தியடியலும் சேர்ந்து கொள்கின்றன. ட்ர் ட்ர் ட்ர் ட்ர் என்று ஒரு மோட்டார் சைக்கிள் அ
ழுதப் பேரிரைச்சலுடன் கடந்து ஓடுகிறது. பால், தேன் - இன்னும் சொல்ல முடியாத இனிமைகளாக எல்லாம் காதில் வந்து ஊற்றுகின்றன. பைக்ராப்ட்ஸ் சாலையில் திரும்பி, பீச்சை நோக்கி நடந்தான் அப்பு. பழக்கூவல்! பூக்கூவல்! லாரிகள்! ஒரே அமுதப் பொழியலாகப் பொழிகிறது! வெயில் வேறு தோலைப் பிழிகிறது. பீச்சு நெருங்குகிறது. நிமிர்ந்து கல்லூரி கடிகாரத்தைப் பார்த்தால் மணி மூன்றரை தானாகிறது. கடற்கரை மணல் பரப்பு சூன்யமாகக் கிடக்கிறது. இருந்தாலும் சாலையைக் கடந்து நகர்ந்து ஒரு மரத்தினடியில் பெஞ்சு மீது உட்கார்ந்து கொண்டான் அவன். மெளனமாகத் துள்ளி விழுந்த கடல் இப்போது லேசாக இரைந்துகொண்டே விழுகிறது.

இங்கே வந்து உட்கார்ந்த பிறகுதான் தெரிகிறது. இங்கு வந்தும் பயனில்லை. இறுக மூடியிருந்த கதவைத் திறந்துவிட்டாற்போல காதில் திடீரென்று மீண்டும் சத்தம் கேட்கிறது. மனதுக்குள் அப்பா நின்று கொண்டிருக்கிறார். அப்பாவை நினைக்கும்போது இந்த இரைச்சலே அறுவறுப்பே மணியமாகப் போய் விட்டது. அவர் நேரே இருக்கும்போது வருவதில்லை. அவரோடு பேசும்போது வரவில்லை. அவரோடு சேர்ந்து வேதம் ஓதும்போது வரவில்லை. அவர் வேதாந்த பாடம் நடத்தும்போது நாலைந்து நாள் போய், அவனும் இருந்து கேட்டான். அவருடைய தர்க்க மூளை, வக்கீல்களுக்கும் ஜட்ஜுகளுக்கும் சமமாக ஈடு கொடுப்பதையும், சில சமயம் மீறிக்கொண்டு ஓங்கி வெற்றிக் களிப்புடன் ஒரு படி உயர்ந்து நிற்பதையும் பார்த்திருக்கிறான்; கர்வப்பட்டிருக்கிறான் - எங்கப்பா எங்கப்பா என்று. 'உங்களைப்போல் கார் இல்லாவிட்டால் என்ன, தோட்டம் இல்லாவிட்டால் என்ன, தோய்த்து உலர்த்திக் கசங்கிய அரைக்கைச் சட்டையைப் போட்டுக் கொண்டிருந்தால் என்ன, முக்கால் பழுப்புப் பஞ்சகச்சம் கட்டியிருந்தால் என்ன? எங்கப்பாவுக்கு உங்கள் எல்லாரையும் ஒரு நிமிஷம் மட்டிகளாகப் பார்க்க முடியும்' என்று உள்ளுக்குள் சிரித்துக் கொள்ளுவான். ஒரு நாள் அந்த அரை நிமிஷ மட்டிகளைக் கடிந்து, அவர் மண்டையில் போட்டுக் கொள்வதைப் பார்த்து வெதறிப் போய், சிரிப்பை அடக்கிக் கொண்டான்... அவரோடு நாலைந்து தடவை விடியற்காலையில் பேசிக் கொண்டே உலாவ இங்கெல்லாம் வந்திருக்கிறான். அப்போதெல்லாம் இல்லாமல், இப்படித் தனியாக உட்கார்ந்து அவரை நினைக்கும்போது மட்டும் இப்படி உள்ளே புகையும் அனலுமாக எரிவானேன்?

அம்மா அவனை உட்கார்த்தி வைத்து இரண்டு நாள் மூன்று நாளைக்கு ஒரு முறை - இரண்டு வாக்கியம் கனம் சொல்லுடா கேக்கறேன்'', ''குழந்தே! கணீர்னு ஏதாவது சொல்லேன் கொஞ்சம்'' என்று கேட்பாள். தொண்டையை கனைத்துக்கொண்டு அவன் தொடங் குவான். அவள் முகம் மாறுவதைக் காணும்போது, சொல்லக்கூட ஓடாது. அதில் ஏதோ வெளிச்சம் வந்து படர்கிற மாதிரி இருக்கும். ஒரு நூறு வெள்ளை ரோஜாப் பூக்கள் வந்து லேசாக அசைந்து கொடுப்பது போலிருக்கும். கண்ணை மூடிக் கொண்டிருப்பாள் அம்மா. திடீர் என்று அதில் முத்து முத்தாகப் பனி வழிகிற மாதிரி... என்ன இது... அம்மா கன்னத்தில் நீர்தான் ஓடுகிறது.

''என்னம்மா?'' என்று நிறுத்தியவுடன் கேட்பான்.

''என்னமோடா குழந்தை. நீ சொல்ற போதெல் லாம் தாங்க முடியாம ஆயிடறதுடா இப்படி... யாருதான் இதையெல்லாம் பண்ணினாளோ!''

''பண்ணவாவதும்மா! வேதத்தை யாரும் பண்ணலே. ரிஷிகள் கண்டது அது. ஆகாசத்திலே அந்த தத்துவங் கள் எல்லாம் சூக்ஷ்மமா கண்ணுக்குத் தெரியாம, புத்திக்குத் தெரியாம இருக்கும். ரிஷிகள் தியானம் பண்றபோது தபஸ் பண்றபோது, ஒண்ணு ரண்டு அவா கண்ணிலே படும். அப்படியே நாக்கிலே சப்தமா மாறிவரும். நீ இப்ப இருக்கே பாரு. இந்த மாதிரி இப்படியே ரொம்ப தூரம் உள்ளுக்குள்ளே இறங்கி இறங்கிப் போயிருப்பா அப்ப வந்து, ரண்டு மூணு, பூ பூத்தாப்பல தெரியும். அதைப் பறிச்சிண்டு வந்துடுவா. யாரும் பண்ணலேம்மா. அது அங்கேயே இருக்கு.''

''ஆமாண்டா அப்பாக் கூடச் சொல்லியிருக்கா'' என்று தலைப்பால் கன்னத்தைத் துடைத்துக் கொள்வாள் அம்மா.

அந்த அம்மாவை இப்போது நினைக்கும்போது ஏன் இப்படி இரைச்சலும் புகையுமாகக் காதிலும் உள்ளிலும் மூச்சடைக்கிறது! ஆனால் அப்பாவை நினைக்கும்போது அது இன்னும் தாங்க முடியவில்லை. அப்பா ஏன் இப்படி இருக்கிறார் - ஒன்றையும் கவனிக்காமல் ஏன் வீட்டை விட்டு ஓடவில்லை? சன்யாசி ஆகவில்லை? ஏன் அவள் பொங்கிப் போட்டச் சோற்றை அவள் கையால் தின்றுகொண்டே கிடக்கிறார்! சுசிருசியாக இல்லாதவர்களின் கையால் இட்டச் சோறு நம்மையும் அழுக்காக, கரியாகத்தானே செய்யும்! பிருஹந்தனை மாதிரி, சிகண்டி மாதிரி ஆகிவிட்டாரா அப்பா! ஆனால் பிருஹந்தனை கூட பின்னலைத் தொங்க விட்டுக் கொண்டு யுத்த களத்தில் சரமாடிச் சின்னாப்பின்னப் படுத்தினாளே...!

பொழுது நன்றாக இறங்கிவிட்டது. கடற்கரை மணல் முழுவதும் நட்சத்திரங்களைப் போல் மனிதர்கள் முளைத்துக் கிடந்தார்கள். அப்பு எழுந்து அலையண்டை போனான். தெற்கு நோக்கி நீள நடந்தான். ஈர மணல், நண்டுகள் அவனைக் கண்டதும் அப்படி அப்படியே மணலுக்குள் புதைந்து ஒழிந்தன. முன்னும் பின்னும் நகர்வது போதாதென்று பக்க வாட்டிலும் நகரும் அவற்றைப் பார்த்துத் தலையில் மிதிக்க வேண்டும் போலிருந்தது. ஐஸ் ஹவுஸ் அதோ தெரிகிறது. ஈர மணலிலிருந்து ஏறி, சற்று உட்பக்க மாக வந்து உட்கார்ந்து கொண்டான் அவன்.

வெளிச்சம் நரைத்துக் கொண்டே வருகிறது. மணலை சமன்படுத்திப் புள்ளி வைத்துக் கலைத்துக் கொண்டிருந்தான் அவன். ஈர மணலில் அணை கட்டும் இரண்டு குழந்தைகளை - சின்னக் குழந்தையோடு ஆடையைத் தூக்கி நீர் காலில் பட நின்று கொண்டிருந்த - அப்பாவும், அம்மாவும் வந்து அழைத்துக் கொண்டு போனார்கள். சிறிது தூரத்தில் 'சலாங்குடு' ஆடிக் கொண்டிருந்த கும்பலை இப்போது காணவில்லை. இருள் நன்கு கவிந்து விட்டது. தூரத்தில் நீல விளக்குகள் பளிச்சென்று விழித்துக் கொண்டிருந்தன. அப்படியே உட்கார்ந் திருந்தான் அப்பு. மனம், புத்தி எல்லாம் வறண்டு கிடக்கின்றன. ஒன்றுமில்லாமல் வறண்டிருப்பது எத்தனை இதமாக இருக்கிறது. அப்படியே படுத்துக்கொண்டு தூங்க வேண்டும் போலிருக்கிறது. வெகு நேரம் தூங்க வேண்டும் போலிருக்கிறது. வெகு நேரம் தூங்க வேண்டும் - வெகு நேரம்.

மல்லாந்து படுத்தான். நட்சத்திரங்கள் கண்ணை உறுத்தின. ஒருக்களித்து உள்ளங்கை மீது தலை வைத்துப் படுத்து, கண்ணை மூடிக்கொண்டான். இனிமையான வறட்சி, இரைச்சல், ஒன்றுமே இல்லை. கடல் அலையும், மொணமொணவென்று எங்கோ மனிதர்கள் பேசுவதும், கடலுக்குப் பயந்து மெதுவாகக் கேட்கிற கார் சத்தமும் தான் காதில் விழுகின்றன.

அதிக நேரம் படுக்கை கொள்ளவுமில்லை. எழுந்து உட்கார்ந்தான்.

