Showing posts with label ப.சிங்காரம். Show all posts
Showing posts with label ப.சிங்காரம். Show all posts

Jan 29, 2011

ப. சிங்காரம்: அடங்க மறுக்கும் நினைவு – எஸ்.ரா

ப.சிங்காரம் என்ற பெயர் புது யுகம் பிறக்கிறது இதழில் சி. மோகன் எழுதிய நாவல் பற்றிய கட்டுரையில்தான் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது. மோகன் தமிழின் சிறந்த நாவலாசிரியர் வரி சையில் சிங்காரத்திற்குத் தனியி டம் அளித்திருந்தார். அந்த நாட் களில் ஜானகிராமன், ஜெயகாந் தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்று தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த எனக்கு சிங்காரம் யார் என்ன எழுதியிருக் கிறார் என்ற குsingaram---26ழப்பம் உண்டா னது. எனது சேமிப்பிலிருந்த சிறு பத்திரிகைகளைப் புரட்டிப்புரட் டிப் பார்த்தபோது சிங்காரத்தைப் பற்றிய சிறுகுறிப்பு கூடத் தென்பட வில்லை.

மறுநாளே பொதுநூலகத்திற்குச் சென்று சிங்காரத்தின் நாவலைத் தேடத் துவங்கினேன். இரண்டு  நாட்கள் தேடிச்சலித்த போதும் நாவலைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. திடீரென ஒரு சந்தேகம் வந்தது. நூலகங்களில் உள்ள பொருள்பகுப்பு முறை மிக விசித் திரமானது. அங்கே ஜானகி ராம னின் சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகுப்பு சித்த வைத்திய பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. அது போலவே சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை  இயற்கைநூல் பிரிவிலிருந்தது.

இப்படியான வகைப்பாட்டியிய லில் சிங்காரம் மாட்டிக்கொண்டி ருக்கக்கூடும் என்ற யோசனை யோடு கடல் தொடர்பாகப் புத்த கங்கள் உள்ள விஞ்ஞானப் பிரி வில் தேடியபோது அதில் கட லுக்கு அப்பால் என்ற சிங்காரத் தின் நாவலிருந்தது. அந்தப் புத்த கத்தை அதுவரை மொத்தமே நான்கு பேர்தான் படித்திருக் கிறார்கள் என்பது முன்பக்க நூல கப் பதிவில் தெரிந்தது. உடனே வீட்டிற்கு எடுத்துச் சென்று மாலைக்குள்ளாகவே படித்து முடித்தேன்.

கதை சொல்லும் முறையும், பின்புலமும் தமிழ் நாவலைத்தான் படிக்கிறேனா என்று வியப்பூட்டும் படியாக இருந்தன. குறிப்பாக பர் மீய தமிழ்வாழ்வும் யுத்தகாலப் பின்புலமும் நாவலுக்குப் புதிய தொரு தளத்தினை உருவாக்கியிருந் தது. அதே சமயம் நாவலின் ஊடா கவே வெளிப்படும் பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயமும், பிரயோக மும் இதை எழுதியவர் தேர்ந்த இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் என்பதையும் புரிந்து கொள்ளச் செய்தது.

அராபியக் கதைகளில் வரும் பாக்தாத்தைவிடவும் மதுரை மாநகரம் அதிகக் கதைகள் கொண் டது என்று எனக்கு எப்போதுமே ஒரு எண்ணமுண்டு. குறிப்பாக மதுரையின் சிறுசந்துகள், தினசரி வாழ்வு சார்ந்த மனிதர்கள். நகரின் புதிரான சரித்திரம் மற்றும் மதுரை யின் மைய வாழ்வைச் சுற்றி நடை பெறும் நூற்றுக்கணக்கான நிகழ்வு களின் பின்னால் அறியப்படாத ஓராயிரம் கதைகள் புதைந்திருக் கின்றன. மதுரையின் இரவும் பக லும் இன்று வரை முழுமையாகக் கதையுலகில் பதிவு செய்யப்படவே யில்லை.

சிங்காரம் காட்டும் மதுரையும் அதன் மனிதர்களும் மிக நெருக்க மானவர்களாகயிருந்தார்கள். ஒரு வேளை சிங்காரத்தைப் பிடித்திருப் பதற்கான காரணமாக அதுகூட இருந்திருக்கக்கூடும். புத்தகத்தில் சிங்காரத்தைப் பற்றிய சிறுகுறிப்பு கூடக் கிடையாது. கலைமகள் பரி சுப் போட்டியில் தேர்வு பெற்றது என்பதைத் தவிர வேறு தகவல்கள் இல்லை.

அன்றிரவு கோணங்கியைச் சந்திப்பதற்காகக் கோவில்பட்டியி லிருந்த அவரது வீட்டிற்குச் சென் றேன். ரயில்வே தண்டவாளத்தை யட்டியது கோணங்கியின் வீடு. இரவு பூச்சிகளின் சப்தமும் மின் மினி வெளிச்சமுமாக உள்ள அந்த ரயில்பாதை நினைவில் என்றும் ஒளிர்ந்துகொண்டிருக்கக் கூடியது. நள்ளிரவில் செல்லும் கூட்ஸ் ரயில் கள் நமது பேச்சை நிறுத்தியபடியே கடந்து செல்வதை வேடிக்கை பார்ப்பது தனி அனுபவம்.

அன்று மழை பெய்து வெறித்த இரவு. திட்டுத் திட்டாக இருள் பதுங்கியிருந்தது. கோணங்கி வீட் டின் மொட்டைமாடிச் சுவரில் அமர்ந்தபடியே  சிங்காரத்தின் எழுத்து பற்றிப் பேசத் துவங்கிய தும் அவர் ரொம்பவும் சிலாகித் துச் சொல்லத் துவங்கினார். கோணங்கிக்கு ஐம்பது ஆண்டு களுக்கு முற்பட்ட மதுரையைப் பற்றிய  விவரிப்பு மற்றும் ஐஎன்ஏ நிகழ்வுகள் அவரை வசீகரித் திருந்தது.

நான் அதன் சில மாதங்களுக்கு முன்புதான் எரிக் மரியா ரிமார்க் கின் All Quites in the western front நாவலை வாசித்திருந்தேன். அது தந்த நெருக்கம் மனதில் அப்ப டியே நின்றிருந்தது. அந்த நாவலை யும் சிங்காரத்தின் எழுத்தும் பற்றிப் பேசத் துவங்கிய போது கோணங்கி சிங்காரத்தினை மறுநாள் பார்க்க லாமா என்று கேட்டார். சிங்காரம் எங்கே வசிக்கிறார் என்ற போது அவர் மதுரையில் இருப்பதாகவும், தான் இரண்டு முறை அவரைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். மறுநாள் ஏழு மணிக்கே  மதுரைக் குப் புறப்படலாம் என்று முடிவு செய்தோம்

அதுவே தாமதம் என்று உள் மனது சொன்னது. காரணம் யாரா வது ஒரு எழுத்தாளரைப் படித்து முடித்தவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எந்த நள்ளிரவு என்பதைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல் நானும் கோணங்கியும் உடனே கிளம்பி விடுவோம்.

சில எழுத்தாளர்களின் வீட்டில் அதிகாலை வாசற்கதவு திறக்கும் போது எதிரில் நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். சில நேரம் எழுத்தாளரே இல்லாத போதும்கூட அவரது வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டு வீட்டு விருந்தாளிபோலச் சாப் பிட்டு தூங்கி எழுந்து வந்ததும் நடந்தேறியிருக்கிறது.

காலை மதுரையில் போய் இறங்கியதும் கோணங்கி நேரடி யாக அன்னம் புத்தகக்கடைக்கு அழைத்து சென்றார். அந்த நாட் களில் மதுரையின் இலக்கிய மைய மாக இருந்தது அன்னம் புத்தகக் கடை. அநேகமாக மதுரைக்குள் வரும் எழுத்தாளர்கள் தவறாமல் அங்கே வருவதைக் காணமுடியும். அத்துடன் நண்பர்கள் சந்திப்பிற் கும் உரையாடலுக்குமான கலாச் சாரவெளியாக உருவாகியிருந்தது. மதுரைக்கு வந்து இறங்கியதி லிருந்து சிங்காரத்தைச் சந்திப் பதைப் பற்றிக் கோணங்கி எதுவும் பேசவேயில்லை. பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று சுற்றிவிட்டு மீனாட்சி மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு வெயிலேற நடந்து திரிந்த போதும் சிங்காரம் எங்கேயிருக் கிறார் என்று சொல்லவேயில்லை.

முடிவில் நான்கு மணிக்கு நேதாஜி சாலையிலிருந்த ஒய்எம்சி ஏவின் தங்குமிடத்திற்கு அழைத் துக்கொண்டு போனார். சிங்காரம் அங்கேதானிருக்கிறார் என்ற தகவ லுடன் படியேறும்போது மனதில் இந்திய தேசியத்தைச் சேர்ந்த ராணுவ வீரரைப் போன்ற தோற் றத்தில் சிங்காரம் உருவானார்.

சிங்காரத்தின் அறைக்கதவு சாத் தப்பட்டிருந்தது. கீழே உள்ள ஆவின் கடை அருகே நின்று கொண்டிருப்பார் என்று சொல் லியபடியே அவரது தினப்படி அலுவல் அறிந்தவரைப் போல விடுவிடுவெனக் கீழே இறங்கினார் கோணங்கி. இருவரும் வீதிக்கு வந்தபோது நகைக்கடை வீதியிலி ருந்து தலைகவிழ்ந்தபடியே நடந்து வந்து கொண்டிருந்த பெரியவரி டம் கோணங்கி சென்று ஏதோ பேசியதும் அவர் தலையசைத்த படியே உடன் வந்தார்.

அவர்தான் ப.சிங்காரம் என் பதை மனது ஏற்றுக்கொள்ள மறுத் தது. சிங்காரம் அருகில் வந்ததும் சிரிப்பான தொனியில் உங்களைப் பார்க்க வந்திருக்கான் என்று கோணங்கி சொன்னார். தன்னைப் பார்ப்பதற்காக எதற்காக வந்திருக் கிறார்கள் என்ற பாவனை அவரது முகத்திலே இருந்தது. எந்தூரு என்று சுத்தமான மதுரைத் தமிழில் சிங்காரம் கேட்டார். பதில் சொன் னதும் தலையாட்டிக் கொண்டார்.

சிங்காரம் முகத்தில் வெளிப் படாத சிரிப்பு ஒன்று ஒளிந்திருப் பதை அறியமுடிந்தது. அறுபது வயதைத் தொட்ட தோற்றம். வழுக் கையேறிய நெற்றியும் பெரிய காது களும்  தடித்த புருவங்களும் மீசை யில்லாத முகமும் கொண்டிருந் தார். காது ரோமங்கள் நீண்டிருந் தன. ஒற்றைத்தட்டு வேஷ்டியும் கதர்சட்டையும் அணிந்திருந்தார். தோற்றத்தை வைத்துப் பார்த்தால் மதுரையில் பலசரக்குக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளில் ஒருவரைப் போன்ற ஜாடையே இருந்தது.

தனது சட்டைப் பையிலிருந்த சாவியால் அறைக்கதவைத் திறந்து உள்ளே அழைத்து அங்கிருந்த கட் டிலில் உட்காரும்படியாகச் சொன் னார். கோணங்கி முன்னதாகவே அறிமுகமாகியிருந்த காரணத்தால் சற்றே உரிமையுடன் சிங்காரத்து டன் பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசுவது என்று புரியமால் சில நிமிசங்கள் அமைதியாக இருந் தேன். உங்க நாவலைப் படிச்சிருக் கான். அதைப் பத்தி உங்ககிட்டே பேசணும்னு சொன்னான். காலேஜ்ல இங்கிலீஷ் லிட்ரேசர் படிக்கிறான் என்று என்னை அறி முகம் செய்து வைத்தார்.

சிங்காரம் தன் நாவலைப் பற்றிய கருத்தை அறிய விருப்ப மற்றவரைப் போல உங்க ஊரு மல்லாங்கிணர்ல மஞ்சள் காமா லைக்கு மருந்து கட்டுற ஒரு பொம் பளை இருக்குல்லே என்று விசா ரிக்கத் துவங்கினார். ஆமாம் என்ற போது தனக்குத் தெரிந்தவரின் மகளுக்குக் காமலைக்குப் பச்சிலை கட்டுவதற்காக அங்கே ஒரு முறை வந்திருப்பதாகச் சொன்னார். அவ ரது பேச்சு காமாலை, காலரா என்று முன்நாட்களின் தீராத வியாதிகளைப் பற்றியதாக நீண் டது. ஆனால் பேச்சு வளராமல் சில நிமிசத்தில் தானே அறுபட்டு நின்றது.

சிங்காரம் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசிக்கிறார், அதுவும் இதுபோன்ற ஒற்றையறை யில் மாதவாடகைக்குத் தங்கிக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட் டுக்கொண்டு மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று முன்னதாகவே கோணங்கி சொல்லியிருந்ததை மெய்யாக்கு வது போன்றிருந்தது அவரது அறை.

அந்த அறையில் இரண்டு ரங் கூன் பெட்டிகள் இருந்தன, மர மேஜையின் மீது வாடிப்போன வாழைப்பழம் ஒன்றிருந்தது. சிகரெட்டு அட்டை ஒன்றில் ஏதோ சில கணக்குகள் குறித்து வைக்கபட்டிருந்தன. ஜன்னல் அருகே ஈர வேஷ்டி ஒன்று காய்ந்து கொண்டிருந்தது. அறையின் மூலையில் சிவப்பு நிற மண் பானையன்று காணப்பட்டது. கட்டிலின் அருகில் பழைய தினந் தந்தி பேப்பர்கள் தூசியடைந்து கிடந்தன.

