Jan 23, 2014
கவிஞர் விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது- 2014
Dec 12, 2013
தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது
2 நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3 பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4 மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
5 இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
6 குடை நிழல் (நாவல், 2010)
Apr 25, 2013
எம். எ. எம். நுஃமான்-க்கு விளக்கு விருது
இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள்
2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது.
பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் (2001), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (1987), திறனாய்வுக் கட்டுரைகள் (1986), பாரதியின் மொழிச்சிந்தனைகள் (1999), இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், (1979), அடிப்படைத் தமிழ் இலக்கணம் (2007) ஆகிய பேராசிரியர் நுஃமானின் முக்கியமான விமரிசன நூல்கள். மழைநாட்கள் வரும் (1983), அழியா நிழல்கள் (1982), தாத்தாமாரும் பேரர்களும் நெடுங்கவிதைகள் (1977), பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984) ஆகிய கவிதை நூல்கள் மிகப் பரவலாக அறியப்பட்டவை.
பாலஸ்தீனக்கவிதைகள், முப்பது கவிஞர்களின் 109 கவிதைகள் (2008), மொகமூத் தர்விஸ் கவிதைகள் (2008), பாலஸ்தீனக்கவிதைகள், 15 கவிஞர்களின் 71 கவிதைகள் (2000), காற்றில் மிதக்கும் சொற்கள் ( மலாய் மொழி கவிதைகள்), இரவின் குரல் (இந்தோனேசிய மொழி கவிதைகள்) ஆகியன குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புக் கவிதைகள், தொகுப்பு நூல்கள் பலவற்றையும் மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கைப் பெரேதனியப் பல்கைலக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியாகப் பணியாற்றும் நுஃமான் அவர்கள் அண்ணாமலைப்பல்கைலக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் மலாய்ப் பல்கலைக் கழகத்திலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இலங்கையிலுள்ள பன்னாட்டு இனவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றி வருகிறார்.
பரிசளிப்பு விழாத் தேதியும் பிற விவரங்களும் விளக்கின் இந்தியத் தொடர்பாளரான வெளி ரங்கராஜன் அவர்களால் விரைவில் வெளியிடப்படும்.
நா. கோபால்சாமி
விளக்கு அமைப்பாளர்
2013-01-17
| விருது விழா: பேராசிரியர் நுஹ்மானுக்கு விளக்கு விருதும் பாராட்டும்இடம்: பவள விழா கலையரங்கம் சென்னை பல்கலைக்கழகம் நாள் : ஏப்ரல் 26, 2013 வெள்ளிக்கிழமை நேரம்: 4.00 PM தலைமை:பா.ரா.சுப்பிரமணியம்,இயக்குனர் மொழி அறக்கட்டளை |
நன்றி: திண்ணை, வெளி ரங்கராஜன்
Jan 31, 2013
நுஃமானுக்கு விளக்கு விருது (2011)
இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள்
2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது.
பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் (2001), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (1987), திறனாய்வுக் கட்டுரைகள் (1986), பாரதியின் மொழிச்சிந்தனைகள் (1999), இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், (1979), அடிப்படைத் தமிழ் இலக்கணம் (2007) ஆகிய பேராசிரியர் நுஃமானின் முக்கியமான விமரிசன நூல்கள். மழைநாட்கள் வரும் (1983), அழியா நிழல்கள் (1982), தாத்தாமாரும் பேரர்களும் நெடுங்கவிதைகள் (1977), பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984) ஆகிய கவிதை நூல்கள் மிகப் பரவலாக அறியப்பட்டவை.
பாலஸ்தீனக்கவிதைகள், முப்பது கவிஞர்களின் 109 கவிதைகள் (2008), மொகமூத் தர்விஸ் கவிதைகள் (2008), பாலஸ்தீனக்கவிதைகள், 15 கவிஞர்களின் 71 கவிதைகள் (2000), காற்றில் மிதக்கும் சொற்கள் ( மலாய் மொழி கவிதைகள்), இரவின் குரல் (இந்தோனேசிய மொழி கவிதைகள்) ஆகியன குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புக் கவிதைகள், தொகுப்பு நூல்கள் பலவற்றையும் மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கைப் பெரேதனியப் பல்கைலக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியாகப் பணியாற்றும் நுஃமான் அவர்கள் அண்ணாமலைப்பல்கைலக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் மலாய்ப் பல்கலைக் கழகத்திலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இலங்கையிலுள்ள பன்னாட்டு இனவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றி வருகிறார்.