யாரது?.... அப்பா மாதிரி இருக்கிறதே... அப்பதான் .... பயமாக இருந்தது - அவனுக்கு. கஷ்டமாகவும் இருந்தது. அவர் நடை சற்று நின்று, எங்கோ அவர் பார்த்தபோது தெரிந்த நிலை - இரண்டையும் பார்த்தும் பரிதாபப்பட வேண்டும் போலிருந்தது. நம்மைத்தான் பார்க்க வந்திருக்கிறாரோ! பார்க்கா மல் போய்விடப் போகிறாரோ என்று மார்பு பரந்தது.

''அப்பா!'' என்று கூப்பிட்டான். அலையும் வெளியும் அதைச் சாப்பிட்டுவிட்டன. உரக்கக் கத்தவும் மனமின்றி எழுந்து அவரருகே போனான்.

''அப்பா!''

திரும்பினார் அவர்.

''அப்புவா! என்னடாது! இங்கேயா இருக்கே! மணல்லெ சுத்திச் சுத்தி வந்துண்டிருக்கேன். அரை மணியா... எங்கே போனானோ போனானோன்னு அம்மா புலம்பிண்டேயிருக்கா.

''எங்கே போயிடப் போறேன்? பச்சைக் குழந்தையா!''

''சரிடா, அவளைக் கவலைப்படாதேன்னு சொல்ல முடியுமா?''

''நான் ஊரிலே இல்லாதபோது?''

அவன் குரல் கட்டையாக, வறண்டு ஒலித்தது. அதிலே சாம்பல் பூத்தாற்போலக் கிடந்த கோபம் - இரண்டும் அவர் காதிலே பட்டுவிட்டனவோ என்னவோ - அவர் பதில் சொல்லவில்லை.

''உட்காரலாமாப்பா இப்படி கொஞ்சம்?''

''அம்மா காத்துண்டிருக்காடா.''

''யாருக்காக?''

எப்படிப் பார்த்தாரோ அவர், இருட்டில் தெரிய வில்லை. பேசாமல் சற்று நின்று, பிறகு உட்கார்ந்து விட்டார்.

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ''நீதிமன்றத் தின் கலங்கரை விளக்கு இருமுறை சுற்றி வந்து விட்டது. அலைகள் ஒன்றை ஒன்று இடித்துப் புரண்டன.

''காபிகூட சாப்பிடாம வந்துட்டியாமேடா?''

''மறந்து போய்ட்டேன்''

மீண்டும் சிறிது மெளனம்.

''இந்த லெட்டரைப் பார்த்துட்டுக் கவலைப் பட்டுண்டு வந்துட்டியா? இத்தனை நாழியே இங்கே உட்கார்ந்திருக்கியேன்னு கேட்கிறேன்'' என்று அவன் வேண்டும் என்றே மெளனம் சாதிப்பதைக் குறை சொல்வதுபோல் கேட்டார் தண்டபாணி.

''இந்த லெட்டர் போட்டிருக்காளா?''

''என்னது நீ பார்க்கலியா?''

''இல்லியே எப்ப வந்தது?''

''உனக்குத் தெரியாதா? அப்படீன்னா நீ வந்தப்புறம் சாயங்காலத் தபாலில் வந்துதோ என்னவோ!''

''இந்து எழுதியிருக்காளா?''

''ஆமா, பவானியம்மாள் திடீர்னு நாலாம் நாள் மயக்கமா விழுந்துவிட்டாளாம். இடது காலும் கையும் சுரணை இல்லாமல் போயிடுதாம்! அப்புறம் டாக்டரைக் கூப்பிட்டுக் காமிச்சிருக்கா. ரத்தக் கொதிப்பு அதிகமா இருந்ததுன்னு இன்ஜெக்ஷன் போட்டானாம். கால் பாரிச வாயு மாதிரி இழுத்துடுத் தோன்னு முதலில் சந்தேகமா இருந்ததாம். நல்ல வேளையா அப்படி ஆகலியாம். நீட்டி மடக்கிறாளாம். நடக்கக் கூட முடியறதாம். ஆனா நடந்தால் சிரமமா யிருக்காம். உட்கார்ந்துண்டே தான் இருக்காளாம்.

அப்புவுக்கு அதைக் கேட்டு கவலை நம நமவென்றது. சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந் திருந்தான். பவானியம்மாளுக்கு வலிவான உடம்பு இல்லை. சாதாரணமாக இருப்பாள். ஆனால் வியாதி, தலைவலி, கால்வலி என்றெல்லாம் சொன்னது கிடையாது. பட்டினி கிடக்க அஞ்ச மாட்டாள். காயக்கிலேசம் பண்ணத் தயங்கமாட்டாள். அதனா லேயே உடலில் ஒரு அயர்வு நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிட்டது போலிருக்கும். வயது வேறு அறுபதுக்கு மேலாகிவிட்டது. முப்பது வருட காயக் கிலேசம் இப்போதுதான் கைவரிசையைக் காட்டு கிறதோ என்னவோ!

''நான் போய் பார்த்து வந்தால் தேவலையே'' என்றான் அவன்.

''கட்டாயம் போகத்தான் வேணும்''

மீண்டும் சிறிது மெளனம்.

''நீ அது தெரிஞ்சிண்டு தான் கவலைப்பட்டுண்டு வந்தியோன்னு நினைச்சேன்'' என்றார் தண்டபாணி.

''அது நீங்க இப்ப சொல்லித்தானே தெரியும்.''

''அதுதான் சொல்றேன். இப்படி சொல்லாம சாப் பிடாம வந்துட்டியோன்னுதான் அம்மா கவலைப்பட றா.... உன்னைப் பார்த்தா என்னமோ போலிருக்கே.''

''...........''

''என்னன்னு சொல்லேன்''

''ஒண்ணுமில்லேப்பா''

''யாராவது ஏதாவது சொன்னாளா? அண்ணா, மன்னி யாராவது?''

''அவா என் மேலே உசிரா இருக்காப்பா'' எனக்கு ஒரு கவலையுமில்லே. சும்மாத்தான் வந்தேன். இங்கேயே இப்படியே சுத்திண்டிருக்கலாம் போலத் தோணித்து. இருந்துவிட்டேன்.''

''திடீர்னு அப்படித் தோணு¡துடா அப்பு! வேற யாராவது ஏதாவது சொன்னாளா...?''

''ம்ஹம்.''

''மத்யான்னம் யாராவது வந்தாளா?''

''............''

''கேட்டதுக்கு பதில் சொல்லேன்''

''எத்தனையோ பேர் வீட்டுக்கு வரா, போறா, அதனாலே என்ன இப்ப?''

''ஒண்ணுமில்லேன்னா நீ சொல்லப்படாதோ?''

''..........''

''சிவசு வந்தானோ?'' என்று அவனைப் பார்க்காமல் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டார் தண்டபாணி.

''வந்தார். நான் படுத்துண்டிருந்ததைப் பார்த்துக் கீழே இறங்கிப் போயிட்டார்.

''அவன் அம்மாவைப் பார்க்கத்தானே வரான்.''

அப்பு அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கிழக்கே கடலைப் பார்த்துக் கொண்டிருத்தார். அவருக்குப் பின்னால் தொலைவில் நீதிமன்றத்துக் கலங்கரை விளக்கு சற்றைக் கொருமுறை பளிச்சிட்டு விட்டு மங்கிக் கொண்டிருந்தது. அலையும் சற்றைக் கொரு முறை ஓங்கி விட்டு மீண்டும் அடங்கிய ஓலமாகப் படிந்து கொண்டிருந்தது. அப்பா கல்மாதிரி உட்கார்ந்திருக்கிறார். முக்கால் இருளில் அவர் தலை மொத்தை நிழலாகத் தெரிந்ததே தவிர, வேறு ஒன்றும் புலப்படவில்லை.

''உங்களைப் பார்த்தால் அழவேண்டும் போலிருக் கிறது. 'நீ ஒரு மனுஷன் மாதிரி' என்று ஒரு 'சீ' போட்டு விட்டுப் போக வேண்டும் போலிருக்கிறது. 'அம்¡வைப் பார்க்கத்தானே வருகிறான்' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற உங்களைக் கண்டால் குமட்டிக் கொண்டு வருகிறது. அந்த வீட்டை விட்டே விரட்ட வேண்டும் போலிருக்கிறது!'' என்று வார்த்தைகள் உள்ளுக்குள்ளே புகைந்து உருண்டு கொண்டிருந்தன. ஆனால் வெளியே ஒன்றும் வரவில்லை. அஞ்சி, கூசி அவரையே பார்த்துக் கொண்டு, அவனும் ஒரு கல்லாக உட்கார்ந் திருந்தான்.

எல்லாம் ஸ்தம்பித்துக் கிடப்பது போலிருந்தது. அலை உருண்டும், வண்டிகள் ஓடியும், விளக்குகள் எரிந்தும், காற்று தவழ்ந்தும் கூட அப்படியே உலகமே நின்றுவிட்டாற் போலிருந்தது. அப்பாவின் சுரணை யற்ற அசட்டையைக் கண்டு காலமே நின்றுவிட்டாற் போலிருக்கிறது. மூச்சு, இயக்கம், எல்லாமே உறைந்து விட்டாற் போலிருக்கிறது.

சட்டென்று அப்பு அசைந்து கொடுத்தான். எத்தனை நேரமாயிற்றோ, தெரியவில்லை.

''நாளைக்கு நான் சித்தன் குளத்துக்குப் போக லாம்னு பார்க்கிறேன்பா!'' என்றான் அவன்

''ம்'' என்று திரும்பினார்.

மீண்டும் சொன்னான் அவன்.

''பவானியம்மாளைப் பார்க்கத்தானே?''

''ம்க்கும்.''

''போய்ட்டு வா... போய்ட்டு உடனே திரும்பி விடலாமோல்லியோ?''

''அத்தை என்ன சொல்றாளோ! பார்த்துண்டுதானே வரணும்.''

''சரி, அம்மா பரந்து போயிடுவ, சீக்கிரமா வராட்டா - அதுக்காகச் சொன்னேன்'' என்று எழுந்தார் அவர்.

''எம்பா?''
''எத்தனை நாழி இங்கேயே இருக்கிறது!? வீடுன்னு இருக்கு. வேற எங்கே போவேன்?'' என்று அவன் எழுந்தவுடன் நடக்க ஆரம்பித்தார் அவர்.

''எனக்கு ஒண்ணும் புரியலேப்பா!'' என்று நடந்துகொண்டே சொன்னான் அப்பு.

''ஒண்ணையும் புரிஞ்சுக்க சிரமப்படப்படாது. பேசாமல் பார்த்துண்டேயிருக்கணும். அதுக்காகத் தான் ஸ்வாமி நம்மைப் படைச்சிருக்கார்.''