அறைக் கதவைக்கூடப் பாதியே திறந்து அவர் பயன்படுத்தி வரு கிறார் என்பது திறக்கப்படாத மறு பாதியில் படிந்திருந்த நூலம்படை யிலிருந்து தெரிந்தது. மின்சார மில்லாவிட்டால் அந்த அறையில் ஒரு நிமிசம்கூட இருக்க முடியாது என்பதை அங்கிருந்த வெக்கை யால் உணர முடிந்தது. சிங்காரம் தன் சட்டையைக் கழட்டிக் கட்டி லின் மீது போட்டுவிட்டு வெறும் மேலோடு உட்கார்ந்து கொண் டார்.

கோணங்கி வேடிக்கையாக இந்தப் பெட்டிக்குள் ரங்கூனை அடைத்துக்கொண்டு வந்துவிட்டீர் கள் போலிருக்கிறது என்றபடியே அதைத் திறந்து பார்க்கலாமா என்று கேட்டார். சிங்காரம் அதுல என்ன இருக்கு சும்மா பாருங்க என்றார்.

கோணங்கி பெட்டியைத் திறந்த போது உள்ளே பழைய உடுப்பு களும், ஓடாத அலாரம் கடிகாரம் ஒன்றும் ஒரு பிளாஸ்டிக் கவரும் மட்டுமேயிருந்தது. அவர் ஒரு எழுத்தாளர் என்று அங்கிருந்தவர் களுக்குத் தெரியுமா என்று கோணங்கி கேட்டதும் அதெல் லாம் ஒரு ஆளுக்கும் தெரியாது. அப்படி நான் சொல்றதும் இல்லை. சொல்ற மாதிரி என்ன எழுதியிருக்கேன் என்று கேட்டார்.

பேச்சு ஐம்பது வருடத்திற்கு முந்திய மதுரையைப் பற்றியதாகத் திரும்பியது. அதிகம் மின்சார வசதி இல்லாத மதுரையின் தெருக் களும் அருகாமை கிராமங்களில் இருந்து மதுரைக்கு வந்துபோகும் மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் சிங்காரம் சொல்லிக் கொண்டிருந்தார்.

கோணங்கி, இரவில் துணிகளை ஏலம் போடுகின்றவர்கள் மதுரை யின் அந்த நாட்களில் வருவார்கள் தானே என்று கேட்டார். ஆர்வத் துடன் சிங்காரம் அந்த மதுரையே வேற. அப்போ மேலூரில் இருந்து நாங்க மதுரைக்கு வந்து இங்கேயே சுத்துவோம். கோவிலை விட்டா வேற என்ன இருக்கு மதுரையில். ஏலத்தில போர்வை துண்டு எல் லாம் நானே எடுத்திருக்கிறேன் என்றார்.

என்னால் அதன்பிறகும் பொறு மையாக இருக்க இயலாது என் பதைப் போல கடலுக்கு அப்பால் நாவல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஏதோவொரு விதத்தில்  அது எரிக் மரியா ரிமார்க்கின் நாவலைப் போன்றிருக்கிறது என்று சொன் னேன். அவர் சிரித்துக்கொண்டே தனக்கு அதிக வாசிப்பு அனுபவம் கிடையாது. நாவலில் உள்ள பெரும்பான்மை விஷயங்கள் தனது சொந்த வாழ்க்கை, சில சம்பவங்கள் தான் நேரில் கண்டது என்றார்.

கடலுக்கு அப்பால் முழுமை பெறாத நாவல் போன்றிருக்கின் றது என்றதும் ஒரு அளவுக்குத் தான் சொல்லியிருக்கிறேன். எதை எழுதாம விடணும்னு தெரிஞ்சி கிடுறது தானே எழுத்தில முக்கியம் என்றார். சிங்காரம் எழுத்தாளர் என்பது அந்த நிமிசத்தில் உறுதியா னது. தனது நாவல் உரிய முறை யில் வெளியிடப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவரது பேச்சில் வெளிப்பட்டது.

நாவல் வெளிவந்து பலவரு டங்களுக்குப் பிறகு தந்தி பேப்ப ரில் மட்டும் சிறிய விமர்சனம் வந்துள்ளதாகவும் வேறு எதிலும் யாரும் கண்டு கொள்ளவே யில்லை என்றார். அத்துடன் இந்த நாவல் எழுதப்பட்டு பல மாத காலம் பெட்டி யிலே சீந்துவாரற்றுக் கிடந்தது. யாரும் அதை வெளியிட முன்வர வில்லை. தனக்கும் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை.

கடைசியில் கலை மகள் நாவல் போட்டி யின் தேர்வுக்கு அனுப்பி வைத்தேன். புத்தகமாக நாவல் வெளியிடப்பட்டபோது சில வாசகங்கள். பத்தி கள் நீக்கப்பட்டிருக் கின்றன. இப்போகூட யாரோ மோகன்னு மதுரைக்காரர் ஏதோ எழுதினதுக்கு அப்புறம் தான் உங்களை மாதிரி ஒன் றிரண்டு பேர் பார்க்க வருகிறார் கள் என்று சொன்னார்.

எது உங்களை இப்படியரு நாவலை எழுத வைத்தது என்று கேட்டவுடன் சிங்காரம் தனக்கு ஹெமிங்வேயின் நாவல்கள் பிடிக் கும் என்றும் அதைத் தான்  தொடர்ந்து வாசித்திருப்பதாகச் சொன்னார். வியப்பாக இருந்தது. ஹெமிங்வே எனது ஆதர்ச எழுத் தாளர்களில் ஒருவர், உடனே நான் அவரிடம் ஹெமிங்வேயைப் பற் றிப் பேசத் துவங்கினேன். அவரது எந்த நாவல் உங்களுக்கு ரொம்ப வும் பிடித்தது என்றவுடன் அவர் பேர்வெல் டு ஆர்ம்ஸ் என்று சொன்னார்.

சில வருடங்களுக்குப் பிறகு சிங்காரத்தின் நாவல்களை ஒருசேர வாசித்தபோது ஹெமிங்வேயின் நுட்பமான பாதிப்பு அவரிடமிருப் பதை உணர்ந்து கொள்ள முடிந் தது. குறிப்பாக சலூன்களில் சென்று நண்பர்கள் சந்திப்பது. மது அருந்திவிட்டு உணர்ச்சிபூர்வ மாக உரையாடுவது, பேச்சின் இடையில் பழைய சம்பவங்கள் குறுக்கிடுவது போன்றவற்றில் ஹெமிங்வே சாயல் தெளிவாகவே தெரிந்தது.

ஹெமிங்வேயை எங்கே படித் தீர்கள் என்று கேட்டேன். தான் ஒரு கடைப்பையனாக வேலை செய்வதற்காக பர்மா போனதாக வும் அதற்காக நாகப்பட்டினத்திலி ருந்து கப்பலில் சென்று ரங்கூனில் உள்ள ஒரு செட்டியிடம் கடைப் பையன் போல வேலை செய்யத் துவங்கி பிறகு அங்கேயே வேறுசில வேலை பார்த்தாகவும், தங்கியிருந்த இடத்தின் அருகாமையில் உள்ள நூலகத்திற்குச் சென்று படித்து வரு வது தனக்குப் பழக்கம் என்றும் அதிகம் வாசிப்பதற்கு நேரம் கிடைக்காது என்றும் சொன்னார்.

அந்த நாட்களில் பர்மா வாழ்க்கை எப்படியிருந்தது என்று கேட்டவுடன், தான் வேலைக்குச் சென்ற நாட்களில் பெரிய கொந்த ளிப்புகள் இல்லை. ஆனால் இரண் டாவது உலக யுத்தம் துவங்கிய பிறகு பர்மாவில் ஏற்பட்ட மாற்றங் கள் மறக்க முடியாதவை. குறிப் பாக ஜப்பானிய ஆக்ரமிப்பு மற் றும் இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சி போன்றவற்றைத் தான் கண் எதிரில் பார்த்திருப்பதாகச் சொன்னார்.

பிறகு அவர் தன் நினைவில் மூழ்கிவிட்டதைப் போன்று அமைதியாக இருந்தார். நானும் கோணங்கியும் ஏதேதோ பேசிய போதும் அவரது கவனம் எங் களிடமில்லை. அது நழுவி எங்கோ போய்க்கொண்டிருந்தது அவரது முகபாவத்தில் தெரிந்தது.

சிங்காரத்திடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வந்து மாப் பிள்ளை விநாயகர் அருகில் உள்ள தேநீர்க் கடையன்றில் நின்ற படியே சிங்காரத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். அவரது நாவலைத் திரும்ப வாசிக்க வேண்டும் போலிருந்தது.

அன்றிரவு என் னைத் தனித்து அனுப் பிவிட்டு கோணங்கி சிவகங்கை புறப்பட் டுச் சென்றார். எனக் குத் திரும்பவும் சிங் காரத்தைச் சந்திக்க வேண்டும் போலிருந் தது. மறுநாளும் பார்க் கலாமே என்ற ஆசை யோடு இரவெல்லாம் மதுரை வீதிகளில் சுற்றியலைந்துவிட்டு விராட்டிபத்திலிருந்த நண்பன் அறைக்குச் சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை சிங்காரம் அறைக் குச் சென்றேன். சிங்காரம் தனியே உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். நேற்று பார்த்த தைவிட அன்று உற்சாகமாக இருந் தார். தான் இன்னும் சாப்பிடப் போகவில்லை என்று சொல்லிய படியே மார்டன் கபே வரை போய் வரலாமா என்று கேட்டார். இரு வரும் இறங்கி சாலைக்கு வந்தோம்.

சிங்காரம் வழியில் இருந்த ஒவ் வொரு கடையையும் சுட்டிக் காட்டி எவ்வளவு தூரம் கால மாற்றத்தில் மாறியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்தார். சாப்பிட்டுத் திரும்பும்போது அரு காமையில் உள்ள சலூன் ஒன்றில் தெரிந்த ஆள் இருக்கிறார். அவ ரைப் பார்க்கலாம் என்று அழைத் துக்கொண்டு போனார். அந்த சலூ னில் வேலைக்கு இருந்த நபர் பர் மாவில் இந்திய தேசிய ராணுவத்தி லிருந்தவர் என்றும் அவரும் சிங் காரமும் பலவருட பழக்கம் உள்ள வர்கள் என்பது அவர்கள் பேச்சிலி ருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

சிங்காரத்தின் நண்பர் இந்திய தேசிய ராணுவம் பற்றிச் சொல்லச் சொல்ல இடைமறித்து சிங்காரம் தகவல்களைச் சரி செய்தபடியே இருந்தார். இந்திய தேசிய ராணு வத்திற்குள் வடக்கத்தியார்களின் அதிகாரம் மேலோங்கியிருந்தது எல்லாம் அந்த மோகன்சிங்கின் வேலை என்று நேற்று நடந்த விஷயம் போல சிங்காரத்தின் நண் பர் குறைபட்டுக்கொண்டார்.

நேதாஜியைப் பார்த்து இருக் கிறீர்களா என்று கேட்டேன். நண் பர், இந்தக் கையாலேதேன் அவ ருக்கு சல்யூட் அடித்தேன் என்று வீரவணக்கம் செய்து காட்டினார். சலூன் கண்ணாடியில் அவரது முகத்தில் இருந்த பெருமிதம் துல்லி யமாகத் தெரிந்தது. நேதாஜியைப் பத்தி ஒரு கதை சொல்வியே அதை இவர்கிட்டே சொல்லு என்றார் சிங்காரம். அந்த நண்பர் சிரித்துக் கொண்டே இது சிங்கப்பூர்ல நடந்ததுனு சொல்றாங்க நிஜமானு தெரியாது.

ஒரு பொதுக் கூட்டத்திற்கு நேதாஜி வர்றப்போ  சர்க்கஸில இருக்கிற கோமாளி ஒருத்தன் நேதாஜியைப் பார்க்கக் கூடவே ஓடி வந்திருக்கிறான். அவன் ஒரு குள்ளன், ஜனங்க அவனை இடிச் சித் தள்ளுறதை நேதாஜி கவனித்தி ருக்கிறார். உடனே அவனை அரு கில் வரச்சொல்லி தன்னோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளும் படியாகச் சொன்னார். குள்ளன் தன்னை நேதாஜி தூக்கி வைத்துக் கொள்வது போல போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதும் நேதாஜி வேடிக்கையாக அதற்கென்ன என்று குள்ளனைக் குனிந்து  தூக்க முயற்சித்தால் அவனைத் தூக்க முடியவேயில்லை.

தன் பலங்கொண்ட மட்டும் முயற்சித்தும் முடியவில்லை. குள் ளன் சிரித்தபடியே இப்போது தூக் குங்கள் என்று சொன்னதும் உடனே நேதாஜி அவனைச் சுலப மாகத் தூக்கிவிட்டார். அது எப்ப டிச் சாத்தியமானது என்று குள்ள னிடம் கேட்டதும் அவர் உடலின் எடையைத் தன்னால் எப்போது வேண்டுமானாலும் கூட்டவும் குறைக்கவும் முடியும். அது ஒரு பயிற்சி என்று சொன்னான். அதைக் குள்ளனிடமிருந்து நேதாஜி கற்றுக்கொண்டார். பல நேரங்களில் ராணுவத்தில் அதை நேதாஜி செய்து காட்டியிருக்கிறார் என்றார்.

சிங்காரம் சிரித்தபடியே  இப் படி நூறு கதைகளை தினம் ரங் கூன்ல கேட்டிருக்கேன். அந்த ஊரை நாசம் பண்ணினது கெம் பித்தாய்ங்கிற ஜப்பானிய ராணுவ போலீஸ். அவங்க பண்ணுகிற இம்சை சகிக்க முடியாதது. இந்தக் கெம்பித்தாய்களோட வேலை பட் டாளத்துகாரனுக்குப் பொம் பளையை ஏற்பாடு பண்ணித் தர் றது. அதுக்காக மலாய் சீனாக்காரி களை ஏற்பாடு பண்ணி அதைப் பராமரிப்பு பண்ணி வச்சிக்கிட்டு வருவாங்க. இதுல அடிதடி வேற வரும் என்றார். சிங்காரத்தின் நண் பர் ஒரு சீனப்பெண்ணின் பெயரைச் சொல்லி அவளுக்குப் பெரிய கிராக்கி என்று நினைவுபடுத்தினார்.