பரிசளிப்பு விழாத் தேதியும் பிற விவரங்களும் விளக்கின் இந்தியத் தொடர்பாளரான வெளி ரங்கராஜன் அவர்களால் விரைவில் வெளியிடப்படும்.
நா. கோபால்சாமி
விளக்கு அமைப்பாளர்
2013-01-17
தகவல் : திண்ணை
Jan 18, 2013
பிரபஞ்சனுக்கு சாரல் விருது 2013
விழா அழைப்பிதழ்
Dec 16, 2012
பூமணிக்கு கீதாஞ்சலி விருது – தமிழ்மகனுக்கு கோவை இலக்கிய விருது
நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது 2012
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது.
இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது.
சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை , எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன், பம்பாய் தமிழ் சங்கம் வெளியிட்டு வந்த ‘ஏடு’ இதழில் தன் இலக்கியப்பணியைத் தொடங்கினார். 1975-ம் ஆண்டு வெளிவந்த ‘விரதம்’ சிறுகதையில் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். இருபத்தைந்து வயதிலேயே வேலை நிமித்தமாக சொந்த ஊரை விட்டுச் சென்றிருந்தாலும் இவரது படைப்புகளில் நாஞ்சில் நாட்டு மக்களும், மொழியுமே பிரதானமாக வெளிப்படுகின்றன. இவர் சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர்.
இதுவரை 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் என வெளியிட்டுள்ளார்.
சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காக 2010-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.
இவரது நாவல்களும், சிறுகதைகளும் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லியிலுள்ள பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 14 பேர் இவரது படைப்புகளை முன்வைத்து முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. தவிர, இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ திரைப்படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார்.
‘அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று சொல்லும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு, 2012ம் வருடத்து இயல் விருது எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும்.
Dec 8, 2012
தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது 2012
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது. 22- 12-2012 அன்று மாலை கோவையில் விழா நிகழ்கிறது.
இது விஷ்ணுபுரம் அமைப்பின் மூன்றாவது விருது. முதல் விருது 2010-இல் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது விருது 2011-இல் எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்பட்டது.
ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி
சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை
ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
----------------------------------------------------------------
விழா அழைப்பிதழ்
Jan 28, 2012
ந.முத்துசாமிக்கு பத்மஶ்ரீ விருது
| நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான ந.முத்துசாமிக்கு இந்த வருடத்தின் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள். |
Jan 17, 2012
எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது(2011)
2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக க டந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.
இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.
’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
தகவல்: அ.முத்துலிங்கம் தளம்
Jan 13, 2012
தேவதச்சனுக்கு விளக்கு விருது
நவீனத் தமிழ்க் கவிதையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான தேவதச்சனுக்கு 2010ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது. நாற்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கிய விருது இது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான ‘விளக்கு’ புதுமைப்பித்தன் நினைவாக வழங்கும் இந்த விருதை இதுவரை தமிழின் முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.
எழுபதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய தேவதச்சன் நவீனக் கவிதையின் புதிய வடிவமைப்பைக் கட்டமைத்தவர்களில் ஒருவர். இவரது கவிதைகள் அன்றாட வாழ்வின் எளிய சொற்களில், நழுவும் கணங்களை நுட்பமாகச் சித்தரிக்கின்றன. ஆனந்துடன் இணைந்து அவரவர் கைமணல் என்னும் முதல் தொகுதியை தேவதச்சன் வெளியிட்டார். அத்துவான வேளை, கடைசி டைனோசார், யாருமற்ற நிழல், ஹேம்ஸ் என்னும் காற்று, இரண்டு சூரியன் ஆகியவை பிற கவிதைத் தொகுதிகள். கவிஞர் தேவதச்சனுக்குக் அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி: காலச்சுவடு
Dec 21, 2011
சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது
எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.
தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
அழியாச்சுடர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகள்.
Dec 17, 2011
சாரல் விருது 2012
- வண்ணதாசன் படைப்புகள் சில
- வண்ணநிலவன் படைப்புகள் சில
Dec 6, 2011
பூமணி-க்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது
மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு
ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்
பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு
டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை
கலந்துகொள்ளும் ஆளுமைகள்
எழுத்தாளார் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளார் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி
உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)
Apr 21, 2011
எஸ். ராமகிருஷ்ணனுக்கு தாகூர் இலக்கிய விருது
தாகூர் இலக்கிய விருது
மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,
91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,
இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்
2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.
யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது, அவ்வகையில் மிகுந்த பெருமையடைகிறார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மே மாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
•••
அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்
Dec 20, 2010
நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்காக எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சூடிய பூ சூடற்க
கிடைக்குமிடம்;
தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயாப்பேட்டை, சென்னை..6000014
தொலைபேசி: +91-9884196552
இணையத்தில் வாங்க : உடுமலை.காம்
Dec 17, 2010
திலீப்குமார், ஆ.மாதவன் - விருதுகள்
| ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ | திலீப்குமார் ‘விளக்கு’ |
இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் அழியாச்சுடர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. விளக்கு அமைப்பு, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இரண்டுக்கும் அழியாச்சுடர்கள் சார்பாக தேர்ந்த எழுத்தாளர்களைக் கெளரவிப்பதற்காக நன்றிகளும், வாழ்த்துகளும்.
‘திலீப்குமார்’ குறித்த சுட்டிகள்:
மெளனியுடன் கொஞ்சதூரம் - திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை
மாநகரகோடை - திலீப்குமார் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
அக்கிரகாரத்தில் பூனை - திலீப்குமார் சிறுகதை
திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்
மொழியின் எல்லைகளைக் கடந்து - வெங்கட் சாமிநாதன்
திலீப்குமார் - ஜெயமோகன்
திலீப்குமார் - இணையத்திலிருந்து சில தொகுப்புகள் - பாஸ்டன் பாலா
திலீப்குமார் - அழியாச்சுடர்கள் தொகுப்பு
மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
ஆ.மாதவன் - சுட்டிகள்:
பாச்சி - ஆ.மாதவன் சிறுகதை
ஆ.மாதவன் குறித்து அ.முத்துலிங்கம்
ஆ.மாதவன் - ஜெயமோகன்
ஆ.மாதவன் விக்கி இணையப்பக்கம்
ஆ.மாதவன் - அழியாச்சுடர்கள் தொகுப்பு
ஆ.மாதவன் நூல்களை இணையத்தில் வாங்க:
கிருஷ்ணப்பருந்து - தமிழினி பிரசுரம்
ஆ.மாதவன் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி பிரசுரம்
புனலும், மணலும் - காலச்சுவடு பிரசுரம்
இனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன் மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு
நன்றி: சொல்வனம்
Jan 26, 2010
கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது
கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா
நாள்: 31 ஜனவரி 2010
நேரம்: மாலை 6 மணி
இடம்: இக்ஸா செண்டர்,
107 பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை – 8
(எழும்பூர் மியூசியம் எதிரே)
வண்ணநிலவன்
சி.மோகன்
அ.மார்க்ஸ்,
எஸ்.ராமகிருஷ்ணன்
சமயவேல்
சங்கர ராம சுப்ரமணியன்
வித்யாசங்கர்
விக்கிரமாதித்யன் பற்றி பேசுகிறார்கள்.
கடைசியில் விக்கிரமாதித்யன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
‘நாடக வெளி’ ரங்கராஜன் ‘விளக்கு விருது’ அமைப்பினர் சார்பாக இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு செய்துள்ளார்.
அனைவரும் வருக
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது
நேற்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த வருடன் 130 பேர் பத்ம விருது பெறுகின்றனர். 6 பேர் பத்மவிபூஷன் விருது பெறுகிறார்கள்; 43 பேர் பத்மபூஷன் விருது பெறுகிறார்கள்; 81 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள்.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஜாம்பவனான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி (வயது 80) கும்பகோணத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கநாதன் பார்த்தசாரதி.
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழில் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கிய உலகில் சிறந்த எழுத்தாளராக உயர்ந்த இவர், ஏசுவின் தோழர்கள், சத்திய சோதனை, குருதி புனல், தந்திரபூமி, ராமானுஜர், வெந்து தணிந்த காடுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார்.
இவர் மொத்தம் 15 நாவல்கள், 4 குறுநாவல்கள், 6 சிறுகதைகள், 10 நாடகங்கள், 2 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை படைத்துள்ளார். பன்முகத் திறமைகள் கொண்ட இவர், சாகித்திய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்பட 8-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறா
நன்றி..
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்