அப்புவுக்கு சற்று திகைப்பாக இருந்தது. அதைக் கேட்டு, உள்ளுக்குள்ளே கொதித்தது. அடக்கிக் கொண்டே, ''புரியறதோ என்னமோ - எனக்கு ஒண்ணும் பிடிக்கவேயில்லை!'' என்று உதட்டைக் கடித்துக் கொண்டான்.

''என்ன பண்றது?'' என்றார் அவர். பிறகு இருவரும் பேசவில்லை.

வீட்டு வாசற்படி ஏறும்போதே, ''என்னடா அப்பு? எங்கடா போயிட்டே? மத்தியானம் போனவன்!'' என்று திண்ணையிலிருந்து எழுந்து வந்த அம்மா சட்டென்று நிறுத்தி விட்டாள். அதற்கு மேல் பேச முடியவில்லை. குரல் நடுங்கிக் கரகரத்தது.

''எங்கண்ணா போய்ட்டே?'' என்று கேட்ட காவேரி அம்மா தழதழப்பதைப் பார்த்தாள்.

''சும்மாத்தாண்டி, பீச்சிலே போய் உட்கார்ந்திருந்தேன்.''

''போண்ணா! அம்மாட்ட கூட சொல்லாமதான் போறதாக்கும். இனிமே எங்கே போனாலும் சுருக்க வந்துடு அண்ணா. நாழியாகுமானா, சொல்லிட்டுப் போ'', என்று அம்மாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் காவேரி.

''சரி, சரி.. போ. இது என்ன பரபரப்பு? யாராவது கேட்டா சிரிப்பா.''

இதையெல்லாம் கேட்டு அப்புவுக்கு உடல் குன்றிற்று. அம்மா தன்னிடம் காட்டும் பரிவை.... இவர்கள், காவேரி கூட புரிந்துகொண்டு ஒத்து ஊதுகிறாளோ என்று ஒரு லஜ்ஜை ஊவா முள்ளாகச் சிறு குத்தல் குத்திற்று. என்னைப் பார்த்தால் சின்னப் பையன் மாதிரி இருக்கிறதா? ஏன் இப்படி எல்லாரும் புலம்புகிறார்கள்? நானாக எதையும் செய்ய எனக்குத் திராணி கிடையாதா? சுயமூச்சு கிடையாதா? இல்லை. இந்த வீட்டையே கண்டு நான் சிணுங்கு வதை இவர்கள் புரிந்துகொண்டு, என்னைக் குழந்தை யாகவே அடித்து, வாயை மூடப் பார்க்கிறார்களா?

சாப்பிடுவதற்கு முன் ஜபத்திற்காக உட்கார்ந்து சிறுபொழுதில் இதையேதான் நினைத்துக் கொண்டி ருந்தான் அவன். அப்பொழுது யாரும் அதிகமாய்ப் பேசவில்லை. கிருஷ்ணன் ஏதோ கல்லூரியில் நடந்த தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மற்றவர்கள் ஒட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். காவேரி நிமிராமல் உம் போட்டுக் கொண்டிருந்த அப்புவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந் தாள்.

சாப்பாடு முடிந்ததும் அப்பு சித்தன்குளத்துக் கடிதத்தை வாங்கிக் கொண்டு மாடிக்கு வந்து விட்டான்.

''அப்புவுக்கு அநேக கோடி நமஸ்காரம்'' - என்று ஆரம்பித்து கடற்கரையில் அப்பா சொன்ன செய்தி களைக் கடிதம் உருளை எழுத்துக்களில் சொல் லிற்று....'' சில சமயம் அத்தையைப் பார்க்கும்போது கவலையாகப் போய் விடுகிறது. எப்போதும் வரப் போகிறானோ என்று உன்னைப் பற்றி இரண்டு தடவை சொன்னாள். நீ முடிந்தால் வந்து பார்த்துவிட்டுப் போனால் அவளுக்கு திருப்தியாயிரக்கும். ஆனால் வேலை இருந்தால் சிரமப்பட வேண்டாம். அத்தை உன்னைப் பற்றிப் பேசத் தொடங்கினால் ஒரு மணி நேரம் பேசுகிறாள். உன் அம்மா, அப்பா எல்லாருக்கும் என் நமஸ்காரங்களைச் சொல்லவும், அத்தையும் ஆசி கூறுகிறாள். தப்பு இருந்தால் மன்னித்துக் கொள் ளவும் அநேக நமஸ்காரம் - இந்து''

நாலைந்து தடவை அதைப் படித்த அப்புவுக்குக் கண்ணை அப்பால் எடுக்க முடியவில்லை. பவானியம் மாளின் சோர்ந்த உடலும் பெருமூச்சும் அப்போதைக் கப்போது கண்முன் வந்துவிட்டுப் போயிற்று. இந்து கூட நன்றாக எழுதுகிறாளே! எங்கே உட்கார்ந்து எழுதியிருப்பாள்? எப்படி எழுதியிருப்பாள்? பலகை அல்லது ராமாயணப் புத்தகத்தை மடிமேல் வைத்துக் கொண்டு எழுதினாளா?... அல்லது குமாஸ்தா மேஜை முன் வைத்து எழுதினாளா?... அந்த மேஜை மீது தலையை வைத்துச் சாய்த்திருந்த போதுதான் அன்று வந்தாள். தலையை வருடினாள்... பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். இந்து, இந்து.... நான் எங்கேயோ வந்து உட்கார்ந்திருக்கிறேனே... சத்திரத்தில் வந்து தங்கினவன் மாதிரி இருக்கிறதே இங்கு... தப்பு இருந்தால் மன்னித்துக் கொள்ளவுமா? எந்தத் தப்பைச் சொல்லுகிறாள்? எழுத்துத் தப்பு ஒன்று மில்லையே....

கடிதத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன்

''என்னடா அப்பு எழுதியிருக்கா?''

அம்மாவின் குரலைக் கேட்டுத் தூக்கி வாரிப் போட்டது.

''ஒண்ணுமில்லேம்மா, எழுத்து சரியாப் புரியலை பார்த்துண்டிருந்தேன்.'' என்று திடுக்கிட்டு போனாற் போல் தடுமாறினான் அவன்.

''அதுக்கு இப்படிப் பதறுவானேன்?'' என்று அவனைக் கண்ணெடுக்காமல் பார்த்தாள் அம்மா. அப்பு கடிதத் தை மடித்தான்.

''நாளைக்குச் சித்தன்குளத்துக்குப் போறியாமே?''

''ஆமாம்மா... பார்த்துவிட்டு வரவேண்டாமா?''

''பார்த்துவிட்டு வரத்தானே வேணும்.''

அழுத்தம்பின் பகுதியில் விழுந்ததைக் கேட்டு நிமிர்ந்தான் அவன்.

''ஏம்மா?''

அம்மா ஒரு நிமிஷம் பதில் சொல்லவில்லை. திரும்பிப் பார்ப்பது போலவே, கடைக் கண்ணாலேயே நாலு பக்கமும் பார்ப்பது போலிருந்தது.

''அம்மாவை பிடிக்கலேன்னு அங்கேயே இருந்துவிட மாட்டியே....?'' அவன் காதுக்கு மட்டும் எட்டும் தாழ்ந்த குரலில் வந்தது இது. ஆனால் முழுவதையும் சொல்லி முடிக்க முடியவில்லை. அவளால், அதற்குள் கன்னம், உதடெல்லாம் கோணி நடுங்கின. கண்ணில் தெப்பம் கட்டிவிட்டது.

அப்பு தலையைக் குனிந்து கொண்டான்.

*****

Mar 28, 2012

குழந்தைக்கு ஜுரம்-தி.ஜானகிராமன்

னைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது.

“ஏண்டாய்யா, குழந்தையைக் கொடுத்தியே போதாதா? வியாதியை வேற கொடுத்து அனுப்பிச்சுருக்கியே அதை?” என்று மனசிலே சொல்லிக் கொண்டே சுவரில் அசைந்த காலண்டரைThi.jaa ப் பார்த்தார். அதில் பரமசிவன் மீசையும் மாடும் இரண்டு பிள்ளையுமாக உட்கார்ந்திருந்தார். வியாதி வெக்கை இல்லாத பிள்ளைகள்.

கழுவாத சாயங்கால மூஞ்சி மாதிரி எண்ணெய்ப் பாடம் கறுத்து மின்னும் தலையணையில் தலை வைத்துக் குழந்தை மல்லாந்து படுத்திருந்தது. மூன்று நாளாக மூடிய கண் திறக்கவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. சளி ஜுரமா, பிடிவாத ஜுரமா இன்னும் டாக்டருக்குப் பிடிபடவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. மாசம் பிறந்து இரண்டாவது வாரம் பாதி நடக்கிறது. இல்லின், மைஸின் என்று என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார் டாக்டர். தம் கையிலே இருக்கிற பெட்டியைப் பிரிக்க யோசனை, ‘ட்யூஷன்’ சொல்லிக் கொடுத்து உளவடைக்க டாக்டருக்கு அவ்வளவு சின்னக் குழந்தைகளும் இல்லை. சந்நிதித் தெரு வன்னியர் வீட்டு ‘ட்யூசன்’ பணம் எட்டு ரூபாய் தீர்ந்துவிட்டது. என்ன செய்யலாம் என்று மனசை நோண்டும்போதுதான் மனைவி அதை ஞாபகமூட்டினாள்.

“இன்னும் ஒரு புஸ்தகம் அச்சுப்போட எழுதிக் கொடுத்தீங்களே, அதைத் திருப்பிக் கேக்கறாப் போலாவது அந்தப் பாவியைப் பார்த்துக்கிட்டு வாங்களேன்” என்றாள் அவள்.

“நீயே பாவிங்கறே. நீயே போகச் சொல்றியே?”

“வேற வழி இல்லேன்னா…” என்னவோ ரோசமாகச் சொல்லி வாக்கியத்தை முடிக்கத்தான் பார்த்தார். ஆனால் குழப்பத்தில் முடிவே மௌனமாகக் கரைந்துவிட்டது.

“இனிமேல் உங்க வீட்டுக் குத்துச் செங்கல் மிதிக்க மாட்டேன்யா” என்று புத்தகம் போடுகிற பஞ்சுவிடம் இரண்டு மாதம் முன்னால் சொல்லிவிட்டு வந்ததுதான்.

சின்னராஜா எம்.ஏ., எல்.டி. எழுதியதாக பஞ்சு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குப் போடுகிற புத்தகங்களெல்லாம் இந்த சரவண வாத்தியார் எழுதிக் கொடுத்ததுதான். நாலு வருஷமாக இது நடந்துவருகிறது. இருபது புத்தகங்கள் ஆகிவிட்டன. பஞ்சு புத்தகத்துக்கு ஐம்பது ரூபாய் வீதம் ஏகபோகமாக உடைமையை எல்லாம் அவரிடம் எழுதி வாங்கி க்ஷேமமாக இருந்து வந்தார். நானூறு ரூபாய் மிச்சம் கொடுக்க வேண்டியிருந்தது.