சிங்காரம் வாழ்க்கையில் காதல் அரும்பியிருக்கிறது. ஆனால் அது நிறைவேறவில்லை. அது ஒரு செட்டிவீட்டுப் பெண் என்று சொன்னார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை ஒரு நாள் புது மண்டபம் அருகே பார்த்தாகவும் அந்தப் பெண்ணிற்குத் தன்னை அடையாளமே தெரியவில்லை என்றபடியே எனக்கு அவ முகம் அப்படியே மனசில இருக்கு என் றார். அவரது நாவலில் இடம் பெற்ற சம்பவங்கள் அவரது வாழ் வின் பகுதிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அன்று மதியம் வரை சிங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அவரது மனதில் எழுத வேண் டும் என்ற உத்வேகமில்லை. அவ ருக்குப் பிடித்த புத்தகம் எது என்று கேட்டவுடன் சிங்காரம் மணி மேகலை என்று சொல்லி அதற்கும் தன்னுடைய நாவலுக்கும் உள் ளார்ந்த தொடர்பு இருக்கிறது என் றார். அவர் மணிமேகலையை ஆழ்ந்து வாசித்திருப்பது புரிந்தது. அவரிடமிருந்து விடைபெற்று வந்த சில நாட்களுக்கு சிங்காரத்தை மட்டுமே வாசித்துக் கொண்டிருந் தேன். சரளமும் நுட்பமும் கலந்த எழுத்து.

அதன் பிறகு சிங்காரத்தை ஒரு வருடத்தின் பிறகு திரும்பச் சந் தித்தேன். இப்போது முன்பு இருந்ததைவிடவும் ஒடுங்கிப் போயிருந் தார். தன்னைப் பார்த்து எதுவும் ஆகப்போவதில்லை என்று சொல் லியதோடு தன்னை இலக்கியக் கூட்டத்திற்காக ஒரு நண்பர் அழைத்ததாகவும் அது  தன்னால் முடியாது என்றும் சொன்னார். சிங்காரத்தோடான மூன்றாவது சந்திப்பு வெறுமையில்தான் முடிந் தது. அதன்பிறகு சில முறை கோணங்கி, லோகு, முருகேச பாண்டியன் போன்றவர்கள் அவரைப் பார்த்ததைப் பற்றிச் சொல்வார்கள். ஒரு முறை அய்யனார் அவரைச் சந்தித்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

sஎன் மனதில் சிங்காரத்தின் சித்திரம் அவரது நாவலில் வரும் பாண்டியன் கதாபாத்திரமாகவே பதிந்து போயிருக்கிறது. சிங்காரத் தின் எழுத்து தனித்துவமானது. பர்மீய தமிழ்வாழ்வின் உண்மை யான சித்தரிப்பு அவரிடமிருந்தே துவங்குகிறது. யுத்தகால வாழ்வைப் பற்றியும் நெருக்கடியான அந்த நாட்களில் ஏற்படும் மனித அவ லங்கள் குறித்தும் அவர்தான் முதன்முறையாக அடையாளம் காட்டுகிறார். அவரது புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் இரண்டும் தமிழின் முக்கிய நாவல் கள் என்றே சொல்வேன்.

சிங்காரத்தின் வா ழ்க்கை அவரை எப்போதுமே நினைவிலே அமிழ்ந்து போக வைத்திருக்கிறது. மனதில் கொளுந்துவிட்டெறியும் கடந்தகாலத்தின் சுவாலைகளுடன் மௌனமாக வாழ்ந்துகொண்டிருந்தார் சிங்காரம். அவருக்கு யாரோடும் உறவில்லை. தினந்தந்தி நாளிதழில் வேலை செய்திருக்கிறார். அங்கே அவரை யாரும் எழுத்தாளராக அறியவேயில்லை. நெருக்கமான நட்புமில்லை. எதையும் அவர் விரும்பவில்லை என்பது தான் நிஜம்.

ஒருவேளை அவர் மனதில் நீள் கடலும் துரத்தியடிக்கபட்டு நாடிழந்து புகலிடம் திரும்பும் மனிதர் களை ஏற்றுக்கொண்டு காற்றின் திசையில் அலைபடும் தோணியும் எப்போதுமிருந்திருக்ககூடும். தனிமை பலரையும் எழுத வைத்திருக்கிறது. சிங்காரத்தின் எழுத்தை அவரது தனிமை கவ்விக்கொண்டு விட்டது. தன் வெளிப்பாட்டிற்கு எழுத்து மட்டுமே சிலருக்குப் போதுமானதில்லை போலும் என் பதை சிங்காரம் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

*****

நன்றி: உயிர்மை

Aug 21, 2010

ப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..

எல்லாம் யோசிக்கும் வேளையில்...’
ந. முருகேசபாண்டியன்

பெரிய கட்டடத்தின் மாடிப் படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத் துளைத்தது. பெரிய அறையினுள் நுழைந்தேன். தூய வெள்ளாடை உடுத்திய கருத்து வாட்டசாட்டமான பெரியவர் எழுதிக் கொண்டிருந்தார். வழுக்கைத் தலை பளபளத்தது. சுவரையொட்டியிருந்த டெலிபிரிண்டர்கள் கட-கடத்தன. அடுத்திருந்த பெரிய ஹாலில் ராட்சத அச்சு இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தன. கரடுமுரடான ஓசை. எங்கும் மிஷின் எண்ணெய் நெடியும் புழுக்க நாற்றமும் கசகசப்பான மனநிலை. ‘திரும்பிப் போயிடலாம். அவரை இன்னொருக்க பார்க்கலாம்.’ மனதின் ஊசலாட்டத்-தையும் மீறி வெள்ளாடைப் பெரியவரிடம் கேட்டேன். ‘‘ஐயா... வணக்கம்... இங்க ப. சிங்காரங்கறது யாருங்க?’’

‘‘நான்தான்’ உட்காருங்க’’ மூக்கைத் தடவிக்-கொண்டார். இறுக்கமான முகம். ஆழமான இடுங்கிய கண்கள். என்ன விஷயம் என்பது போல முகத்தை முன்னுக்குத் தள்ளி என்னை உற்றுப் பார்த்தார்.

‘‘நான்... உங்களோட புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்... ரெண்டு clip_image002நாவல்களையும் படிச்சிருக்கேன்.’’

‘‘அப்படியா?’’ வறட்சியுடன் மெல்லச் சிரித்தார். இப்ப அதுக்கென்ன? அது ஏதோ சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற முகபாவனை. அவரது நாவல்களைப் பற்றிய எனது அபிப்ராயங்களைக் கூறினேன். தமிழில் மிகவும் முக்கியமான நாவல், முதல் புலம்பெயர்ந்த நாவல்... இப்படிப் பாராட்டினேன்.

‘‘நீங்க இப்படிச் சொல்றீங்க. அஞ்சாறு மாசத்துக்கு முந்தி கோணங்கின்னு ஒருத்தர் வந்து நாவலைப் பற்றிப் பேசிட்டுப் போனார். பத்து வருஷங்களுக்கு முந்தி பிரகாஷ்ங்றவர் திடீர்னு வந்து ரொம்பவும் பாராட்டிச் சொன்னார். இன்னும் சில பேர் தேடிவந்து பாராட்டியிருக்காங்க. சுமார் ஐந்து வருஷங்களுக்கு முந்தி கி. ராஜநாராயணன்னு ஒருத்தர் புயலிலே ஒரு தோணி நாவலைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்... இவங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? எதுவும் பெரிசா எழுதியிருக்காங்களா?’’

‘‘நீங்க சொன்னவங்க எல்லாரும் எனக்கு நண்பர்கள். தமிழ் இலக்கிய, சிறுபத்திரிகைச் சூழலில் முக்கியமானவங்க’’ என்றேன்.

கொஞ்ச நேரம் விசித்திரமாக எனது முகத்தைப் பார்த்தார்... ‘‘அப்படிங்களா... கி. ராஜநாராயணன் மூலம் எனது நாவலைப் பற்றிக் கேள்விப்பட்ட சிட்டி, சிவாபாதசுந்தரம்னு ரெண்டுபேர் வந்து நாவலைப் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசினார்கள். சென்னையில கொண்டு போய் Original Version_க்கு நல்ல பதிப்பு கொண்டு வாரோம்னு என்னிடமிருந்த ஒரே பிரதியையும் வாங்கிட்டுப் போனாங்க. பல வருஷமாச்சு. இன்னும் ஒரு பதிலயும் காணாம்’’ எவ்விதமான ஈடுபாடும் இல்லாமல் தகவல்களைச் சொன்னார். ‘‘புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க... இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விஷயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க... அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னிக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம்வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனே-ஷியாவிலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். புயலடிச்சதால சரக்குகளைக் கடலில் வீசினோம். நாவல் எழுதறப்ப தோணும்னா சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்டே கேட்டேன். ஆமா போனோம் வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுங்கிறதெல்லாம் ஞாபகமில்லேனுட்டாங்க. அது எதுக்கு... வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப்பிடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணுசீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பலசரக்குக் கடைகள்... அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா? உண்மையைச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விஷயமிருக்கு தெரியுமா? ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது.’’

‘‘நீங்க எப்ப மலேசியா போனீங்க?’’

‘‘எனக்கு இன்னிக்கி அறுபத்து நாலு வயசாகுது. பதினெட்டு வயசுல கப்பலேறினேன். வட்டிக் கடையில வேலை பார்த்தேன். அப்ப ரெண்டாம் உலக யுத்தம் தொடங்கினதால இந்தியாவுக்குக் கப்பல் போக்குவரத்து இல்ல. இந்தியாவிலிருந்து எந்த தமிழ்ப் பத்திரிகையும் அங்க வராது. வேற வழியில்லாம பினாங்கு லைப்ரேரியில ஹெமிங்வே, தல்ஸ்தோய், பாக்னர், செகாவ், தாஸ்தாயேவ்ஸ்கி... இப்படிப் பலரையும் படிக்க ஆரம்பிச்சேன். ஹெமிங்வேயோட ‘ஏஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்’ நாவல்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல். அது அமெரிக்க இலக்கியத்ல திருப்புமுனைன்னு நினைக்கிறேன். தல்ஸ்தோயோட அன்னா கரேனினா நம்பர் ஒன். ஆனால் மேல்நாட்டு க்ரிட்டிக்ஸ் ‘வார் அண்ட் பீஸ்’ தான் சிறந்ததுன்னு சொல்றாங்க.’’

‘‘தமிழ்ல யாரெல்லாம் படிச்சிருக்கீங்க?’’

‘‘என்னோட பதினெட்டு வயசுக்கு முந்தி இந்தியாவுல இருக்கிறப்ப ‘மணிக்கொடி’ பத்திரிகை வாசிச்சிருக்கேன். புதுமைப்பித்தன், மௌனி கதைகள் படிச்சிருக்கேன். அப்புறம்தான் அங்கே போயிட்டேனே! இன்னிக்கி வரைக்கும் தமிழ்ல நாவல்கள் வாசித்தது இல்லை. பூரா ஆங்கிலம்தான். இப்பத்தான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கம்கூட வாசிக்க முடியல.’’

தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். ‘‘அவங்க எழுதியதை படிக்கவில்லை’’ என்றார்.

‘‘யுத்த காலத்தை மையமாக வச்சுத் தமிழில் விரிவாக நாவல் எழுதுனது நீங்கள்தான். நீங்க ஐ.என்.ஏ.யில் இருந்தீங்களா?’’

‘‘இல்லை. என்னோட நண்பர்கள் பலர் ஐ.என்.ஏவுல இருந்தாங்க. ஆர்மியில பெரிய பதவியில இருந்தாங்க. அங்க பினாங்கில காபி, டீ கடைகள் ஐரோப்பிய மாதிரியில இருக்கும். அதை கிளப்ன்னு சொல்வாங்க. சாயங்கால நேரம் ஒரு கோப்பை காபியைக் குடிச்சிட்டு ஐந்தாறு மணிநேரம் பேசிக்கிட்டிருப்போம். அப்பத்தான் யுத்தம் பத்தின பல சமாசாரங்களைக் கேள்விப்பட்டேன். அப்புறம் நண்பர்களுடன் சேர்ந்து நானே பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாகப் போயிருக்கேன். நாவல்னா என்னா? கற்பனையில எழுதுறதுதானே! அப்படியேவா எழுதணும்? நாம கேள்விப்பட்ட விஷயங்கள், அனுபவங்களைத் தொகுத்துக் கற்பனையோடு எழுதலாம். ஒரு கதாபாத்திரம்னா அவன் ரெண்டு மூணு பேரோட சேர்க்கையா இருக்கலாம். நாவல்ல வர்ற சின்னமங்கலம் கிராமம்கூட ரெண்டு கிராமங்களை ஒன்றாக்கியதுதான்.’’

‘‘நீங்க படிச்சது முழுக்க ஆங்கிலத்துல... தமிழ்ல எழுதணும்னு உங்களுக்கெப்படி தோணுச்சு.’’

‘‘தமிழ்ல _ தாய்மொழியில _ எழுதினாத்தான் உணர்ச்சிபூர்வமா நாம நினைக்கிறத சொல்ல முடியும்னு எழுதினேன்.’’

‘‘திரும்ப இந்தியாவுக்கு எப்ப வந்தீங்க?’’

‘‘சுதந்திரங்கிடைச்ச பின்னாடி வந்தேன். உடனே ‘தினத்தந்தியி’ல வேலைக்குச் சேர்ந்தேன். அப்பயிருந்து மதுரையிலதான் இருக்கேன்.’’

‘‘முதல் நாவலை எப்ப எழுதினீங்க?’’

