Jan 30, 2010

வினோத ரசமஞ்சரி - விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது ***** வினோத ரசமஞ்சரி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை மொழி அதுவும் கவிதைமொழி அமைவது பெரும்பேறு கவிதை மொழியே கவித்துவம் போல யாருக்குக் கொடுக்கலாமென பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள் நூலறிவாளர்களை நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான் மரபறியாதவர்களை பெரிதாய் மதிப்பதில்லை ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களை ஒரு பொருட்டாய்...

Jan 29, 2010

'பொய்தேவு' க.நா.சுப்ரமண்யம்

க.நா.சுப்ரமண்யம் பள்ளிக்கூடத்துநிழல் 'பொய்தேவு' க.நா.சுப்ரமண்யம் 1946ல் எழுதிய ஒரு நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன் சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கை தேடல் குறித்த சுவையான படைப்பு. அதிலிருந்து ஒரு அத்தியாயம் இங்கு தரப்படுகிறது. மேட்டுத் தெருவுக்கு வெகு சமீபத்திலுள்ள பிள்ளையார் தெருவிலோ ஏதோ சொல்பந்தான் என்றாலும் கொஞ்சமாவது 'உடையவர்கள்' வீட்டிலே சோமசுந்தரம் பிறந்திருப்பானேயானால், ஐந்து வயசு ஆனவுடனே...

Jan 27, 2010

கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்

கி. ராஜநாராயணன் கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் வரவேற்பையும் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்ற நாவலிலிருந்து சில பகுதிகள்...   முதல் முதலில் அந்தக் கிராமத்தில் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. பெரிய பெரிய காங்கிரஸ் பேச்சாளர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னால் அவர்களில் சிலர் உணர்ச்சி...

Jan 26, 2010

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா   நாள்: 31 ஜனவரி 2010 நேரம்: மாலை 6 மணி இடம்: இக்ஸா செண்டர், 107 பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 8 (எழும்பூர் மியூசியம் எதிரே) வண்ணநிலவன் சி.மோகன் அ.மார்க்ஸ், எஸ்.ராமகிருஷ்ணன் சமயவேல் சங்கர ராம சுப்ரமணியன் வித்யாசங்கர் விக்கிரமாதித்யன் பற்றி பேசுகிறார்கள். கடைசியில் விக்கிரமாதித்யன் ஏற்புரை நிகழ்த்துகிறார். ‘நாடக வெளி’...

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது

  நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.  இந்த வருடன் 130 பேர் பத்ம விருது பெறுகின்றனர். 6 பேர் பத்மவிபூஷன் விருது பெறுகிறார்கள்; 43 பேர் பத்மபூஷன் விருது பெறுகிறார்கள்; 81 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஜாம்பவனான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி (வயது 80) கும்பகோணத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர்...

Jan 24, 2010

நெருப்புக் கோழி - ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள்தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன். வாலிபத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாகப் போவது வழக்கம். லயன் கரையின் புருவத்தில் கொய்யா மரங்கள் நெடுக இருந்தன. 'கனி வர்க்கத்தில் கொய்யா அப்படி...

Jan 23, 2010

ஊமைத் துயரம் - நீல பத்மநாபன்

நீல பத்மநாபன் ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது. விடைபெற்றுக் கொண்டிருந்த நித்திரை தேவியை வலுக்கட்டாயமாய் பிடித்திழுத்து வைத்துக் கொண்டு அவன் சரசமாடிக் கொண்டிருந்த காலை நேரம்... அழைப்பு மணி வீறிட்டது. வெளிக்கதவு திறக்கும் சப்தம். ஒரு நிமிட நேர நிசப்தம். பிறகு தன்...

Jan 19, 2010

கபாடபுரம் - புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் 1. கடல் கொண்ட கோவில் நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், 'முருகா' என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும்.   நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள்...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்