ஆடி மாசம் பணத்துக்காகப் போய் நின்றார் சரவணவாத்தியார்.

“அடுத்த திங்கட்கிழமை ஒரு செக் வர வேண்டியிருக்கு. வந்தவுடனே, மாத்தி உம்ம வீட்டுக்கு வந்து உமக்குக் கொடுக்க வேண்டிய முந்நூறு ரூபாயையும் கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன். சரிதானா?” என்றார் பஞ்சு.

முந்நூறு என்கிறானே!

“நானூறு ரூபாயில்லே?”

“நானூறா? நல்லா யோசிச்சுப் பாரும். போன வாரம் வந்ததிருந்தப்போ, நானூறு ரூபாய்னு சொன்னீர். இல்லை ஐயா, முந்நூறுன்னு திருத்தினேன். சரீன்னீரேய்யா.”

“இல்லே, நீங்க முந்நூறுன்னீங்க. நானூறுன்னு நான்தான் திருத்தினேன். நீங்கதான் சரின்னிங்க.”

“இல்லே, நல்லா யோசிச்சுப் பாரும்.”

சரவண வாத்தியார் நன்றாக யோசித்துப் பார்த்தார், நானூறு ரூபாய் நிச்சயம்.

“இல்லைங்க, நானூறுதான்.”

“ஏன்யா, எத்தினி நாளாய்யா இநத் வேலையை ஆரம்பிச்சிருக்கீரு? வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு? ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா?”

வாத்தியாருக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவர் வாத்தியார். யாரும் அவரை இப்படித் தூக்கி எறிந்து பேசுகிறதில்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு மரியாதை உண்டு. அதாவது அவமரியாதை கிடைத்ததில்லை.

முட்டி வந்த ஆத்திரத்தை அமுக்கிக்கொண்டு, பணிந்த குரலில், “நீங்க தெரியாம சொல்றீங்க, நல்லா யோசனை பண்ணிப்பாருங்க” என்றார்.

“தெரியாமச் சொல்றேனா? நானா? நோட்டிலே எழுதி வச்சிருக்கேன்யா?”

“எடுங்க.”

“கடையிலே இருக்கு. இன்னிக்குச் சாயங்காலம் பார்த்தேன். அப்புறம் என்ன?”

“என்ன எழுதியிருக்கீங்க?”

“உமக்குக் கொடுக்க வேண்டியது ஆயிரம். எழுநூறு ரூபா உம்ம பத்துவழி ஆயிருக்கு.”

“அறுநூறில்லே?”

“ஏன்யா, செலவுக்கு வேணும்னு போன மாசம் இரண்டாம் நாள் ராத்திரி வந்து ஐம்பது ஐம்பதுன்னு வாங்கிண்டுப் போனீரய்யா.”

“நான் ரண்டு தடவை வந்தது வாஸ்தவம். ஆனா ஒண்ணும் வாங்கலியே!”

“வாங்கலியா? என்னமாய்யா இப்படித் துணிஞ்சி சொல்ல நாக்கு வரது உமக்கு? பையன்களுக்கெல்லாம் தர்மம் போதிக்கிறீரே. வாண்டாம்யா. இதெல்லாம் விட்டுடும். இப்படி இருந்தா லட்சுமி நீர் இருக்கிற தெருப்பக்கம் கூட வரமாட்டா.”

“பஞ்சு, நெசமாத்தான் சொல்றீங்களா?”

“நெசமாத்தானா? நான் என்ன உமக்குப் புடிச்ச சிஷ்யப் பையனா, உம்மோட உள்ளாக்காட்டி விளையாடறதுக்கு.”

ஒரு வார்த்தைக்குப் பத்து வார்த்தையாகப் பஞ்சுவின் வாயிலிருந்து தெறிக்கின்றன. குரலும் பெரிய குரல். வாத்தியார் கலங்கியேவிட்டார்.

“அப்ப முந்நூறுதான்னு சொல்றீங்க.”

“வேணும்னா நாளைக்கு காலமே வந்து நோட்டைப் பாருமே, எழுதியிருக்கேனா இல்லியான்னு.”

”நீங்க நோட்டிலே எழுதினதுக்கு நானா பொறுப்பு? எனக்கு நேர எழுதலியே.”

வாத்தியாருக்கே ஆச்சரியமாக இருந்தது, எப்படி இதைச் சொன்னோம் என்று.

“அப்படியா? நான்தான்யா அயோக்கியன். நீர் பரம யோக்கியர். அரிச்சந்திரன். ஐயா, இனிமே உம்ம சகவாசம் நமக்கு வாண்டாம்யா. நீர் எழுதிக் கொடுத்த புஸ்தகம் இன்னும் ஒண்ணே ஒண்ணு இருக்கு. அதை எடுத்துக் குடுத்துடறேன். நல்ல யோக்யனா, நல்லவனா, புஸ்தகம் போடற ஆள் யாராவது இருப்பான். அவன்கிட்ட கொண்டு குடுத்துக்கும்.”

சரவண வாத்தியார் வாய் அடைத்து நின்றார். இந்த லட்சணத்தில் வேறு யாரோ இரண்டு பேர் அங்கு வந்திருந்தார்கள்.

பஞ்சு சொன்னார் “ஓய் சரவணம், இப்ப ரொம்ப சங்கடமான நிலையில் மாட்டிவிட்டீரையா என்னை? இந்த உலகத்திலே வாத்தியார்னு சொன்னா அவா கட்சியைத்தான் யாரும் எடுத்துப்பன். இந்த இரண்டு பேரும் இப்ப உமக்குச் சாதகமாகப் பேசினால்கூட நான் ஆச்சரியப்படறதுக்கில்லே. என்னை இந்த மாதிரி இக்கட்டா கொண்டு நிறுத்திப்பிட்டீரே.””

“சாயங்காலம் நோட்டைப் பார்த்தவங்க தப்பாச் சொல்லுவாங்களா?” என்றார் வந்திருந்த இருவரில் ஒருவர்.

ஒரு தடவை அந்த ஆசாமியை அர்த்தம் இல்லாமல் பார்த்துவிட்டுப் பஞ்சுவின் பக்கம் திரும்பினார் வாத்தியார்.

“பஞ்சு, ஒரு கால் கடுதாசி கொடுங்களேன்” என்றார்.

“இதோ!”

வாத்தியார் விறுவிறுவென்று எழுதினார். “இருபது புத்தகங்கள் எழுதிக் கொடுத்ததற்காகப் பஞ்சு பிரசுரம் உரிமையாளர் சோ.பஞ்சாபகேசனிடம் நான் வாங்கிக் கொண்ட ரூபாய் ஆயிரம். இத்தோடு என் கணக்குத் தீர்ந்துவிட்டது” என்று கையெழுத்திட்டு எழுதி நீட்டினார்.

“என்னது?”

“பாருங்க.”

பஞ்சு பார்த்தார். “எல்லா ரூபாயும் வாங்கிக்கொண்டதாக எழுதிக் கொடுத்துவிட்டீரா? எனக்கு என்னத்துக்கையா பிச்சைக்காசு?” என்று அதைக் கிழித்து எறிந்தான் பஞ்சு. “இந்தக் கிண்டல்லாம் வாண்டாம். திங்கட்கிழமை உமக்கு மூந்நூறு ரூபாய் வரும்,”

“உம்ம ரூபாயே எனக்கு வாண்டாம்.”

“என் ரூபாய் என்ன? உம்ம ரூபாய் அது. கொண்டு வந்து கொடுத்துடறேன். வாண்டாம்னா நீர் கிழிச்சுப் போட்டுக்கும். எனக்கு என்னத்துக்கு? இந்த மாதிரி யார்கிட்டியும் எனக்கு ஏற்பட்டதில்லை ஐயா.”

“அப்ப நான் வரட்டுமா?”

“சரி.”

வாத்தியார் திரும்பினார். அவர் மனதில் புயல் அடித்தது. அரிக்குஞ்சட்டியில் குழந்தை தண்ணீரைத் தட்டுகிற கலக்கமாகத்தான் பஞ்சுவுக்கு அது தோன்றிற்று.

கூட வந்தார் பஞ்சு. “ஓய், சும்மா மனசை அலட்டிக்காதீர். நல்ல யோசிச்சுப் பாத்து வந்து சொல்லும். நான் அப்படி எல்லாம் வார்த்தை புரளமாட்டேன்யா. நாளைக்கு வரீரா?”

“இனிமே இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவனா!”

“அப்படியா? அப்படின்னா உம்ம சௌகரியம். சரி, பணத்தை அனுப்பிச்சுடறேன். அதையும் உம்ம வீட்டுக் குத்துச் செங்கல் ஏறவிடாமல் அடிச்சுப்பிடாதீர்.”

வாத்தியார் பதில் சொல்லவில்லை. பேசாமல் தெருவில் இறங்கி நடந்துவிட்டார். மனிதனுக்குப் பொய் சொல்ல எப்படி மனசு வரும்? திருடலாம், கொல்லலாம், கற்பை இழக்கலாம். அவர்களோடு பழகலாம். பொய் சொல்பவர்களோடு எப்படிப் பழகமுடியும்? பொய்! பொய்யா? பொய் எப்படிச் சொல்ல முடியும்? வாத்தியாருக்குப் புரியவில்லை. பதறிற்று. திட்டம் போட்ட கயமையாக இருக்கிறதே இது!

“இருபத்தோராவது புத்தகத்தை இவனிடமா கொடுக்கிறது? சை! எப்பேர்ப்பட்ட புத்தகம்!” ஆனால் புறப்பட்டு வந்த கோபத்தில் அதை வாங்கிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தார். பெண்டாட்டியிடம் ஒருமுறை எல்லாவற்றையும் சொல்லி அழுதார். புகைந்தார். மனசாரத் திட்டினார். அப்புறம் அந்தப் பக்கம் தலை காட்டவில்லை. பணமுடை நாலு தடவை கழுத்தைப் பிடித்தபோதும் தைரியமாக இருந்துவிட்டார்.

நேற்றோடு பதினேராவது திங்கட்கிழமை போய்விட்டது. வலிய வருகிறேன் என்று பயமுறுத்திய பணம் வரவில்லை.

மீண்டும் போகலாமா? பொய்யனை எப்படிப் பார்க்கிறது?”

“குததுச் செங்கல் ஏறமாட்டேன்னு சொல்லிவிட்டேன் தெரியுமா?” என்றார்.

“ஏறாம வாசல்லெ நின்ன வாக்கிலே கேளுங்க.”

“நான் போய்ப் பணம்னு கேக்கமாட்டேன்.”