‘‘1950_இல் ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினேன். அதைப் பிரசுரம் செய்ய பல பிரசுரகர்த்தர்களைக் கேட்டேன். அதுக்காகவே மதுரைக்கும் சென்னைக்கும் பல தடவைகள் அலைஞ்சேன். யாரும் வெளியிட முன்வரலை. ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினேன். திரும்பி வந்தது. ஆனால் தேர்வுக் குழுவில இருந்த ஒருத்தர் தனிப்பட எனக்குத் கடிதமெழுதி நாவலைப் பாராட்டியிருந்தார். அவர் அந்த நாவலை என்னிடமிருந்து வாங்கி ரெண்டு மூணு வருஷமாப் பிரசுரிக்க முயன்று தோற்றுப் போனார். கடைசீல ‘கலைமகள்’ பரிசுப் போட்டிக்கு அவரே அனுப்பினார். அதுக்கு முதல் பரிசு கிடைச்சுது. நாவலும் 1959_ல் பிரசுரமாச்சு.’’

‘‘புயலிலே ஒரு தோணி?’’

‘‘அது மட்டுமென்ன? அது பிரசுரம் ஆனதும் பெரிய கதை. அதை 1962_வாக்கில எழுதினேன். பல பிரசுரகர்த்தர்களிடம் கிடந்தது. ஒண்ணும் ஆகலை. கடைசீல சென்னை நண்பர் ஒருத்தரின் விடாத முயற்சியினால் கலைஞன் பதிப்பகம் 1972_இல் வெளியிட்டது. அதுவும் வெட்டிச் சுருக்கி வெளியாச்சு.’’

‘‘நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததுங்களா?’’

‘‘ம்... ஒரு பாத்திரம் தன் மனதுக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றைக் குறிக்குள் போடலைங்கிற-துக்காக ‘கண்ணதாசன்’ பத்திரிகையில ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க என்பதுகூடப் புரியலை... குழப்பமாயிருக்குன்னு எழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு எல்லாத்தியும் வெளிப்படையாப் பெருவெட்டாகச் சொல்லணும். தமிழ்ல பீணீsலீ_க்கும் லீஹ்ஜீலீமீஸீ_க்கும் வித்தியாசமே பலருக்குப் புரியல.’’

காபியை ரெண்டு கிளாஸ்ல ஊத்துங்க என்று அலுவலக உதவியாளரிடம் சொல்லிவிட்டு சற்று நேரம் கண்ணைமூடி யோசித்தவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

‘‘அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும், எழுத்தாளன் சொல்லக்கூடிய உலகம் ரொம்பப் புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம் வாசிக்கிற யாருக்கும் தெளிவாப் புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர், வெளிநாட்டுச் சூழல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் _ தமிழ் ஆளுகளுக்குப் புதுசு என்றாலும் _ நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படலை.’’ அவரது குரலில் நம்பிக்கை தொனித்தாலும் முடிவில் வருத்தம் வெளிப்பட்டது.

‘‘குடிங்க’’ காபி கிளாஸை என்னை நோக்கி நகர்த்தினார். பணியாளிடமிருந்து சிகரெட்டை வாங்கி மேசை டிராயருக்குள் வைத்தார்.

கிளாஸை எடுத்து ஒரு மடக்குக் குடித்தேன். அவர் ஒரே மூச்சில் கிளாஸைக் காலி செய்தார்.

‘‘நீங்க தொடர்ந்து எழுதலியே...’’

‘‘அதெல்லாம் ஒரு காலத்து ஆர்வம். அப்ப உற்சாகப்படுத்தி முடுக்கிவிட ஆளுக யாருமில்லை. இப்ப அந்த மனநிலை இல்ல.. எழுதவும் முடியாது.’’

‘‘புயலிலே ஒரு தோணி நாவலில் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் வருதே... உங்களுக்கு அதிலே ரொம்ப ஈடுபாடா?’’

‘‘அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லே. 1947_லிருந்து மதுரை சீ.வி.சி.கி.யில தங்கியிருக்கேன். முந்தி பக்கத்து அறையில தியாகராசர் கல்லூரி தமிழ் லெக்சரர் இருந்தார். அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி அகராதியை வைச்சு நானே படிச்சேன். அவ்வளவுதான். ஈடுபாட்டோட படிச்சா எதையும் படிச்சிடலாம். இங்கிலீஷ்ல பார்த்தீங்களா? எதைப் பத்தியெல்லாம் புத்தகம் வருது தெரியுமா? ஷிஷீutலீ மிஸீபீவீணீஸீ ஜிக்ஷீமீமீsன்னு ஆயிரம் பக்கத்துல பெரிய புத்தகம் போடுறான். அதையும் வாங்கிப் படிக்க ஆளுக இருக்குது. இங்க அதுமாதிரியில்ல. அதனால பப்ளிஷர்ஸ் நல்ல புத்தகம் போடறதில்ல. என்னோட முதல் நாவல் கடலுக்கு அப்பால்... ரொம்ப சொல்ல முடியாது. ஆனால் புயலிலே ஒரு தோணி நல்ல நாவல். ஆனால் என்ன ஆச்சு? எந்த க்ஷீமீsஜீஷீஸீsமீம் இல்ல.’’ மூக்கைத் தடவிக்கொண்டு சிரித்தார். ‘‘அந்த நாவலில் செட்டிமார்பற்றி வருது. பல பப்ளிஷர்ஸ் செட்டிமார். அதனால அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. ஏதாவது மாட்டு வாகடம், கந்தர் அலங்காரம்... இப்படி போட்டுக் காசு பண்ணுவாங்க.’’

‘‘உங்க குடும்பம்...’’

‘‘நான் ஒரு widower.’’

சற்று நேரம் என்ன பேசுவது எனத் தோன்றவில்லை. சூழல் இறுகியது. அவரே தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார்.

‘‘மலேயாவில் மனைவியோட முதல் பிரசவத்தில மனைவியும் ஆண்குழந்தையும் இறந்துட்டாங்க. பிறகு இந்தியாவுக்கு வந்தேன். அப்புறம் மறுபடி கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணவேயில்லை. திரும்ப மலேயாவுக்குப் போயிடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன்... ஆனால் போகலை.’’

‘‘அப்ப 37 வருஷமா தனிமையிலேவா இருக்கீங்க?’’

‘‘என்ன தனிமை!’’ கண்களை மூடி வறட்சியாகச் சிரித்தார். ‘‘உண்மையாப் பார்த்தால் எல்லாரும் தனிமையிலதான் இருக்கோம்.’’

‘‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’’

‘‘அதெல்லாமில்ல. கோயிலுக்குப் போவதுமில்லை சாமி கும்பிடுறதும் இல்லை.’’

இடையில் பத்திரிகைக்குச் செய்தி கொடுக்க வந்தவரிடம் ழிமீஷ்s ணிபீவீtஷீக்ஷீஐப் பாருங்க என்று கூறி, பத்திரிகை தொடர்பாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘‘உங்க சொந்த ஊரு?’’

‘‘எங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டி கிராமம். எங்க அப்பா காலத்திலேயே சிங்கம்புணரிக்குப் போயிட்டோம்.’’

‘‘உங்க சொந்தக்காரங்க...’’

‘‘சிங்கம்புணரியில இருக்காங்க... ரொம்ப போறதும் வர்றதும் கிடையாது...’’

அவரது கலை, இலக்கியம் பற்றிய புரிதல்கள், வாழ்க்கையனுபவம் பற்றிய விரிவான நேர்காணலுக்கு அனுமதி கேட்டேன். ‘‘அதெல்லாம் எதுக்கு...? வேணாம்’’ கைகளை ஆட்டி உறுதியான குரலில் மறுத்தார். நான் இலக்கிய உலகில் அவரது இடம் மிகவும் முக்கியமானது... எனவே நேர்காணல் முக்கியமான பதிவாகும் என்று வலியுறுத்தினேன். ‘‘தயவுசெய்து வேண்டாம்’’ என்று அழுத்தமாக மறுத்துவிட்டார். சற்றுநேரம் இருவருக்குமிடையில் கனமான மௌனம். அடுத்து என்ன பேசுவது? திணறல். அவரது முகம் இறுகியது. சகிக்க முடியாத அமைதி சுவரானது.

‘‘சரி அப்ப வர்ரேன்’’

எழுந்து நின்று கைகூப்பினேன். அவரும் எழுந்து நின்று கைகூப்பி ‘‘வாங்க’’ என்றார் தளர்ச்சியான குரலில்.

மாடிப்படிகளில் இறங்கினேன். அப்பொழுதுதான் ராட்சத இயந்திரங்களின் பலமான ஓசை உறைத்தது. வெயில் கண்களைச் கூசச் செய்தது.

குழு அல்லது அமைப்புடன் எவ்விதமான தொடர்புமற்றுத் தனித்து ஒதுங்கி நிற்பதால் ப. சிங்காரம் தமிழ்ச் சூழலில் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றும் உலகின் சிறந்த நாவல்களுடன் ஒப்பிடும் வகையில் அவரது நாவல் உள்ளது என்றும் நான் கூறியபோது, ஒருவிதமான கூச்சத்துடன் ‘‘அதெல்லாம் இல்லீங்க. நான் என்னமோ எழுதினேன்’’ என்று சாதாரணமாகக் கூறினார். சாதனையாளரான ப. சிங்காரத்தினுடைய இலக்கியத்தின் மீதான புறக்கணிப்பு, தமிழ்ச் சூழலின் மோசமான வெளிப்பாடாகும். ஏக்கமும் கசப்பும் கலந்த மனநிலையுடன் கட்டட வளாகத்தைவிட்டு வெளியே வந்தேன். வெளியே வெப்பக் காற்று புழுதியுடன் வலுவாக வீசிக் கொண்டிருந்தது.

Jul 16, 2009

புயலிலே ஒரு தோணி-ப.சிங்காரம்

நாவலின் முதல் அத்தியாயம் - கெர்க் ஸ்ட்ராட்
ப.சிங்காரம்.

காலைக் கருக்கிருட்டு நேரம்; தெருவிளக்குகள் எரியவில்லை. இப்பொழுதுதான் மழை தூறி ஓய்ந்திருக்கிறது.

ஜப்பானியத் துருப்புகளின் வரவை எதிர்நோக்கி மெடான் நகரினர் தெருவின் இருமருங்கிலும் கூடி நிற்கிறார்கள். கூட்டத்திலிருந்து பலவகை ராகங்களில் கிளம்பும் மலாய் பஹாசாவின் மெல்லோசையைப் பரபரப்பான சீனமொழி ஊடறுக்கிறது.

watercolor-painting-hydra-2

ஊர் நடுவே கிழக்கு மேற்காகக் கடக்கும் தெரு இது _ கெர்க் ஸ்ட்ராட். இந்தத் தெரு சேறும் சகதியுமாய் இருபுறமும் நீப்பா புதர்கள் மண்டிக்கிடந்த காலத்தில் _ டச்சுக்காரர்கள் வேரூன்றுவதற்குமுன் _ இதில் போர்ச்சுகல் சிப்பாய்களும் ஆங்கிலத் துருப்புகளும் மேற்கிலிருந்து கிழக்கே நடந்திருக்கிறார்கள். அதற்கு முன்னர், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் அரும்பொருள்களையும் கப்பல்களில் ஏற்றி வந்த அரபியரும், அவர்களுக்கு முன்பே அறுசமய நீதிகளையும் அருங்கலைகளையும் நாவாய்களில் கொணர்ந்த தமிழர்களும் இந்த வழியாய்க் கிழக்கே சென்றதுண்டு. இப்பொழுது: ‘டாய்நிப்பன் (மகாஜப்பான்), படைவீரர்கள் கிழக்கேயிருந்து வரவிருக்கிறார்கள். அவர்களைக் காணத் திரண்டு நிற்கின்றனர் குடிமக்கள்.

அன்னெமர் காதர் மொய்தீன், ராவுத்தரின் (பொதுப்பணித்துறை காண்ட்ராக்ட்) பெரிய கிராணி பாண்டியன், கிளர்க் வடக்கேயிருந்து கெசாவன் நடைபாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும் வெள்ளைச் சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.

‘‘தொலுங் லாலு சிக்கட்.’’ சிறிது விலகி இடம் விடுமாறு அடுத்தடுத்து வேண்டிக்கொண்டே நாற்சந்தி முக்கிலிருக்கும் புத்தகக் கடையைத்தாண்டி, இடதுபுறம் கெர்க் தெருவில் திரும்பியவன், டெர்மூலன் ரெஸ்டாரன்ட் முன்பு போய் நிற்கிறான்.

கிழக்கு வெளுத்து இருள் கலைகிறது. உருவங்கள் தெளிவடைகின்றன.

சிகரெட் புகையை இழுத்து ஊதியவாறு வாரகாம்ப் புத்தகக் கடை மூலையை நோக்கித் திரும்பி நடந்தடைந்து, எதிரோடிய பாலீஸ்வேயில் பார்வையைச் செலுத்தினான். சுல்தான் அரண்மனைக்குச் செல்லும் அந்த அகன்ற சாலை நடுவில், இடையிடையே வெளிவிட்ட மேடை. அதில் நின்ற விசிறி மரங்கள் காலைக் காற்றில் சரசரத்தன. ஒரு முக்கில் டாவ்ரோஸ் மாளிகை. மறுமுக்கில் மாதா கோயில். அப்பால், சாலையின் இருபுறமும் பெரும்பெரும் கடைகள் _ தொக்கோவன் டெப்போல், கூர்னியர், ஒயிட்டவே, ஆல்ட்டன்பாக், பாயர்ஸ்..

கதிரவனின் ஒளிக்கதிர்கள் தோன்றிப் பரவின. மரங்களில் பல்லினப் பறவைகளின் சிலம்பலோசை. கூட்டத்தில் தள்ளுமுள்ளும் பேச்சரவமும் அதிகரித்தது.

எல்லாரும் தலையை நீட்டிக் கிழக்கே பார்த்தவாறு நின்றார்கள்_மெடான் நகரைக் கைக்கொள்ள வரும் ஜப்பானியப் படையை வரவேற்க.