“புதுப் புஸ்தகத்தைத் திருப்பி வாங்கி வராப்பல போங்களேன். அப்ப அவனாப் பேச்சு எடுககமாட்டானா?”

அதுவும் சரிதான் என்று பணமுடை காதோடு சொல்லிற்று. சமாதானம் இல்லை.

குழந்தை இன்னம் கண்ணைத் திறக்கவில்லை. ஹார்லிக்ஸ்தான் கொடுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் திராட்சைப் பழத்தை ஜலத்தில் கொதிக்கவைத்துக் கொடுக்கலாமாம்.

பெருங்காயத் தகரத்தைத் திறந்தார். ஒரு ரூபாயும் பத்து நயா பைசாவில் ஆறும் மின்னின. இரண்டு பத்தை விட்டுவிட்டு மீதியை எடுத்துக்கொண்டார். பார்லி, திராட்சை வாங்கி வரலாம். வரும்போது, பஸ்ஸில் ஏறிப் பத்து நயா பைசாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டுபோய், இறங்கிப் பஞ்சுவின் வீட்டை நோக்கி நடந்தார்.

“பஞ்சு இருக்காரா?”

“வாங்க ஸார்” என்றான் ரத்தினமலை. ரத்தினமலை பஞ்சுவின் அந்தரங்க வேலைக்காரன். வாசலில் யார் வந்தாலும், “இருங்க, இருக்காங்களா பாத்திட்டு வரேன்” என்று ஒன்றுமே தெரியாதவன் போல உள்ளே ஓடிப்போய் வந்து, இருக்கிறார் அல்லது இல்லை என்று வந்த ஆளுக்கு ஏற்பத் தகவல் தருகிறவன்.

“இருக்காரா?”

“இருக்காங்க” என்று உள்ளே போகாமலே சொன்னான் அவன்.

“பாக்கலாமா?”

“பார்க்கலாம். அம்மாவுக்கு ரொம்ப உடம்பு ஜாஸ்தியா இருக்கு. ரத்த ரத்தமாச் சாயங்காலமே புடிச்சி வாந்தி எடுக்கறாங்க. அய்யா பக்கத்திலே உட்கார்ந்திருக்காங்க.”

“ரத்த ரத்தமாவா? என்ன உடம்பு?”

“என்னமோ தெரியலீங்க. திடுதிடுப்பினு வந்திடிச்சி.”

“திடுதிடுப்புனா? சாயங்காலாமா?”

“ஆமாங்க. சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் நடமாடிக்கிட்டுத்தான் இருந்தாங்க. அப்புறம் திடீர்னு தலை வலிக்கிதுன்னாங்க. ரத்தமா வாந்தி எடுத்திச்சு. டாக்டர் வந்து ஊசி போட்டுப் போனாரு. கண்ணைத் தொறக்கல. படுத்துக்கிடக்காங்க.”

“போய்ப் பார்ப்பதா வேண்டாமா? வேற்று மனிதரைக் கண்டதும் பஞ்சுவின் மனைவி கூச்சப்பட்டால் என்ன செய்கிறது? உள்ளே போவதா, திரும்பிப் போவதா என்று தெரியாமல் குழம்பிக் குழம்பி நின்றார் அவர்.

ஒரு பையன் தெருவில் ஓடிவந்து வாசல்படி ஏறினான். அவரைக் கண்டு நின்றான்,

“என்ன ஸார்?”

“என்னப்பா கையிலே?”

“ஐஸ் ஸார். அத்தங்காளுக்கு ரொம்ப சீரிஸ்ஸா இருக்கு. உள்ள வறிங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஓடினான்.

இதற்கிடையில் வேலைக்காரப் பையன் உள்ளே போய் வந்துவிட்டான்.

“நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னேன். ஒண்ணும் சொல்லலை ஸார்” என்றான்.

திரும்பிப் போகலாமா? வந்த சமாசாரம் பஞ்சுவுக்குத் தெரிந்துவிட்டது. உள்ளே போகாமல் திரும்பிவிட்டால் என்ன நினைத்துக் கொள்வார்? அவர் மனைவி கூச்சப்பட்டால்… கூச்சம் என்ன? அப்படி உடம்பாக இருந்தால், கூச்சமா தெரியப்போகிறது? உண்மையில் கவலைக்கிடமாக இருந்தால் கூச்சமும் சங்கோசமுமா வரும்?

செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனார். என்ன இது?

அவர் எதிர்பார்த்தவாறு இல்லை. உள்ளே ஏக கூட்டம். பஞ்சுவின் மனைவி படுக்கையில் கிடந்தாள். சுற்றி ஏழெட்டுப் பெண்கள். பஞ்சு, மனைவியின் காலடியில் உட்கார்ந்திருந்தார். பஞ்சுவின் குழந்தை இரண்டு தூங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு குழந்தை விசித்து விசித்து அழுதுகொண்டிருந்தது. அதை ஒரு பாட்டி சமாதானம் செய்துகொண்டிருந்தாள். இரண்டாவது குழந்தை விவரம் தெரிந்த பெண். அது திகில் படர்ந்த முகத்துடன் சுவேரோரமாக அப்பாவைப் பார்த்த வண்ணம் சிலையாக உட்கார்ந்திருந்தது. தலைப்பக்கம் உட்கார்ந்திருந்த அம்மாளின் கண் அழுது கலங்கிக்கிடந்தது.

“என்ன உடம்பு ஸார்?”

“சாயங்காலம் வரையில் ஒண்ணும் இல்லே. திடீர்னு அஞ்சு மணிக்கு ரத்தமா வாந்தி எடுத்தாள். தலை வலிக்கிறதுன்னாள்ளாம். கடைக்குப் பையன் ஓடிவந்து சொன்னான். வந்தேன். இப்படி பிரக்ஞையில்லாமல் கிடக்கா. டாக்டர் வந்து ஊசி போட்டார். பயப்பட வாண்டாம்னார். என்னன்னு கேட்டேன். ஏதே பலஹீனந்தான்னட்டுப் போனார்” என்று பஞ்சு மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

வாத்தியாரும் பார்த்தார். கண் சொருகியிருந்தது. திடீரென்று பல்லை நறநறவென்று கடித்தாள் நோயாளி. கை விறைத்தது. உடம்பைப் போட்டு முறித்துக்கொண்டாள். பயங்கரமாக இருந்தது. எல்லோரும் அமுக்கி அவளைப் பிடித்துக்கொண்டார்கள். அமுக்க முடியாமல் அமுக்கினார்கள்.

“என்னடீம்மா இது? இப்படி முறிக்கிறதே! ஒண்ணும் புரியலியே. இந்தக் குடும்பத்தை இவ இல்லாட்டா யாருடீ காப்பாத்த முடியும்?” என்று தலைமாட்டு ஸ்திரீ புலம்பினாள். குபுகுபுவென்று அழுகை வந்தது அவளுக்கு.

“மறுபடியும் டாக்டரைக் கூப்பிட்டுப் பார்க்கணும், ஸார்” என்றார் வாத்தியார்.

“வீட்டு டாக்டர் சரியாப் போயிடும்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா மறுபடியும் அழச்சிண்டு வரச்சொல்லிப் பையனை அனுப்பிச்சிருக்கேன். போயிருக்கான்.”

குழந்தை அழுதது. நினைத்து நினைத்து தலைமாட்டு அம்மாள் அழுதாள். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை உடம்பை முறித்து வளைத்து விறைக்கிற போதெல்லாம் மற்றப் பெண்கள் அணைத்துப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாக்டர் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவாராம்” என்றான் பெரிய பையன் வந்து.

“எங்கே போயிருக்காராம்?”

“தெரியலே. எனக்கு சந்தேகமாயிருக்கு.”

“என்ன?”

“அவர் பிள்ளை படுத்துண்டால் ஏந்திருக்க மாட்டார்னு சொன்னான். ஆளே இல்லவே இல்லைங்கறான். எது நெஜம்னு தெரியலே.”

“ராஜு டாக்டர் சேதி தெரிஞ்சதுதானே? படுத்துனுட்டால் என்ன கூப்பிட்டாலும் வரமாட்டாங்களே!” என்றது கும்பலில் ஒரு குரல்.

வாத்தியார் வெளியே ஓடினார். இரண்டு மூன்று டாக்டர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டினார். “இல்லவே இல்லை. வரமுடியாது” என்ற இரண்டு பதில்களை மூடிய கதவே கொடுத்துவிட்டது. மூன்றாவது டாக்டரிடம் ஒடினார். மாடிப்பால்கனியிலிருந்தே டாக்டர் வியாதியைப் பற்றி விசாரித்தார். வாத்தியார் சொன்னதைக் கேட்டதும், “டாக்டர்தான் ஊசி போட்டிருக்கார்னேளே. காலமே வந்து எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ” என்று உள்ளே போனார். தாழ்ப்பாள் ஓசை கேட்டது. சட்டென்று பராங்குசத்தின் ஞாபகம் வந்தது வாத்தியாருக்கு. கூடப் படித்தவனாயிற்றே. ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார். ஒரு மைல் இருக்கிறது பராங்குசம் வீடு.

“ஸார், பராங்குசம் ஸார்!”

“யாரு?”

“நான்தான் ஸார்.”

நான்தானென்றால் அடையாளம் தெரியுமோ? அவனைப் பார்த்தே ஒரு வருஷமாயிற்று.

“நான்தான் சரவணன் ஸார். வாத்தியார்.”

“ஓகோ, இதோ வந்துட்டேன்.”

அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கையோடு அழைத்துக் கொண்டே வந்துவிட்டார் சரவணம். சைக்கிள் ரிக்ஷா லொலொடவென்று சத்தம் செய்தது.

உள்ளே போய்ச் சேர்ந்தார் பராங்குசம். உடம்பு முறியாக முறித்தது. டாக்டர் எழுந்து “இப்படி வாங்க கொஞ்சம்” என்று பஞ்சுவையும் சரவணத்தையும் தனியாக வாசலுக்கு அழைத்துப் போனார்.

“ஸார், இது கிருமித் தொத்து, உடனே ஆஸ்பத்திரிக்குப் போனா ஆனதைச் செஞ்சிப்பிடுவாங்க. இப்படியே இன்னும் நாலு மணிநேரம் விட்டு வச்சா, ‘க்ரிடிக்கலா’ப் போயிடும். அப்புறம் ரொம்ப சிரமம். இப்பவே வாங்க. இப்ப ஆஸ்பத்திரியில் சேத்துட்டா நாளை மத்தியானம் திரும்ப வந்துடலாம். இங்கியே வச்சிருக்கிறது நல்லதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் இதுக்கு வசதி உண்டு. நானும்கூட வந்து அட்மிட் பண்ணிடறேன். என்ன சொல்றீங்க? அப்புறம் வருத்தப்படப்படாது.”