சூரிய வெளிச்சத்தில் டாவ்ரோஸ் மாளிகைப் பச்சைப் பளிங்கு அரையுருண்டை வழுக்குக் கோபுரம் பசுமஞ்சளாய் மின்னுகிறது. மரக்கொண்டைகளில் தங்க வண்ணக் கோல வரிகள். பறவைகளின் கரைச்சல் பெருகி ஒலிக்கின்றது. திடுமெனக் கிழக்கிலிருந்து ஆரவார ஓசை கிளம்பித் திரண்டு வருகிறது.

‘‘ஜப்பான் சூடா டாத்தங்! ஜப்பான் சூடா டாத்தங்!’’

ஆரவாரம். கைதட்டல். கூக்குரல். ஒற்றை வரிசையாய் மூன்று சைக்கிள்கள் உருண்டு வந்தன. அழுக்குத் துணியும் பளபளக்கும் டாமி துப்பாக்கியுமாக ஜப்பானிய சிப்பாய்கள், முதுகில் பெரிய மூட்டை. உடலிலும் வண்டியிலும் செடிகொடிகள் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்தன.

‘‘பன்ஸாய்! பன்ஸாய்! பன்ஸாய்!’’

இப்பொழுது, நான்கு நான்காக அடுத்தடுத்து சைக்கிள்கள் வருகின்றன.

‘‘பன்ஸாய்! பன்ஸாய்! பன்ஸாய்!’’

குளிப்பாட்டிப் பல நாளான அழுக்குடல்கள். இரும்புத் தொப்பி, தண்ணீர்க் குடுக்கை. என்னென்னவோ போட்ட தைத்த சட்டைப் பைகள். பின்தட்டில் தளவாடச் சிப்பங்கள்.

நேர்ப்பார்வையாய் சைக்கிளை ஓட்டிச் சென்றனர் _ பொலோனியாவில் உள்ள விமானத் திடலையும் டச்சு மாளிகைகளையும் நோக்கி.

பாண்டியன் மலைத்துப்போய் நின்றான். இவர்களா, இவர்கள்தாமா சிங்கப்பூரை வென்று வாகை சூடிய வீரர்கள்! ஒரே நேரத்தில் பல திசைகளில் _ ஆயிரக்கணக்கான மைல் இடைவெளி உள்ள இடங்களில் போர் தொடுத்து வெற்றி கண்ட ஜப்பானிய ராணுவத்தினர் இவர்கள்தாமா!

ஏறக்குறைய நூறு சிப்பாய்கள் சென்றிருப்பர். பிறகு சிறிது நேரம், வழுவழுவென்றிருந்த கரும்பாதையில் சைக்கிள்கள் உருளவில்லை.

கிழக்கே மீண்டும் ஆரவாரம் பரிந்தது.

‘‘பன்ஸாய்! பன்ஸாய்! பன்ஸாய்!’’ சைக்கிள்கள் வரிசைவரிசையாய் உருண்டோடி வந்தன. இப்போது சிப்பாய்கள் பல் தெரியாத புன்னகையோடு தலை-யசைக்கிறார்கள். இடையிடையே பேரிரைச்சலுடன் மோட்டார் _ பைக்குகள் வரலாயின. அவற்றின்மீது ஆலிவ் நிறக் கம்பளி ஆடை தரித்த ராணுவ அதிகாரிகள் கடுகடுத்த முகத்துடன் தோன்றி மறைந்தனர்.

கூட்டம் கலையலாயிற்று. பத்துப் பதினைந்து பேர் சுக்கமூலியா தெருவழியாய் ஜப்பானியப் படை செல்லும் திசையை நோக்கிக் கிளம்பினர். அவர்களைப் பின்பற்றி மேலும் சிலர் புறப்பட்டார்கள். பிறகு, பலர் கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்து ஓட்டமும் நடையுமாய் மேற்கே விரைந்தனர்.

பாண்டியன் வடக்கேயும் தெற்கேயும் திரும்பிப் பார்த்தான். கம்பொங்வாசிகள் கூட்டம் கூட்டமாய் நாற்சந்தியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் புதிய கம்பீரம் மிளிர்ந்தது. நடையில் மிடுக்கு. கண்களில் எதையோ எதிர்பார்ப்பது போன்ற நோக்கு.

வடமுகமாய்த் திரும்பி கெசாவனில் நடந்தான்.

கடைகள் மூடிக் கிடந்தன. புதிதாய் முளைத்த டிப்டாப் ரெஸ்டாரன்ட் அருகே இரண்டு சீனர்கள் கிசுகிசுத்து நின்றனர். வலதுபுறம் லிம் பின் சியாக் மாளிகை வெளிமுற்றத்துச் சம்பகா மரத்தடியில் யாரோ ஒரு சீனக் கிழவி புலம்பிக் கொண்டிருந்தாள்.

எதிரே சீனச் சிறுவர்கள் _ பாவம், விவரமறியாப் பாலகர் _ குதூகலக் கூச்சலுடன் ஓடி வந்தார்கள்; ‘‘பன்ஸாய்! ஜிப்புன்மாய்!’’

இடதுபுறம் எப்பாலெய்ன் ரொட்டிக்கடை, பிளாங்க் கென்ஸ், சார்ட்டர்ட் பாங்க், பன்ஹின் லீ; வலது பக்கம் வரிசையாய்ச் சிந்தியர் ஜவுளிக்கடைகள்: அசோமுல், மத்தானி, கிமத்ராய், தவ்லத்ராம்...

‘‘பான்தியான்! பான்தியான்!’’ பின்னாலிருந்து அழைப்புக் குரல் வந்தது. தலையைத் திருப்பிப் பார்த்தான். கால்வாசி திறந்திருந்த கியாங் லிம் சைக்கிள் கடைக் கதவோரம் இளையவன் லிம் தெங் நின்றான்.

‘‘இதோ வருகிறேன்.’’

‘‘ஒரு நிமிஷம்’’

உள்ளே நுழைந்தான்.

‘‘கம்பொங் ஆசாமிகள் கொள்ளைக்குத் திட்டமிட்டு வந்திருக்கிறார்களாம்’’ குரலில் அச்சம் தொனித்தது. சிகரெட் பெட்டியை நீட்டினான். ‘‘வேலைக்காரப் பையன் _ பார்த்தாக்காரன் _ சொல்லிவிட்டுப் போகிறான்.’’

‘‘அப்படித்தான் தெரிகிறது.’’ சிகரெட் ஒன்றை உருவி எடுத்துப் பற்ற வைத்தான். ‘‘சைக்கிள்கடை மீது ஒரு கண் வைத்திருப்பார்கள். எச்சரிக்கையாக இரு.’’

‘‘அன்னெமர் எங்கே?’’

‘‘கம்பொங் பெத்தும்பா’’

‘‘செட்டிகள்?’’

‘‘அங்கேதான், பெங்கூலு ஆதரவில் இருக்கிறார்கள்.’’

‘‘நீ ஏன் போகவில்லை?’’

‘‘வேடிக்கை பார்க்க வேண்டாமா?’’

‘‘சோறு?’’

‘‘எங்காவது.’’

‘‘நீ தமிழன். நான் சீனன்; பெண்டு பிள்ளைக்காரன்.’’

‘‘இந்தத் தெருவில் அப்படியொன்றும் நடக்காது. பெண்களை வெளியே தலைகாட்ட விடாதே. இன்று ஒரு நாள்தான் ஆபத்து. நாளை எல்லாம் சரியாகிவிடும்.’’

‘‘நன்னம்பிக்கையே நலம்.’’

‘‘ஆம். வருகிறேன், தபே.’’

‘‘தபே. எந்நேரமானாலும் உண்டிக்கு வரலாம். அல்லத ஆள் அனுப்பு.’’

‘‘நன்றி.’’

நடந்தான். லிம் தெங், (கிராம மணியக்காரன்) கதவை இழுத்து மூடும் ஓசை கேட்டது.

‘‘மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா!’’ (விடுதலை)

தானா லாப்பாங் வடபுறத்திலிருந்து சைக்கிள் கூட்டம் கத்திக்கொண்டு வந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், கிராணிகள், உதிரிகள் அடங்கிய கும்பல். அவசர அவசரமாய்த் தைத்த _ பலதிற அளவும் கோலமும் கொண்ட ‘சுதந்திர இந்தொனேசியா’ கொடிகளை ஏந்தியிருந்தனர்.

‘‘இந்தொனேசியா ஹிடூப்! பிலாந்தா மத்தி!’’ இந்தொனேசியாவுக்கு வாழ்வையும் ஹாலந்து நாட்டுக்கு அழிவையும் வாரி இறைத்தவாறு சைக்கிள்காரர்கள் கெசாவனில் புகுந்தனர்.

‘‘மெர்டேக்கா! இந்தொனேசியா ஹிடூப்!’’ பாண்டியனைப் பார்த்த கெமந்தே (நகராட்சி மன்றம்) கிராணி யாசின் கையிலிருந்த கொடியை ஆட்டி முழங்கினான்.

‘‘மெர்டேக்கா! இந்தொனேசியா ஹிடூப்!’’

பாண்டியன் வலது கையை உயர்த்தி அலைத்தவாறு கத்தினான்:

‘‘மெர்டேக்கா! இந்தொனேசியா ஹிடூப்!’’

கிராண்ட் ஹோட்டல் திசையிலிருந்து ஒரு சாடோ வண்டி வந்தது.

‘‘பிலாந்தா மத்தி! சீனா மத்தி! செட்டி மத்தி!’’

சாடோ வண்டிக்காரன் தொண்டை கிழியக் கத்தினான்.

பாண்டியன் திரும்பிப் பார்த்தான்.

‘‘ஆ! தபே துவான், தபே.’’

மொஸ்கி ஸ்ட்ராட் வட்டிக்கடைகளில் நாள் தவறாமல் ஏறி இறங்கும் சாடோ வண்டிக்கார சைனுடீன் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்தான்.

‘‘தபே, சைனுடீன்.’’

‘‘வெறிபிடித்துத் திரிகிறார்கள், போக்கிரிகள், ஹிஹிஹ்ஹிஹி.’’

சாடோ வண்டிக்காரன் கிராஸ்ஃபீல்ட் மெர்டேக்கா வீரர்களின் திக்கில் சாட்டையை நீட்டிச் சுட்டிக் கெக்கலித்தான். பாண்டியன் முகத்தில் முறுவல் பூத்தது. சாடோவில் ஏறும்படி சைனுடீன் அழைத்தான். பாண்டியன் நன்றி கூறிவிட்டு, ஹட்டன்பாக் தெருவில் நுழைந்தான்.

‘‘தபே, துவான், புசார்.’’

ஹாரிசன் கிராஸ்ஃபீல்ட் கட்டடத் தாழ்வாரக் கயிற்றுக் கட்டிலின்மீது கால்களைச் சேர்த்துட்கார்ந்து ஹுக்கா புதைத்துக் கொண்டிருந்த ‘உப்பாஸ்’ (காவல்காரன்) சிராஜுத்தவ்லா கான் வந்தனை தெரிவித்தார்.

‘‘தபே, நவாப் ஷாஹி.’’

‘வங்காள நவாப்’ வழக்கம் போல் சிரித்தார். சுற்றிலும் காணப்பட்ட பரபரப்பில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல் ஹுக்கா புகையில் லயித்திருந்தது காவல்காரரின் மனம்.

இடதுபுறம் மொஸ்கி ஸ்ட்ராட் -_ செட்டித் தெரு அநாதையாய்க் கிடந்தது. கீழ்ப்பாக்கம், கித்தாடா பல் வைத்தியசாலை, மட்சுவோக்கா டென்னிஸ் ராக்கெட் கடை. இரண்டும் ஜப்பானியருடையவை; மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளன. டான்லிம் தச்சுப் பட்டறை; சமைந்த புதல்விகள் இருவருடன் குடித்தனம் நடத்தும் மனையவள் இல்லாக் கிழவன். கதவு உட்புறம் தாழிடப்பட்டிருக்கிறது. அப்பால் வட்டிக்கடைக் கிட்டங்கிகள். வெங்கடாசலத்தின் ‘சிங்கப்பூர் சலூன்’. மாஜி சமையலாள் வெள்ளைச்சாமி நடத்தும் வெற்றிலைப் பாக்குக் கடை. அதன்மேல் கிழக்கு மேற்காகக் குறுக்கிடுகிறது அவுடு மார்க்கெட் ஸ்ட்ராட். மேல்புறம், நொத்தாரிஸ் கந்தோரை அடுத்துச் சிமிந்தி பாவிய சந்து. பிறகு, வரிசையாய் வட்டிக்கடைக் கிட்டங்கிகள். இடையில் அன்னெமர் காதர் மொய்தீன் ராவுத்தரின் கந்தோர். கடைசியாக, அவுடு மார்க்கெட் தெருவுக்கு இப்பாலாக, சின்லாம் கோப்பிக் கடையும் மாமுண்டி ஆசாரி பட்டறையும்.

நடைபாதையிலிருந்து ஏறி, அடைப்பில்லாத, மூடின முன்தளத்தில் சென்றான். காலடி ஓசை தெருவின் அமைதியைக் குலைத்தது. மஞ்சள், நீலக் கட்டடக் கதவுகள் தூசுபடிந்து இறுக்கி மூடிக்கிடந்தன. அன்னெமர் கந்தோர் தாண்டிச்சென்று கோப்பிக் கடைக் கதவைத் தட்டினான்.

‘‘யாரது?’’ உள்ளேயிருந்து அரண்ட குரல் வந்தது.

‘‘பான்தியான்.’’

கட்டை மிதியடிகள் கதவை நோக்கி வந்தன. மொஸ்கி ஸ்ட்ராட் அடுத்தாட்களால் ‘பொதுக்கை’ என்று அன்புடன் அழைக்கப்படும் சின்லாம் கதவைத் திறந்தான். பாண்டியன் உள்ளே நுழைந்தான். கதவு சாத்தப்பட்டது.