பஞ்சு உள்ளே வந்தார். பெண்மணிகளைக் கலந்து பேசினார். ஆஸ்பத்திரி என்றதும் தலைமாட்டு அம்மாள் புதிதாக ஒரு பாட்டம் ஆரம்பித்துவிட்டாள். “செவ்வாய்க்கிழமையும் அதுவுமா… இங்கேயே பார்க்க முடியாதா?”

பஞ்சுவும் கலங்கினதைப் பார்த்து, அவருக்கும் எல்லோருக்கும் தைரியம் சொல்லிவிட்டு, ஓடிப்போய் ஒரு டாக்ஸியைப் பிடித்து வந்தார் சரவணம். டாக்ஸி வந்த பிறகு மீண்டும் தகராறு. பிரக்ஞை வந்த மனைவி அடம்பிடித்தாள். சரவணன் அவளுக்கு வேறு நல்ல வார்த்தை சொல்லி சரி சொல்லச் செய்ய அரை மணியாயிற்று.

மெதுவாகக் காரில் ஏற்றினார்கள். சரவணமும் டாக்டரும் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள்.

ஆஸ்பத்திரியில் பரபரவென்று ஒரு படுக்கையை ஒழித்துத் தயார் செய்தார்கள். டாக்டர் வந்தார். “நல்ல வேளை! இப்பம் கொண்டு வந்தீங்களே. இன்னும் ஒரு மணி ஆயிருந்ததோ சொல்றதுக்கில்லை. இனிமே பயம் இல்லை. கவலைப்படாதீங்க ஸார், காலமே பத்து மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம்” என்று தைரியம் சொன்னார். கவனித்தார்.

வாத்தியாருக்கு உயிர் வந்தது. மருந்து கொடுத்தார்கள். ஊசி போட்டார்கள்.

“அவர் மாத்திரம் இருக்கட்டும். நீங்கள்ளாம் போகலாம். இனிமே கவலையில்லை” என்றார் டாக்டர்.

“அப்ப நீங்க போங்க. நான் இருக்கேன். ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு” என்று நன்றி சொன்னார் பஞ்சு.

பாரங்குசத்தை வீட்டில் இறக்கிவிட்டது டாக்ஸி. வாத்தியாரும் இறங்கினார். பஞ்சு டாக்ஸிக்காகக் கொடுத்த மூன்று ரூபாய் போதவில்லை. காத்திருந்த கூலி ஒரு ரூபாய்க்கு மேல் ஏறியிருந்தது. மூன்று ரூபாய் ஆறணாவுக்குக் கையை விட்டு ஆறணாவை தந்தார் சரவணம். ஒரு ரூபாயைக் கொடுத்து மீதி பத்தணாவை வாங்கிக்கொண்டார்.

டாக்ஸி போனதும் திடீரென்று குழந்தையின் ஞாபகம் வந்தது சரவணத்துக்கு. அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு “ஒண்ணும் இல்லை. இந்த மாத்திரையைக் கொடுங்க சரியாயிடும்” என்று பராங்குசம் ஒரு மருந்தைக் கொடுத்தார்.

“என்ன கொடுக்கணும்?”

“ஒண்ணே கால் ரூபாய்.”

“ம் அப்புறம்…”

“கொடுங்களேன் நான் அந்தப் பக்கம் வந்தா வந்து பாக்கறேன்.”

“ரொம்ப நன்றி, பராங்குசம்.”

“இங்கேயே படுத்திருங்களேன். மணி ஒண்ணாச்சே. காலமே போயிக்கிறது.”

“குழந்தைக்கு மருந்து கொடுக்கணுமே!”

“அப்ப சரி, டாக்ஸியை விட்டுவிட்டீங்களே. சரி, ரிக்‌ஷாவாவது வைச்சிக்கிட்டுப் போங்க.”

“சரி, அப்ப வரட்டுமா?”

“ரைட், குட்நைட். ஒண்ணும் கவலைப்படாதீங்க, காலமே அந்தப் பக்கம் வந்தா வர்றேன்.”

“சரி.”

ரிக்‌ஷா எதற்கு? ஒன்றரை மைல்தான். நடந்தே போய்விடலாம். பையை எடுத்துச் சில்லறையை எண்ணினார். நயா பைசா எல்லாம் போய், ரூபாய், உடைந்து பத்தணா பாக்கி. தாகம் தாங்கவில்லை. சாயங்காலம் ஏழு மணிக்குச் சாப்பிட்டது. வெற்றிலைபாக்குக் கடையில் நாலு மலைப்பழமும் கலரும் சாப்பிட்டார். வெற்றிலை போட்டுக் கொண்டார். நடந்தார்.

ஹிஹிஹிஹி என்று யாரோ இருளில் சிரித்தார்கள்.

பாதி பயத்திலும் பிரமையிலும் உற்றுப் பார்த்தார் அவர். யாரும் இல்லை. ஜட்கா ஸ்டாண்ட்குதிரை! புல் தின்கிற சவடாலில் அது கனைத்தது. சரவணத்திற்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. வீடு போகிற வரையில் சிரித்துக் கொண்டே போனார். நிலவு எழுந்ததைக் கண்டு பொழுது புலர்ந்த திகைப்பில் நாலைந்து நார்த்தங்குருவிகள் வாழைத் தோப்பில் சிரித்துக்கொண்டிருந்தன.

கலைமகள்
அக்டோபர்,1957.

Feb 9, 2012

முள்முடி - தி.ஜானகிராமன்

”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்து கொண்டது.

”நான் வரேன் சார்” thija45

”நான் வரேன் சார்”

”சார். போய்ட்டு வரேன் சார்!”

நடுவில் ஒரு பையன் அவர் காலைத்தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண் டான். சட்டென்று காலை இழுத்துக்கொண்டார் அனுகூலசாமி.

”அட. இதென்னடா தம்பி”

”செய்யபட்டும் சார். இந்த மாதிரி யார் கிடைக்கப் போறாங்க அவங்களுக்கு?. நல்லாயிருக்கணும்னு உங்க வாயாலே சொல்லுங்க நடக்கும்” என்றார் கண்ணுசாமி.

அந்தப் பையனைப் பார்த்து மற்றப் பெண்கள் அத்தனை பேரும் அவர் காலைத் தொட்டுத் தொட்டு ஒற்றிக் கொண்டார்கள்.

அனுகூலசாமி குன்றிப்போய் நின்றார்.

”இதெல்லாம்...?” என்று அவர் இழுப்பதற்குள் கண்ணுசாமி இடைமறித்தார். ”அனுகூலசாமி. நீங்க நிஜமான கிறிஸ்தவர்.

”முகத்துக்கு சொல்லலே. முப்பத்தாறு வருஷம் பிரம்பைத் தொடாம அதிர்ந்து ஒரு வார்த்தை சொல்லாம வாத்தியாராய் இருக்கிறதுன்னா அந்த்த தெய்வத்தை விழுந்து கும்பிட்டாத்தான என்ன?”

”அதெல்லாம் சொல்லாதீங்க”

”நான் சொல்ல்லே. ஊர் முழுக்கச சொல்லுது. கடைத் தெருவிலே உக்காந்து நானும் விசாரிக்கிறேனா? வயத்திலே பொறந்த பிள்ளையைக்கூட ஒரு அடியாவது எப்பவாவது அடிக்காம இருக்க மாட்டாங்க. ஒரு வெசவாவது வெய்வாங்க. அதுகூட இங்கே பேசப்படாது! இந்த மாதிரி யாரால் இருக்க முடியும்? குழந்தையும் தெய்வமும் கொணடாடற இடத்திலே. இந்தக் குழந்தைகளை இன்னும் எத்தனையோ புள்ளைங்களை மனுஷப் பிறவிக்குக் கொடுக்கிற மரியாதை கொடுத்து மதிச்சீங்க..”

கண்ணுசாமி பேசும்போது பையன்கள் குனிந்து கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அனுகூலசாமிக்கு வாயைத் திறக்கவே முடியவில்லை. வாயைத் திறந்தால் குரல் உடைந்து நாக்குப் புரளும் போலிருந்தது.

”நான் வரட்டுமா.. அப்ப?”

”செய்யுங்க..” என்று சிரமப்பட்டு வாயைத் திறந்து உடனே மூடிக்கொண்டார் அவர்.

”எங்களுக்கு உத்தரவு கொடுக்கணும்” என்று முற்றத்தில் நாயனக்காரர் கும்பிட்டார். அதற்கும் அவரால் தலையசைக்கத்தான் முடிந்தது.

கூடத்துக் கூட்டம் முழுவதும வாசற்படி வழியாக வெளியே இரண்டு நிமிஷமாயிற்று.

இரண்டு மூன்று பையன்கள் கிசுகிசுவென்று பேசிவிட்டு ”சார். விளக்கு ரெண்டும் இங்கியே இருக்கட்டும். காலமே வந்த எடுத்துக்கறோம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.

வாசல்வரை கொண்டு விட்டுத் திரும்பி வந்தபோது கூடம் வெறிச்சிட்டுக் கிடந்தது. அந்தச் சூன்யமும் நெஞ்சைப் பிடுங்குகிற ஏக்கமும் முன்னே ஒரு தடவை வந்ததுண்டு. பத்து வருடம் முன்னால் லூயிசாவை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வரும்போது  வந்த அதே சூன்யம். அதே ஏக்கம்.

“புஸ்ஸ் என்று பெட்ரோமாக்ஸ் இரண்டும் சூன்யத்தை நிரப்பிக் கொண்டிருந்தன.

தனியாக விட்டு விட்டுப் போய்விட்டார்கள். நாளைக்குப் புதன்கிழமை. ஆனால் அவருக்கு சனி ஞாயிறு நாளை மறுநாள் அதற்கும் மறுநாள் - இனிமேல் எப்போதுமே சனி ஞாயிறுதான். பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் போக முடியாது. அவருக்கு வயது அறுபதாகி விட்டது. ஓய்வு கிடைத்து விட்டது.பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் போக முடியாது. அவருக்கு வயது அறுபதாகி விட்டது. ஓய்வு கிடைத்து விட்டது.

ஊஞ்சல் மீது உட்கார்ந்து கொண்டார் அவர். பக்கத்தி ப்ரேம் போட்ட ஏழெட்டு உபசாரப் பத்திரங்கள். ஒரு வெள்ளித் தட்டு. ஒரு பேனா. கடையில நாலு ரூபாய் விலை. ஆனால் இங்கு இந்தப் பேனாவுக்கு விலை கிடையாது. நாலு லட்சம். நாலு கோடி பெறும் என்று சொன்னால் வீண் வார்த்தை. ஏதோ இரண்டும் சமம் என்று ஆகிவிடும்.

கொர்னாப் பட்டையும் வெள்ளி நூலுமாக நாலைந்து ரோஜா மாலைகள் சுருண்டு கிடந்தன.

ஊஞ்சல் சங்கிலி இரண்டையும் பிடித்துக் கொண்டு நின்றாள் மகிமை. பேசவில்லை. அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். இத்தனை மேளதாளங்களும் தழதழப்பும் தனக்கு் கிடைத்தாற்போல ஒரு பார்வை. ஒரு நிமிஷம். அவரைப் பருகிக் கொண்டு நின்றவள் சட்டென்று வாசலுக்குப் போய்க் கதவைத் தாழி்ட்டு வந்து மாலைகளை ஒவ்வொன்றாக அவர் கழுத்தில் போட்டு தோள்களைப் பற்றி முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

”என்னைக் கூடத்தான் நீங்க அடிச்சதில்லே. அதிர்ந்து சொன்னதில்லே” என்று மார்பில் தலையைச் சாத்திக் கொண்டாள்.

”உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்ச காலம். ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல. அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக்கிட்டுப் போக்கணுமா? அடிச்சு யாரைத் திருத்த முடியும்? ”

”ராட்சசன் மாதிரி கோச்சுக்க வாணாம். ஆம்பிளையா இருக்கறத்துக்காவது ஒரு தடவை கோபம் வர வேணாம்?”

”வராமயா இருக்கும்?”

”வெளியிலே காமிக்கணும்”

”அதுக்குத்தான் பால்காரி வேலைக்காரி எல்லாம் இருக்கறாங்க உனக்கு. நான் வேற கோச்சுக்கணுமா?”

”பள்ளிக்கூடத்திலே அடிக்காம அதட்டாம இருக்க முடியுமா?”

”இருக்க முடிஞ்சுதே!”

பரவசமாகப் பார்த்துவிட்டு அவர் மீசையை இழுத்துவிட்டு ”காபி சாப்பிடறீங்களா?” என்று நகர்ந்து நின்றாள் மகிமை.

அவள் உள்ளே விரைந்தபோது தன் பிராணனே இன்னோல் உடம்பு எடுத்து விரைவது போலிருந்தது. மேலே சுவரைப் பார்த்தார். முள்முடியுடன் அந்த முகம் கருணை வெள்ளமாகப் பொழிந்து கொண்டிருந்தது. நாலைந்து படம் தள்ளி இன்னொரு படத்தில் அதே முகம் ஓர் ஆட்டுச் சிசுவை அணைத்துக் கொண்டிருந்தது.

கண்ணுசாமி சொன்னது அப்படியே உண்மைதான். முப்பத்தாறு வருஷ உத்தியோகத்தில் ஒரு பையனைக்கூட அடிக்கவில்லை. அதட்டிப் பேசவில்லை அவர்.

சுபாவமே அப்படி. லூயிசா பிறந்து பள்ளிக்கூடம் சேர்ந்து ஆறுவயதில் ஏதோ விஷமம் பண்ணியதற்காக வாத்தியாரிடம் அடி வாங்கிவிட்டது. அந்த வாத்தியார் ஸ்கேலால் அடித்தபோது சட்டைக்குள் இருந்த கோடைக்கட்டியின் மீது பட்டு... அப்பப்பா! - அன்று துடித்த துடி! அதைப் பார்த்ததும் சுபாவத்தை சங்கல்பமாகச் செய்துகொண்டார் அனுகூலசாமி. எல்லோரும் செய்த பாவங்களுக்குத் தன் உயிரை விலை கொடுத்தானே. அவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் சேர்த்துத்தான் கொடுத்தான்.

அந்த உறுதி முப்பத்தாறு வருஷமும் ஒரு மூளி விழாமல் பிழைத்து விட்டது.இல்லாவிட்டால் பதவியை விட்டு ஓய்வு எடுக்கிற எந்த வாத்தியாரை மேளதாளத்துடன்   வீடு வரை கொண்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

பள்ளிக்கூடத்தில நேற்று நடந்த பாராட்டுக்கள் போதாதென்று. அவர் வகுப்பு என்று நாற்பது பையன்கள் இருக்கிறார்களே அவர்கள் நினைத்திருக்க வேண்டும். இன்று நடந்தது அந்தக் கூட்டம்தான். மாலை மாலையாகப் போட்டார்கள். மடல் மடலாக வாசித்துக் கொடுத்தார்கள். இருந்தாற் போலிருந்து வராந்தாவில் ”உம்” என்ற ஒத்தும் தொடர்ந்து தவுலும் ஒலித்தன.

”என்ன தம்பி. இதெல்லாம்?”

”வேற யாருக்கு சார் செய்யப் போறோம்? வாங்க சார்” என்று நாட்டாண்மை மாதிரி நின்ற பெரிய பையன் அவரை அழைத்தான். அந்த ஆறுமுகத்துக்கு வயது இருபத்து மூன்று. இன்னும் பள்ளிக்கூடப் படிப்பு முடியவில்லை. வெகுகாலமாக வாசிக்கிறான். மற்றபடி உலக ஞானம் அதிகம். அனுகூலசாமி பதில் சொல்லாமல் அவன் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு விட்டார். இல்லாவிட்டால் மற்ற வாத்தியார்களைப் பற்றி ஆரம்பித்து விடுவான். நாலு வார்த்தை சொல்லிக் கூட விட்டான்.

”எங்களுக்குத் தெரியாதா சார்? நான் ரிடையராகப் போறேன் நிதி திரட்டுங்கன்னு நீங்க சொல்லலே. கில்டு நகையை வச்சுக் கடன் வாங்கலே. கடுதாசைக் காட்டிக் கடன் வாங்கி ஊர்ப்பாவத்தைக் கொட்டிக்கலே”

”சரி.. கொஞ்சம் தண்ணி கொண்டு வா” என்று என்னமோ சொல்லி அவனை அனுப்பிப் பேச்சை மாற்ற வேண்டியிருந்தது. அவன் வாயை அடைக்க வேண்டியிருந்ததே தவிர சொன்னது என்னமோ தப்பில்லை. ஊர்ப்பாவத்தைக் கொட்டிக்கொண்டதில்லை. ஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன. கடனை நாமம் சாத்தினால் என்ன? எல்லாம் ஒன்றுதான். அந்த ஹிம்சையும் அவர் கொடுத்ததில்லை.

நாரணப்பய்யரும் அவர் மாதிரிதான். சம்சாரம் அதிகம் இல்லை. ஒரு பிள்ளை. ஒரு பெண். ஆனால் மனுஷயனுக்கு நவத்துவாரமும் கடன். ஜவுளிக் கடையிலிருந்து கொத்தமல்லிக்காரி வரை காலணாவுக்கு மதிக்க முடியாத நிலை வந்துவிட்டது. இந்த நிலையிலும் நாரணப்பய்யர் சும்மா இருக்கவில்லை. பட்டணத்தில் கல்வி டைரக்டர் ஆபீஸிலே வேலை செய்கிற யாரோ உறவுக்காரன் ”உங்களை இந்த வருஷம் பரீட்சை அதிகாரிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். உத்தியோக பூர்வமாக இன்னும் இரண்டு வாரத்தில் கடிதம் வரும்” என்று ஒரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தைக் காட்டியே ஐம்பது எழுபத்தைந்து என்று இருபது பேரிடம் கடன் வாங்கிவிட்டார். அந்த வேலைக்குக் கிடைக்கப்போகிற கூலி என்னமோ இருநூற்றுச் சொச்சம்தான். கடைசியில் கடிதம் பொய்த்துவிட்டது. அவ்வளவுதான். ஷராப் கடை நாயுடு நாராணப்பய்யரை வளைத்துக் கொண்டு சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டுவிட்டார். ஏமாந்த கோபம். பிடுங்கினதா பெரிசு? சைக்கிளை ஓட்டுகிறது யார்? வாத்தியாராயிற்றே! நாராணப்பய்யரே உம்மால் இந்த இனத்துக்கே அவமானம்!

பாங்க் ஏஜெண்ட் அய்யங்காரை யாராவது ஏமாற்ற முடியுமோ? கடைந்த மோரில் வெண்ணெய் எடுக்கிறவர்! அவரிடம் இந்த சாமிநாதன் கைவரிசையைக் காட்டினாரே! வாத்தியார் என்று நம்பி சாமிநாதன் கொடுத்த சங்கிலியை எடைபோட்டு ஒன்பது பவுனுக்கு முன்னூறு ரூபாய் கடன் கொடுத்தார் அய்யங்கார். சாமிநாதன் பேசாமலிருந்திருக்கலாம். பதினைந்தாம் நாள் இன்னொரு சங்கிலியைக் கொண்டு போனால் அதையுமா உரைத்துப் பார்க்காமல் பணத்தை தூக்கிக் கொடுப்பார்கள்? சங்கிலியை உரைத்துக்கொண்டே புன்சிரிப்புடன் ”என்ன அய்யர்வாள்! பள்ளிக்கூடத்திலேயே பையன் சந்தேகம் கேட்டால் “சீ. அதிகப் பிரசங்கி. உட்காரு“ன்னு அதட்டி நம்ம அஞ்ஞானத்தை மறைச்சுக்கலாம். ஆனால் கடைத்தெருவிலே அது செல்லுமோ என்னமோ எனக்குத்தான் சரியாத்த தெரியலியோ என்னமோ.. சித்த இருங்கோ. பத்தரை அழைச்சிண்டு வரேன்” என்று வெளியே எழுந்து போனாராம் அய்யங்கார். சாமிநாதய்யருக்கு வயிற்றைப் புரட்டியது. பத்தரைக் கூப்பிட ஆள் இல்லையா? என்று சமாதானம் சொல்லலாம் என்று அவர் தேடுவதற்குள் பத்தர் வந்துவிட்டார். ”ஏட்டு”ம் வந்துவிட்டார். அந்த சாட்சிகளோடு கஜானா அறையைத்திறந்து பார்த்தபோது போன தடவை கொடுத்த சங்கிலியும் ' நான் பித்தளை' என்று பல்லை இளித்துக்கொண்டிருந்தது. அந்தச் சமயத்திலேகூட அய்யங்கார் வாத்தியார் குலத்துக்கு மதிப்புக்கொடுத்துவிட்டார். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் சாமிநாதய்யரின் அப்பத குழித் தோட்டத்தை எழுதி வாங்கிக் கொண்டு ஆளை விட்டுவிட்டார். நல்ல வேளை ”ஏட்டு”ம் உடையில் வராமல் வேட்டி சட்டையோடு போயிருந்தார்.கூட்டமில்லை. ஊர் சிரிக்காமல் போயிற்று.