‘‘கோப்பி, துவான்?’’

‘‘கோப்பிடன் ரொக்கோ’’

காபி ‘மங்’கையும் மூராட் சிகரெட் பெட்டியையும் கொண்டுவந்து மேசையில் வைத்த பொதுக்கை, நிலவரம் எப்படியிருக்கிறதென்று கேட்டான்.

‘‘அஞ்சாதே, ஒரு ஆபத்தும் இல்லை’’ ஒரே மூச்சில் காபியைக் குடித்தவன், சிகரெட் பெட்டியை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.

பின்கட்டிலிருந்து, பொதுக்கையின் மனைவி குழந்தையைத் தாலாட்டும் கீச்சுக்குரல் வந்தது.

‘‘லய்_லய்_லய் லாஅஅய்!.... லய்_லய்_லாஅஅய்.’’

பாண்டியன் அலுவலகத்தை அடைந்து கதவைத் திறந்து உள்ளே போய் உள்புறம் தாழிட்டான். அடுத்த வினாடியே கதவை இடிக்கும் ஓசை கேட்டது. திறந்தான். சார்ட்டர்ட் பாங்க் கிராணி தங்கையாவும், மெத்தடிஸ்ட் பள்ளி ஆசிரியர் தில்லைமுத்துவும் சைக்கிளை அணைத்துக்கொண்டு நின்றனர்.

‘‘அமளி ஆரம்பமாகிவிட்டது, சுற்றிப் பார்க்கலாம் வா.’’ தங்கையா அழைத்தான்.

‘‘ஐந்தே ஐந்து நிமிஷம், உள்ளே வந்து உட்காருங்கள்’’

சைக்கிளைச் சுவரோரம் சாய்த்துவிட்டு இருவரும் உள்ளே போய் உட்கார்ந்தனர். பாண்டியன் வேகவேகமாக மாடிப் படிக்கட்டில் ஏறினான்.

வரலாற்று அபத்தத்தின் தரிசனம்-ஜெயமோகன்

(ப. சிங்காரம் படைப்புலகம் குறித்து....)
ஜெயமோகன்

ஓர் இலக்கியப் படைப்பின் சிறப்பம்சம் எதுவோ அதுவே அதன் வாசிப்புக்குத் தடையாகவும் ஆகும் என்று படுகிறது. ஏனெனில், அது நமது பழகிப்போன வாசிப்பைத் தடைசெய்து புதிய மனநிலையை, புதிய வாசிப்பு முறையைக் கோருகிறது. ஓர் அசலான கலைப்படைப்புக்கு எப்போதும் நூதனத்தன்மை _ இதற்கு முன்பு இதுபோல ஒன்று இல்லை என்ற உணர்வு இருக்கிறது என்பதை இதனுடன் சேர்த்து யோசிக்கலாம். சிங்காரத்தின் படைப்புகளில் நமக்குத் தடையாக அமையும் அம்சங்களையே அவற்றின் சிறப்புகளாகக் கொண்டு யோசிப்பது உதவிகரமானது.

`புயலிலே ஒரு தோணி’ நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் கட்டுமானம்தான். வழக்கமாக ஒரு பிரச்சினைக் களத்தைப் பங்கிடும் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களின் மோதல்களினூடாக அப்பிரச்சினையின் பல்வேறு தளங்களைத் தெளிவு படுத்தியபடி முன்னகர்ந்து முடிவுக்கு வருவதுதான் நாவல்களின் பாணியாக உள்ளது. பிரச்சினைக்களத்தின் பொருத்தம், நம்பகத்தன்மை, தீவிரம் ஆகியவை நாவலின் அடிப்படை வலிமையாக அமைகின்றன. அவற்றில் இயங்கும் கதாபாத்திரங்கள் அப்பிரச்சினைக் களத்தின் எல்லா சாத்தியங்களையும் பரிசீலிக்கும் அளவுக்கு உள்விரிவு கொண்ட ஆளுமைகளாக அமைவதும், கதாபாத்திரங்களின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று சமநிலைப்படுத்தப்பட்டிருப்பதும், கதாபாத்திரங்கள் பிரச்சினையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுதல் கொள்வதும் நாவலை மதிப்பிடும் அளவுகோல்களாகின்றன. ஆனால், இந்த அம்சங்களேதும் இந்நாவலில் இல்லை. இது முன்வைத்துப் பேசும் பிரச்சினை ஏதுமில்லை. ஒரு மனிதனின் வாழ்வு தவிர நாவலில் முழுக்கத் தொடர்ந்துவரும் பொது அம்சம் ஏதும் இல்லை. இந்த மையக் கதாபாத்திரமன்றி வேறு எந்தக் கதாபாத்திரமும் தொடர்ச்சியும், பரிணாமகதியும் கொண்டிருக்கவில்லை. வரலாற்றின் ஓர் அலை, அதில் ஏறி ஒரு கணம் உச்சியில் ஆரோகணித்து மறையும் ஒரு முகம் _ அவ்வளவுதான் இந்நாவல். அந்த மையக் கதாபாத்திரம்கூட படிப்படியான வளர்ச்சிச் சித்திரமாக முன்வைக்கப்படவில்லை. பாண்டியனின் முகம் ஓர் ஓவியம்போலவே நமக்குத் தெரிகிறது. ஆனால், வரலாற்றின் ஒரு பெரும் அலை பொங்கி சுழித்துக் கரைமோதி நுரைத்து வழிந்து இல்லாமலாகும் சித்திரத்தை இந்நாவல் அளித்துவிடுகிறது. தமிழின் பிற நாவல்கள் எதிலும் இதற்கிணையான வரலாற்று தரிசனத்தை நாம் அடைய முடியாது. அந்த தரிசனத்தை அளிக்கும் பொருட்டு உருவம் கொண்டதே இதன் வடிவம்.

`புயலிலே ஒரு தோணி’ என்ற தலைப்பு இவ்வகையில் பலவிதமான அர்த்த தளங்கள் கொண்டது. வரலாற்றின் அந்த அலை ஒரு புயலின் தூலம். அதில் பாண்டியன் ஒரு தோணி, ஒரு தனிமனிதன் (அல்லது தனிமனிதனின் இலட்சிய சுயபிம்பம்) வரலாற்றை எதிர்கொள்ளும் விதத்தைக் குறிப்புணர்த்துகிறது. அல்லது வரலாற்றில் அவனுடைய இடம் என்ன என்பதைச் சுட்ட முயல்கிறது. இதனுடன் இந்நாவலில் குறிப்பிடுமளவு பக்கங்களை எடுத்துக்கொண்டுள்ள புயல் காட்சியை இணைத்துப் படிக்கலாம். கவித்துவத்தினூடாகவும் உயர்தர அங்கதத்தினூடாகவும் நம்முடன் தொடர்பு கொள்ளும் இந்நாவலில் கவித்துவச் சித்திரிப்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக அமையும் பக்கங்கள் இவை. தங்கவட்டமதி பரிந்து கிளம்ப வெள்ளி மலர்கள் பூக்க விரியும் வானத்துக்குக் கீழே இனிய பயணம். வந்துமோதும் அலைகள் என எண்ணங்கள். நாகை, மாமல்லை, கொற்கை, புகார் என்று விரியும் இறந்தகால நினைவுகள். மதுரையும் சின்னமங்கலமும் படங்கள் படங்களாக நுரைத்தோடும் நினைவுப் பிரவாகம். ஆவன்னாவின் நீண்ட பிரலாபம். அதிலிருந்து சுருள் விரியும் பலவிதமான செட்டியார்களினாலான ஒரு வணிக உலகம். பிறகு புயல். ஒவ்வொன்றும் ஒழுங்கும் அடுக்கும் குலைந்து மோதிச் சிதற கூடவே மனமும் சிதறி சொற்சுழலாக மாறுகிறது. பிறகு புயல் ஓயும் அமைதி. கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என்று கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ முடிந்தபோதோ எவரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கடிகாரங்களும் நின்று போயிருந்தன... `இந்நாவலுள் வீசி ஒடுங்கும் வரலாற்றுப் புயல் அது. கடிகாரங்கள் நின்றுவிடுகின்றன. ஊடாக நுட்பமான ஒரு வரி நம்மைத் தொட்டு உசுப்பும். `கருநீலக் கடலுக்கடியில் ஏதோ புரள்வது போலிருந்தது. ஏதோ பெரிய மீன் அல்லது வேறுவகை நீர்வாசியாக இருக்கலாம்....’ கடல் அலைகளாக நினைவுகள் ஓயாது மோதும் அந்த முடிவற்ற பரப்பின் ஆழத்தில் புரள்வது என்ன? சிறுகதையின் கவித்துவத்திற்கும் நாவலின் கவித்துவத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. சிறுகதை வரிகளுக்கிடையேயான மௌனத்தின் குறிப்பமைதி மூலம் தன் கவித்துவத்தை நிகழ்த்துகிறது. நாவல் சித்திரிப்புகளின் உட்குறிப்புகள் ஒன்றையொன்று நிரப்பிக் கொள்வதனூடாகத் தன் கவித்துவத்தை அடைகிறது. நாவல் கவித்துவத்தை அடையாளம் காட்ட தமிழிலிருந்து முன்வைக்கச் சாத்தியமான மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று இந்தப் புயல்.

சித்திரிப்பின் தொடர்ச்சியை இந்நாவல் ஓர் உத்தியாகவே உதறி விட்டிருக்கிறது. மிதக்கும் நீர்பிம்பங்கள்போல முகங்கள் முன்வந்து மோதி மறைகின்றன. ஆவன்னா, நாவன்னா, டாலர் ராஜாமணி அய்யர், விடாக்கண்டன் செட்டி, மொக்தார், பலவேசமுத்து, ரத்தக்கண் அருஞ்சுனை நாடார், சாத்தையா என்று பற்பல கதாபாத்திரங்கள் ஒரு கணமே மின்னி மறைகிறார்கள். பலருக்குத் தனித்துவம்கொண்ட ஓர் முக அடையாளம் தரப்பட்டிருக்கிறது. (பொதுநிறம், முகத்தில் அறிவுக்களை _ மாணிக்கம்) சிலர் நினைவில் அதிர்ந்தடங்கும் குரல் மட்டுமாக வருகிறார்கள். (`மீராசா! அட பலே! அங்கெ பார்ரா, சோவன்னா மானா போற போக்கை. கிஜுகிஜு கிஜுகிஜுனு போட் மெயிலாட்டம் பரிஞ்சு போறாக.’) சிலருக்கு ஒரு சம்பவப் பின்புலம். இந்தத் துளி அடையாளமே இவர்களை நினைவின் பரப்பில் நிறுத்துகிறது. மாணிக்கம், கே.கே. ரேசன் முதலில் கதாபாத்திரங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு சற்று விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இக் கதாபாத்திரங்களை நினைவில் தொகுத்து அடுக்கி, இவர்களுக்கிடையேயான உறவின் கோடுகளை ஊடுபாவுகளாகக் கொண்டு ஒரு கதையைக் கற்பிதம் செய்ய முனைவோமெனில் மூளை சலித்துப் பின்திரும்ப நேரும். அதே சமயம் இவற்றை வெறும் முகங்களின் பரபரப்பாக, வரலாற்று அலையின் துளிகளாகப் பார்த்தோமெனில் மிக நுட்பமான காலதரிசனம் ஒன்று நமக்குக் கிடைக்கிறது... வரலாறென்பதும் காலம் என்பதும் உண்மையில் மனித முகங்களினாலான ஞாபகப் பிரவாகமன்றி வேறல்ல. இந்நாவலில் போரும் அழிவுகளும், வரலாற்றின் எல்லா நிகழ்வுகளும் இவ்வாறு மனிதமுகங்களின் நதியோட்டமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பலநூறு முகங்களில் நேதாஜியும் உண்டு, டாலர் ராஜாமணி அய்யரும் உண்டு. எதுவும் முக்கியமல்ல; எதுவும் முக்கியமற்றதும் அல்ல. கதாபாத்திரங்கள் இல்லாத முகப்பரப்பு என்பதே இந்நாவலின் குறை. முகங்களினாலான வரலாற்றுப் பரப்பு என்பதே இந்நாவலின் சிறப்பம்சம்.

பெரிய நாவல்களைச் சாத்தியமாக்குவதில் மொழிநடைக்குப் பெரும்பங்கு உண்டு. பெரும்பாலான நாவல் பேரிலக்கியங்கள் எல்லாவிதமான அலைகளையும் கொந்தளிப்புகளையும் தன்னுள் நிகழ்த்தக்கூடிய வலுவான தனித்துவ நடையால் ஆக்கப்பட்டுள்ளன. இந்நடையின் ஓட்டம் நாவலில் `தரை மட்டத்தில்’ உள்ள பகுதிகளை உச்சங்களுடன் பிணைத்து ஒரு முழுமையையும் சமநிலையையும் உருவாக்குகிறது. அந்நாவலுக்குரிய விசேஷமான உணர்வுநிலையை நாவல் முழுக்கப் பரவி நிற்கச் செய்வதாகவும் அந்நடை உள்ளது. ஆனால், புயலிலே ஒரு தோணியில் அப்படி நாவலை ஆக்கக்கூடிய பொதுவான தனிநடை ஒன்று இல்லை. இதன் குறைபாடுகள் இந்நாவலுக்கு உள்ளன. வாசிப்பில் நாவலனுபவம் அறுபட்டு மீளும் உணர்வு குறைந்தபட்சம் மூன்று முறையாவது நிகழ்வதற்குக் காரணங்களுள் இதுவும் ஒன்று. அதே சமயம் ஒருமையற்றிருப்பதன் மூலம் உருவாகும் சாத்தியங்களை இந்நாவல் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பதாகவும் படுகிறது. நாவல் எப்படி ஒருமையுள்ள நடையால், தொகுப்புத் தன்மையை திறம்பட சாதிக்கிறதோ அதேபோல தொகுக்கப்படும் அம்சங்களின் மொழிச் சிறப்பம்சங்களைத் தன் பொதுநடை மூலம் மழுங்கடித்துவிடும் அபாயத்தையும் எதிர்கொண்டபடி உள்ளது. `புயலிலே ஒரு தோணி’ தான் ஒருவேளை தமிழ் நாவல்களிலேயே மாறுபட்ட மொழிச் சாத்தியங்களினூடாகப் பயணம் செய்வதில் முதலிடம் பெறும் நாவல். ஆனால், இந்நாவலை நினைவு கூர்கையிலேயே மனம் ஒரு குறிப்பிட்ட மொழிநடையின் தாளத்தை அடையாளம் காண்பதில்லை. தனித்தனியான மொழித் துணுக்குகளாகவே நினைவுகூர்கிறது. இதை இந்நாவலின் தனித்தன்மை என்றும் பலவீனம் என்றும் கூறலாம்.