இன்னும் நாலைந்து பேரின் நினைவு வந்தது. ”ஏண்டலெ! ரிடையராயாச்சு. இன்னமே கால் வயிறு சாப்பாடுதான். அந்த நாள்ளெ எங்க வாத்யாருக்கு நிதிதிரட்டிக் கொடுத்தோம் நாங்க” என்று ஒரு பையனைக் குழையடித்து வசூலுக்குக் கிளப்பிவிட்டார் ராமலிங்கம்.

காப்பியை எடுத்துக்கொண்டு வந்தாள் மகிமை.

”என்ன யோசனை? சாப்பிடுங்க. சூடு சரியாயிருக்கு” என்று உபசாரப் பத்திரங்களை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தாள். நடுநடுவே பெருமையுடன் அவரை நிமிர்ந்து பார்த்துக்கொண்டாள்.

”அதெல்லாம் நெசம்னு நெனைச்சுக்காதே. இனிமே வேலைக்கு வரமுடியாதுன்னா அளப்பொறானேன்னு உளுவாகக் காட்டியிருக்காங்க. சக்கரை முட்டாயி”

”தெரியும். ஆனா நெசத்தை மட்டும் எல்லாரும் சொல்லியிருக்காங்க” என்றாள் மகிமை. ”உங்கள் கை நீளாம குரல் வெடுவெடுக்காம இருந்தது நெசம்”

”த்ஸ பெரிய நெசத்தைக் கண்டுபிட்டாங்க”

”திறமைன்னு சொல்றதும் நெசந்தான்” என்றாள் மகிமை. ”தடியெடுக்காம அதட்டாம அப்படியே கெட்டிக்காரங்கன்னு பேர் எடுக்கறதும கஷ்டம்தானே?”

அனுகூலசாமி யோசித்துப் பார்த்தார். அதுவும் உண்மைதான் என்று பட்டது. அவருக்குக் கர்வப்படக்கூட உரிமை உண்டு என்று தோன்றிற்று.

”ஒரு கஷ்டமும் இல்லே. பால்காரி கூட்டுக்காரி கிட்டயும் அப்படி இருக்கலாம். மனுஷனாயப் பொறந்தவன் யாரும் புத்தியிருக்கறவன் யாரும் அடியிலே நம்பிக்கை வைப்பானா?”

”எல்லாருக்கும் முடியாதுங்க!”

”என்னமோ நான் இருந்துட்டேன்” என்றார் அவர்.

”சார்! என்று வாசற் கதைவைத் தட்டுவது கேட்டது.

”யாரு?”

”நான்தான்சார்!”

மகிமை போய்த்திறந்தாள்.

”சார் இருக்காங்களா?”

”இருக்காங்க.. யாரு? ஆறுமுகமா..வா!”

ஆறுமுகம் மட்டும் வரவில்லை. இன்னொரு பையனும் வந்திருந்தான். அவர் வகுப்பில படிக்கிற பையன்தான். கூட ஒரு அம்மாள். வயது நாற்பது நாற்பத்திரண்டு இருக்கும். நெற்றி காது மூக்கு கைகளில் ஒன்றுமில்லை. அனுகூலசாமி எழுந்து நின்றார்.

”என்ன சேதி. சின்னையா?”

”சின்னையன் அம்மா சார் இது” என்றான் ஆறுமுகம்.

”வாங்க!”

ஆறுமுகம் யாரையாவது அழைத்து வருவதென்றால் சிபார்சு என்று அர்த்தம். இருபத்து மூன்று வயதில் இன்னும் பள்ளிக்கூடத்தை முடிக்காத பையன்! நாட்டாண்மைக்காரன் மாதிரி ஒரு அந்தஸ்து உண்டு அவனுக்கு. எதற்கு வந்திருக்கிறானோ? பரீட்சை பேப்பர் கூட இல்லையே!

”என்ன ஆறுமுகம்?”

”சின்னையன் பாக்கணும்னானா சார்!”

”என்ன சேதி.. சின்னையா?”

சின்னையைன் பதில் பேசவில்லை. தலைகுனிந்து நின்றான். கேட்டு அரை நிமிஷம் ஆயிற்று. குனிந்த தலை நிமிரவில்லை அழுதான்.

”சொல்லுடா!” என்றாள் அந்த அம்மாள்.

உற்றுப் பார்த்தார் அனுகூலசாமி.

பையனின் முகச் சதை கோணிற்று. உதடு நடுங்கிற்று.

”சொல்லேண்டா” என்றான் ஆறுமுகம்.

”ஒரு வருஷமாத் துடிச்சுப் போயிட்டுதுங்க அது” என்றாள் அம்மா.

”ஒரு வருஷமாத் துடிச்சுப் போயிட்டுதா?”

”ஆமாம் சார்” என்றான் ஆறுமுகம். ”நீங்க இனிமே பேசலாம்னு சொல்லிடுங்க சார்!”

”நல்லாச் சொல்லேண்டா. எனக்கு ஒன்றும் புரியலியே!”

”சாருக்கு மறந்து போச்சு” என்று அந்த அம்மாளையும் மகிமையையும் பார்த்தான் ஆறுமுகம்.

”எனக்கு என்ன மறந்துபோய் விட்டது” - அனுகூலசாமி யோசித்து யோசித்துப் பார்த்தார். ஒன்றும் ஞாபகமில்லை.

ஆறுமுகம் சொன்னான். ”சார்! போனவருஷம் இவன் காயாரொகணத்தோட இங்கிலீஷ் புஸ்தகத்தை திருடிட்டுப் போயி வேறே பேர் ஒட்டி கடையிலே பாதி விலைக்கு வித்துப்பிட்டான். நான்தான் அதைக் கண்டு பிடிச்சு  உங்களிட்ட கொண்டாந்து நிறுத்தினேன்..”

பையன் விசும்பி விசும்பி அழவே ”சும்மா இருடா” என்று தாயார் அவனைச் சமாதானம் செய்தாள்.

”அப்புறம்?”

”நீங்க அவனைச் சித்த நேரம் பாத்தீங்க. நம்ப கிளாசிலே ஒரு பய இதுவரைக்கும் இந்த மாதிரி பண்ணினதில்லே. இனிமெ இந்தப் பயலோட ஒருத்தரும் பேசாதீங்கடா“ ன்னு சொன்னீங்க”

பையன் அழுகை நிற்கவில்லை.

”அன்னிலேந்து அவனை நாங்க ஒதுக்கிப்பிட்டோம் சார். யாரும் பேசறதில்லே.

அப்புறம் இன்னக்கி பார்ட்டி நடத்தினோமில்ல? அற்கு ரண்டு ஒண்ணுன்னு பையன்கள் கிட்ட வசூல் பண்ணினோம். இவனும் ஒரு ரூபா கொடுகடக வந்தான். வாண்டான்னுட்டோம். பார்டிக்கும் வரக்கூடாதுன்னிட்டோம். ஒன்னும் பேசாது போயிட்டான் நேத்து. இப்ப இங்கே வந்திட்டு வீட்டுக்குப் போனெனில்ல? அவங்க அம்மாளை அழச்சிட்டு வந்து திணணையிலே நின்னுகிட்டிருந்தான். இவங்க அம்மாவும் சொன்னாங்க அழச்சிட்டு வந்தேன்” என்று பயந்து மென்று விழுங்கிக் கொண்டே சொன்னான்.

அனுகூல சாமிக்கு அந்தச் சம்பவம் ஞாபகம் வந்துவிட்டது. ஆனால் இவ்வளவு கடுமையான தண்டனையா விதித்தோம்? ஏதோ சொல்லி வைத்தார். ஆனால் இவ்வளவு கண்டிப்பாகவா அதை நடத்தவேண்டும்.?

”சின்னையா. அழாதடா ஏய்?” என்றார் அவர்.

”நாங்கள்ளாம் அவனோட பேசலாம்னு சொல்லுங்க சார் நீங்க!”

”ஒரு வருஷமா அவன் சொரத்தாவே இல்லீங்க. எப்பவும் சிரிச்சுப் பேசிட்டு இருப்பான். இப்ப சரியாப் பேசறதில்லே. ஒரு வார்ததை பேசுவான். போயிடுவான். என்னமோ அதுங்க மனசிலே இருக்கறது நமக்குத் தெரியுதுங்களா? தங்கச்சிகளோட சரியாப் பேசறதிலலே. இன்னிக்கிச் சாயங்காலம்தான் எல்லாத்தியும் சொன்னான். ஊட்டுலே அதெல்லாம் விளைடப் போயிருந்திச்சு. வாத்தியாரை இன்னிக்குப் பார்த்தாத்தான் உண்டுன்னான். வந்தேன். நீங்க பெரிய மனசு பண்ணுங்க”

அனுகூலசாமி கையும் களவுமாகப் பிடிபட்டு விழித்தார்.புழுத்துதுடிப்பாக அவர் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது.

”பையனைச் சேத்துக்கு மாட்டேன்னிட்டாங்களாம். இதை இங்க கையாலே வாங்கிக்கிங்க. எல்லாரும் செய்யறப்ப அவன் மனசு கேக்குங்களா.. கொடுடா” என்றாள் அம்மா.

பையனுக்கு அழுகை அதிகமாகிவிட்டது. கையில் வேர்த்துக்கொண்டிருந்த ரூபாயை அவரிடம் நீட்டினான்.

”வாங்கிக்கிங்க சார்” என்று கெஞ்சினான் ஆறுமுகம்.

பேசாமல் வாங்கிக்கொண்டார்.

”ரொம்ப நல்ல பையன் சார். அன்னிக்கி ஏதோ புத்திப் பிசகா பண்ணிட்டான். அப்புறம் ஒரு புகார் கிடையாது சார் அவன்மேலே”

”நீங்க சொல்லுங்க பெரிய மனசு பண்ணி. கூட இருக்கறதுங்க பேசாம இருந்தா என்ன செய்யும்? சிறுசுதாங்களே!” என்றாள் அம்மாள்.

”இந்தப் பயலுங்க இப்படிப் பண்ணுவாங்கன்னு தெரியாம போயிடிச்சே எனக்கு” என்றார் அவர்.

”நீங்க சொன்னதைத்தானே செய்தாங்க” என்றாள் மகிமை.

”அது சரி” என்று லேசாகச் சிரித்தார் அவர். அழுகைதான் சிரிப்பாக வந்தது. மேலே படத்தில் தோன்றிய முள்முடி அவர் தலையை ஒருமுறை அழுத்திற்று.

**

சர்வதேசக் கதைகள் - தொகுப்பு சா.கந்தசாமி - கவிதா வெளியீடு - முதற்பதிப்பு டிசம்பர் 2003

தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்

Dec 5, 2011

சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு thija4 இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.

இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,

சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.

சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.

என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.

எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.

இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)

நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.

இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.

என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.

நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.

******

தொகுத்தவர் - மகரம். (1969)

நன்றி: சொல்வனம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்