`புயலிலே ஒரு தோணி’யின் ஆரம்பக் காட்சிகளில் சாகசக் கதைகளுக்குப் பொருத்தமான துல்லியமான தகவல்களினாலான சித்திரிப்புகளும் தத்திச் செல்லும் கூறுமொழியும் காணப்படுகிறது. அப்பகுதியில் உரையாடல்களில் ஹெமிங்வேயின் உரையாடல்களை நினைவுறுத்தும் கனகச்சிதம். சில சமயம் மொழியைக் கவிதைக்கருகே கொண்டுவரும் தீவிர கணங்கள், பிறகு நாவலின் பொதுவான நடைநிறம் மாறுபடுகிறது. அங்கத அடிநாதம் நீங்காது கார்வை கூட்டும் குணச்சித்திரச் சித்திரிப்புகள் நாவலை புதிய புதிய இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன. ஒன்று கதாபாத்திரங்களைக் காட்டும் ஆசிரியரின் அங்கத நடை, அடுத்தது செட்டியார்களுக்குரிய விசேஷமான தமிழின் ஏற்ற இறக்கங்களைக்கூட வித்தாரமாகப் பதிவுசெய்யும் விதம். இந்த மொழியாட்டத்தின் மிகச் சிறந்த உதாரணம் வட்டிக் கணக்கும் வேசையரும் மாறிமாறி வந்துபோகும் செட்டிப்பிள்ளைகளின் கணக்கு ஒப்புவிக்கும் உரையாடல். பிறகு கவித்துவச் சாத்தியங்களைக்கொண்ட மீள்நினைவுச் சித்திரிப்புகளுக்கு நகர்கிறது நடை. கடல் அலைகளின் அடிகளையும் பாண்டியனின் நினைவலைகளின் மோதல்களையும் இணைத்திருக்கும் விதம் பலவிதமான கற்பனைச் சாத்தியங்களைத் திறந்துவிடுகிறது. பிறகு மீண்டும் சாகச நாவல்களுக்குரிய துல்லியமான தாவல்நடை. நடுநடுவே மரபிலக்கியங்களினூடாகக் கடந்து செல்லும் எள்ளல் நிரம்பிய விவாதங்கள். ஆக, இந்நாவல் ஒரு மொழி நிகழ்வு என்பதற்கு மேலாக ஒரு மொழிப் பிராந்தியமாக உள்ளது.

சிங்காரம் இந்நாவலில் மொழியின் சகஜத்தன்மையால் சாத்தியப்படும் சகஜ நகர்வை உதாசீனம் செய்கிறார். மொழியின் அதிகபட்சத் திறன் கோரப்படும் இடத்தில் மட்டும் அச்சவாலை நேரடியாக எதிர்கொள்கிறார். தருக்கமனம் அல்லது புறப்பிரக்ஞை சிதறும் தருணங்களில் அகமனம் உடைப்பெடுத்துப் பீறிடும்போது அதைப் பிரதிபலிக்க மொழி கொள்ளும் பாய்ச்சலையும் பறத்தலையும் சிதறலையும் திரிபுகளையும் சொல்லுவதே உரைநடையாளனுக்கு எப்போதும் பெரும் சவால் என்பதை ஒரு நாவலாசிரியனாக நான் உறுதியாகக் கூறமுடியும். அதை எந்த அளவு வெற்றிகரமாக நிகழ்த்துகிறான் என்பதே ஒரு படைப்பாளியின் நடையை அளக்கும் அளவுகோல். இந்நாவலில் அதற்கு மிகச் சிறப்பான மூன்று உதாரணங்களைக் கூற முடியும். ஒன்று போதையில் பாண்டியன் மனம் தடுமாறி வரலாற்று மாந்தரும் சமகால மனிதர்களும் இறந்தகாலமும் நிகழ்காலமும் எல்லையழிந்து கலந்த தெரு வழியாகச் சஞ்சரிக்கும் இடம். பட்டினத்தாரும், சீத்தலைச் சாத்தனாரும் பினாங்குச் செட்டியாரும் ஒன்றாக முயங்கிப் பிரிந்து நெளியும் அந்த மொழிப்பிராந்தியம் மரபிலக்கியப் பயிற்சியின் பின்புலத்துடன் வாசிக்கும் வாசகனுக்கு பற்பல சாத்தியங்களைத் திறந்தபடியே இருக்கும் ஓர் அற்புத அனுபவமாகும். இரண்டாவது சந்தர்ப்பம் புயல் அடிக்கும் கணங்களில் பாண்டியன் மனம் கொள்ளும் பதற்றத்தினூடாக சொற்கள் சிதறி அர்த்தமிழந்தும் அர்த்த ஆழம் அதிகரித்தும் கொந்தளிக்கும் விதம். மூன்றாவது சுடப்பட்டு இறப்பதற்கு முந்தைய சில கணங்களில் முழு வாழ்வும் பாண்டியனூடாகப் படங்களாகவும் சொற்களாகவும் பீறிட்டோடி மறையும் காட்சி.

மொழியின் அதிகபட்ச சாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட புனைவுச் சந்தர்ப்பங்கள் தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா. சுந்தர ராமசாமி ஆகியோரின் படைப்புலகிலேயே இதுவரை அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றுக்கு இணையாகவோ, வேறு ஒரு தளத்தில் ஒருபடி மேலாகவோ, இந்நாவலில் சிங்காரத்தின் மொழி மேலெழும் தருணங்களைக் குறிப்பிடலாம். மொழி சட்டென்று தன்னைக் குலைத்துக் கொண்டு சூழலின் தேவைக்கேற்ப புதுவடிவுகொண்டு அபூர்வமான வெளிப்பாட்டை சாதிக்கும் தருணங்களை இந்நாவலின் நடையில் தொடர்ந்து பார்த்தபடியே போகலாம். இந்நாவலின் முக்கியமான கவர்ச்சி இதுவேயாகும்.
* * * * *
சாகஸ நாவல்களின் பொது இலக்கணத்தில் இருந்து `புயலிலே ஒரு தோணி’ ஒரு முக்கியமான இயல்பு மூலம் வேறுபடுகிறது. சாகஸ நாவல்கள் பொதுவாக மதிப்பீடுகளில் நேர்நிலையம்சம் கொண்டவையாக இருக்கும். அவற்றின் சாகஸ நாயகன் பொதுவாக அனைவருக்கும் சம்மதமான விழுமியங்களையும் நெறிகளையும் கொண்டவனாக இருப்பான். பெரிய இலட்சியக் கனவுகள் சாகசங்களின் தவிர்க்க முடியாத மறுபக்கம்; உளவியல் ரீதியாகக்கூட. காரணம் இரண்டுமே மானுட எல்லை மீறலின் விளைவுகள். ஆனால், புயலிலே ஒரு தோணி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மரபு எதிர்ப்புத் தன்மையுடனும் நிறுவன எதிர்ப்புத் தன்மையுடனும் இருக்கிறது. நாவலின் ஒவ்வொரு பகுதியுடனும் விடுபடாது இணைந்திருக்கும் பொது அம்சம் என்னவெனில் அங்கதமும் எள்ளலும் நிரம்பிய ஆசிரியனின் மரபு எதிர்ப்புப் பார்வையைத்தான் குறிப்பிட வேண்டும். தீவிரம் மிக்க போர்ச் சித்திரிப்புகளில்கூட கசப்பு நிரம்பிய அங்கதம் ஊடுருவியிருக்கிறது. மெடான் நகரத்தில் ஜப்பானிய ராணுவம் புகுந்து, ஆனால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முந்தைய அராஜக நிலையைச் சித்திரிக்கும் ஆசிரியரின் நடையை கவனித்தால் இதை உணரலாம். தார்மீகமான சீற்றத்திற்குப் பதிலாக கசப்பின் விஷமே அவ்வரிகளில் நுரைக்கிறது. இந்த அங்கதம் சட்டென்று உக்கிரமடைந்து, வெட்டி மேஜைமீது வைக்கப்பட்ட மனிதத் தலைகளை மயிர் சீவிவிடும் சிப்பாயைக் காட்டும்போது காறி உமிழும் தீவிரக் கணமாக மாறிவிடுகிறது.

இந்த அங்கதப் பின்புலத்தில் ஒரு சாகச நாயகனைப் பொருத்தும்போது அவன் டான்குவிசாட்போல ஆகிவிடும் வாய்ப்புதான் அதிகம். ஆனால், சிங்காரத்தின் பாண்டியன் நுட்பமான ஒரு குணச்சித்திர விசேஷம் மூலம் பிற சாகச நாயகர்களிடமிருந்து மாறுபடுகிறான். அவனுக்கு எந்த இலட்சியங்களிலும் மிதமிஞ்சிய விசுவாசம் இல்லை. எதன் பொருட்டும் உயிர்துறக்கச் சித்தமானவனாக இல்லை அவன். நேதாஜி மீதும் இந்திய விடுதலைமீதும் அவனுக்கு ஈடுபாடு உண்டு. பக்தியோ வெறியோ இல்லை. பொதுவாக நெறிகள், விழுமியங்கள்மீது எள்ளல் நிரம்பிய பார்வையே பாண்டியனிடம் உள்ளது. அவனுடன் ஹெமிங்வேயின் `மணி முழங்குவது யாருக்காக?’’ என்ற நாவலின் கதாநாயகனை முதல்கட்ட ஞாபகமாக நாம் இணைத்துப் பார்க்க முடியும். எதற்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறானோ அதனுடன் ஆழ்ந்த மனவிலக்கம் உடைய தீரநாயகன். ஆனால், பாண்டியனுக்கு இருத்தல் சார்ந்த தேடல்களோ சஞ்சலங்களோ ஒன்றும் இல்லை. வெறுமே சாகசத்தின் சுவாரஸியத்தின் பொருட்டுத்தான் அவன் சாகஸத்தில் ஈடுபட்டான் என்று படுகிறது. சாகசம் அவன் இயல்பு என்பதனால், அதில்தான் அவனுக்கு உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்பதனால் இந்திய தேசிய ராணுவத்தின் சரிவிற்குப் பிறகு பாண்டியன்தான் வந்து குடியேறிய தேசத்தின், உணர்வுரீதியாக தனக்குப் பெரிய ஈடுபாடு ஏதுமில்லாத ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் ஈடுபட்டு உயிர்துறக்கிறான். ஹெமிங்வேயின் நாயகன் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதுபோல. ஆனால், பிந்தையதற்கு அன்று உலகளாவிய ஒரு புரட்சி முகம் இருந்தது. பாண்டியன் இந்தோனேசிய விடுதலைப் போரையும் பகடி செய்யத் தயங்கவில்லை. பல பக்கங்களில் பாண்டியனூடாக வெளிப்படும் அங்கதக்குரல் ஆசிரியர் குரலாகவே இருக்கிறது.

மொத்தமானதொரு பார்வையில் மானுடக் கலாச்சாரம் மீதான தீவிரமான அவநம்பிக்கையைப் பதிவு செய்கிற, ஞானத்தின் கசப்பு நிரம்பிய சிரிப்பை நிரப்பி வைத்திருக்கிற ஓர் இலக்கியப் படைப்பாக புயலிலே ஒரு தோணி காட்சியளிக்கிறது. அதிகாரப் போட்டியில் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருந்த மானுடத்தைப் போரினூடாகக் கண்டடைந்த நுட்பமான படைப்பு மனம் கொண்ட ஆழமான தரிசனம் அது. இந்நாவலின் சாரமே அந்த தரிசனம்தான். ஒரு பக்கம் செவ்விலக்கியங்களினூடாகவும் மறுபக்கம் சமகால அரசியல் நிகழ்வுகளினூடாகவும் அந்தப் பார்வை நகர்ந்து அபத்தத்தின் உச்சநிலையைத் தன் பக்கங்களில் சாத்தியமாக்குகிறது. இந்த அபத்த தரிசனத்தாலேயே இது தமிழின் மிக முதன்மையான படைப்புகளில் ஒன்றாக மாறுகிறது. சென்றகால இலக்கிய மதிப்பீடுகளில் இவ்வம்சம் ஒரு வேளை குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம். ஆனால், உலகளாவிய இலக்கியப் பரப்பில் இந்த அம்சம் இலக்கியத்தின் மைய தரிசனமாக ஆகிவிட்டிருக்கிறது என்று படுகிறது.

மூன்று தருணங்களை எடுத்துக்காட்டி இந்நாவலில் இயங்கும் இந்தப் பார்வையை விளக்கலாம். ஒன்று விபச்சார விடுதியில் நடக்கும் அந்தத் தமிழ்ப் பண்பாட்டாய்வு. ஒரு பக்கம் தண்டமிழாசான் சாத்தன் மணிமேகலையின் பிறப்பு ரகசியத்தை ஆய்வு செய்ய, மலேயாத் திருவள்ளுவர் சுப்பிரமணியனாரும் டத்தோ கிராமட் சாலையில் வீடு கொண்டு ஆன்றோர் விதித்த கற்புநெறி தவறாதொழுகி கலியுக கண்ணகி என்ற பட்டத்தோடு வாழும் வள்ளியம்மையாரும் அறநெறி வழுவாது ஒன்பதாம் இலக்க அறைக்குள் மருவ, யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் நிறைந்த தங்கக் கிண்ணங்களுடன் நடக்கும் தமிழாய்வின் சூட்சுமங்கள் மீண்டும் மீண்டும் வாசித்து விரிவுபடுத்திக்கொள்ள வேண்டியவை. இதன் மறுபக்கமாக சமகால உலக ஆதிக்க அரசியல்மீது கடும் கசப்பின் விஷத்தை உமிழும் கெ.கெ.ரேசன் தீர்க்கதரிசியின் மதுக்கடை சுவிசேஷம், ஏதென் தோட்டத்து ஆதாமியா முதல்வனின் கொடிவழி வந்த களவழி நாட்டு கலம்செய் கோவாம் கார்மேக தீர்க்கதரிசியின் புதல்வன் கதிரேசன், தீர்க்கதரிசியின் சொற்களினூடாக ஆங்கில ஆதிக்கத்தின் நிறமும் மதமும் மனோபாவமும் எள்ளி நகையாடப்படும் சந்தர்ப்பம் தமிழைப் பொறுத்தவரை மிகச் சிறந்த அங்கதப் புனைவுத் தருணம் என்று தயங்காமல் கூறலாம்.

இவ்விரு கோடுகளினூடாக நகர்ந்து வரும் ஆசிரியரின் வாழ்க்கைப் பார்வை ஆக்ரமிக்கப்பட்ட மண்ணில் நின்று குடித்து நிலைகெட்டு ``மைநேம் இஸ் கார்ட்டர் ஹிஹிஹி சி,ஏ,ஆர்,டி,இ,ஆர், கார்ட்டர். ஹிஹிஹி’’ என்று இளிக்கும் அமெரிக்கச் சிப்பாயில் உச்சம் கொள்கிறது. இந்நாவலின் அபத்த தரிசனத்தின் ஆகச் சிறந்த தருணமும் இதுதான். இன்று இந்நிமிடம்வரை உலகின் பல்வேறு நிலங்களில் பல்வேறு மொழிகளில் அந்த இளிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. (தற்செயலாக அமைந்ததென்றாலும் அந்த இளிப்பு அமெரிக்க இளிப்பாக இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.) அது பிரிட்டிஷ் இளிப்பு. அதற்கு முன்பு தைமூர்கள் ஜெங்கிஸ்கான்கள் அலக்ஸாண்டர்கள்..... அந்த இளிப்பைத் தொடர்ந்து பாண்டியனின் ஞாபகத்தில் விரியும் சின்னமங்கலத்தினூடாகப் பரவிப் பாய்ந்து செல்லும் ஆக்ரமிப்புகளின் நீண்டவரிசையைப் படிக்கும்போது ஏற்படும் வரலாற்றுச் சித்திரம் மிக அசாதாரணமானது. அச்சித்திரத்தில் இந்நாவலில் நிகழும் வரலாற்றின் ஒரு அலையை நாம் பொருத்தலாம். அதில் பாண்டியன் என்ற தனிமனிதனைப் பொருத்தலாம். அப்போது பாண்டியன் உதட்டில் எப்போதுமிருக்கும் அங்கதச் சிரிப்பு நமது உதட்டிலும் விரியக்கூடும்.
* * * * *
இந்நாவலில் உள்ள ஒரு சிறப்பம்சம் இன்றைய தமிழ்ச் சூழலுக்கு அன்னியமானது. தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலுக்கு மரபிலக்கியங்களுடன் பழக்கம் மிகமிகக் குறைவு. மரபிலக்கியப் பயிற்சி உடையவர்கள் மரபு மனம் கொண்டவர்கள். முதல்சாரார் இந்நாவலில் மரபிலக்கியங்கள் நுட்பமாகப் பகடி செய்யப்பட்டிருப்பதன் சுவையை உணரவே முடியாது போகும். இரண்டாம் சாரார் ரசிக்க முடியாது போகும். இந்நாவல் புறக்கணிக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மழலைத் திருமொழியில் சில மலாயும் சில தமிழும் குழறித் தருகுணநாடியர் குறுகிக் கடைதிறமின் என்று நேரடியாக (கலிங்கத்துப் பரணியை) பகடிசெய்யும் இடங்கள் இதில் நிறையவே உள்ளன. தாயுமானவர் பட்டினத்தார் வரிகள். ஆனால், பாண்டியனின் போதை நினைப்பினூடாகச் சித்தர் பாடல்களின் `ஊத்தைக்குழியில்’ தொடங்கி குறளின் `மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பத்தினூடாக’ பட்டினத்தாரின் மரண தரிசனத்தில் முடியும் ஒன்றரைப் பக்கத்தில் உள்ள மரபிலக்கிய உட்குறிப்புகளை படித்து ஒப்பிட்டு விரித்தெடுக்க புலமையும் கற்பனையும் நகைச்சுவையுணர்வும் ஒரே சமயம் கைகொடுக்க வேண்டும்.
* * * * *
`புயலிலே ஒரு தோணிக்கு’ மாறாக ஒருமையும் கூர்மையும் கொண்ட, எள்ளல் அம்சம் குறைவான, குறுநாவல் `கடலுக்கு அப்பால்’. போர் முடிந்து இந்திய தேசிய ராணுவம் சிதைந்து உணர்ச்சி உத்வேகங்கள் வடியும் தேய்பிறைக் காலகட்டத்தைக் காட்டும் படைப்பு இது. இதை புயலிலே ஒரு தோணியின் இரண்டாம் பகுதி என்றோ, சமன்பகுதி என்றோ கூறிவிடலாம். அபூர்வமான தனியாளுமைகளாக வெளிப்பட்ட மாணிக்கம், கெ.கெ.ரேசன் முதலிய கதாபாத்திரங்கள் அவ்வரலாற்றுச் சந்தர்ப்பம் முடிவடைந்ததும் பொருளிழந்து லௌகீகக் கடலில் மூழ்கி கரைந்து மறைவதின் சித்திரத்தை இந்தக் குறுநாவல் அளிக்கிறது. இம்மிகூட கற்பனாவாத, சாகஸப் பண்பு இல்லாத அப்பட்டமான யதார்த்தத்தில் இது காலூன்றி நிற்கிறது. இது புயலுக்குப் பிந்தைய அமைதி.

இக்குறுநாவலின் முக்கிய அம்சங்கள் மூன்று. ஒன்று இதன் மையக் கதாபாத்திரமான செல்லையா. அவன் பாண்டியனின் நீட்சி; மற்றொரு சாத்தியம். போர் முடிந்த சகஜநிலையில் வீரமும் சாகசமும் அர்த்தமிழந்து போய் உலகியலுக்கு உதவாதவையாக மாறிவிடும்போது எந்த அர்த்தமும் உபயோகமும் இல்லாத பழம்பொருள்போல வீணாக, துருத்தியபடி நிற்கிறான் அவன். லௌகீக வாழ்வில், வட்டித் தொழிலுக்குள், நுழைய அவன் முயல்வதன் பரிதாபச் சித்திரம் இதில் உள்ளது. எலிவளையில் புலி நுழைய முயல்வதுபோல. போரை வென்றவனை அமைதி தோற்கடிக்கிறது, பரிபூரணமாக.

வானாயீனா இன்னொரு முக்கியமான கதாபாத்திரம். நாணலின் வலிமை அவருடையது. வெள்ளம் வடிந்ததும் நாணல் நிமிர்ந்து வேரோட ஆரம்பிக்கிறது. இந்தத் தோற்கடிக்க முடியாத தன்மையை செல்லையாவும் எதிர்கொள்ள முடியவில்லை. தனக்கென ஒரு வாழ்க்கை நோக்கும் அதற்கான பழக்க வழக்கங்களும் அவற்றைப் பின்பற்றத் தேவையான மன உறுதியும் உடையவர் அவர். அவருடைய நியாயங்கள் அவரளவிற்கு தருக்க பூர்வமானவை.

மூன்றாவது மையம் மரகதம். அவளால் ஒருபோதும் எல்லையை மீற முடியாது. ஆனால், தன்னால் சற்றும் நேசிக்கப்படாத நாகலிங்கத்திற்கு மனைவியாக முடியும். அதற்குக் கற்பு தடையாக இராது. எது சம்பிரதாயமோ அதுவே நீதி என்று நம்புகிற அழுத்தமான `உள்வீட்டு’ப் பார்வை அவளுடையது. திருமணமான ஓரிரு நாட்களில் அவள் செல்லையாவை மறந்து நாகலிங்கத்தின் `வீட்டுக்காரியாக’ சந்தோஷமாக இருப்பாள். செல்லையாவைத் தனியாகச் சந்திக்கும் உணர்ச்சிகரமான தருணத்தில்கூட தொடாதீங்க, தொடாதீங்க என்றுதான் அவள் புலம்புகிறாள்.

இம்மூன்று மையங்களுக்கும் இடையேயான மறுசாத்தியங்கள் இல்லாத இடைவெளியே இந்நாவலின் கரு. அந்த எல்லையை எவரும் கடக்க முடியாது. `புயலிலே ஒரு தோணி’ மானுட மீறலின் கதை. `கடலுக்கு அப்பால்’ மானுடனின் மீற முடியாமைகளின் கதை. `எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்ற தாயுமானவரின் வரி இந்த நாவலின் உச்சகட்டக் குரலாக ஒலிக்கிறது. இலட்சியக் கனவுகள், ஆசைகள், சாகசங்கள், மீறல்கள், வரலாற்றின் அலைக் கொந்தளிப்புகள், அதிகாரங்கள், வெற்றி தோல்விகள், இழப்புகள் _ எல்லாம் இறுதியில் அவ்வரியில் முடிகின்றன. இந்த எதிர்மறை தரிசனம் இந்நாவல்களின் முடிவில் ஏன் ஒரு நிறைவுணர்வை, முழுமையுணர்வைத் தரவேண்டும். முதிர்ந்த அங்கதம் கனிந்த வெறுமையில் முடிவதில் ஒருவிதமான உன்னதம் கைகூடுவது எப்படி?
* * * * *
இவ்விரு நாவல்களின் கலைரீதியான எல்லைகள், பலவீனங்கள் என்ன? மனித வாழ்வு தவிர்க்க முடியாமைகளினால் ஆன பெரும் நாடகம். சாத்தியங்களின் எல்லையின்மைக்கும், மானுட வாழ்வின் இன்றியமையாமைக்கும் இடையேயான உச்சகட்ட மோதலையே பேரிலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால், `புயலிலே ஒரு தோணி’ இவ்வுள் மோதல்களை கணக்கில் கொள்ளவேயில்லை. ஒன்றொடொன்று உறவற்ற, மிதக்கும் தனிப்புள்ளிகளாக ஒவ்வொன்றையும் கண்டு நகர்ந்து முடிகிறது அது. அதாவது அது வாழ்வை விலகிநின்று வேடிக்கை பார்க்கிறது. வாழ்வின் நாடகத்தினூடாக, இன்றியமையாத சாரமாகத் திரண்டு வரும் அங்கதமல்ல அதில் உள்ளது. மாறாக ஆசிரியரின் பார்வை அந்நிகழ்வுகள்மீது படியவைக்கும் அங்கதமாகும். அதே சமயம் இன்றியமையாமைகளின் தீவிர மோதலின் கணம் `கடலுக்கு அப்பாலி’ல் உள்ளது. ஆனால், அது அந்த இரும்புவிதியை அடையாளம் காட்டுவதன் வழியாகவே நின்றுவிடுகிறது. `புயலிலே ஒரு தோணியை’ கிரேக்க இன்பியல் நாடகங்களின் அங்கதத்துடன் ஒப்பிடுவதனூடாகவே அதன் அழகியல் குறைகளை அறியமுடியும். அந்நாடகங்களில் அங்கதம் (அல்லது அங்கத அவலம்) ஒரு பார்வையாக அல்ல, மாறாக அவை சித்திரிக்கும் வாழ்வின் தவிர்க்க முடியாத இயங்குவிதியாகத் திரண்டு வருகிறது. அதாவது அவற்றில் சிரிப்பது ஆசிரியன் அல்ல, விதி.
* * * * *
தமிழ் என்றென்றும் பெருமையுடன் எண்ணிக் கொள்ள வேண்டிய மீண்டும் மீண்டும் மீண்டும் வாசித்துப் படைத்தெடுக்க வேண்டிய முக்கியமான சில சிறந்த படைப்புகளில் இந்நாவல்களும் உண்டு.
(தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் `புயலிலே ஒரு தோணி’ புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பின்னுரையின் சுருக்கம்)

புயலிலே ஒரு தோணி (இரண்டு நாவல்கள்)
ப. சிங்காரம்
பக். 416; ரூ. 180; தமிழினி,
342 டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை,
சென்னை_14;  email : tamilini@intamm.com

ப. சிங்காரம்

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், திருபத்தூர் வட்டம், சிங்கம்புணரி என்னும் கிராமத்தில் நாடார் பேட்டையில் 1920_ஆம் ஆண்டு ஆகஸ்டு 12_ஆம் தேதி ப. சிங்காரம் clip_image002பிறந்தார். தந்தை மூக்க நாடார் என்ற கு. பழநிவேல் நாடார் ; தாயார் பெயர் உண்ணாமலை அம்மாள். இவர்களுக்கு சிங்காரம் மூன்றாவது மகன். அப்போது, சிங்காரத்தின் தந்தை, அண்ணன்கள் ப. சுப்பிரமணியம், ப. பாஸ்கரன் மற்றும் அவரது தாத்தா ப. குமாரசாமி நாடார் ஆகியோர் சேர்ந்து சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

சிங்காரம், சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பின்னர் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பும் பயின்றார். 1938_ஆம் ஆண்டு செ.கா. சின்னமுத்துப்பிள்ளை என்கிற சிங்கம்புணரிக்காரர் இந்தோனேஷியாவில் மைடான் என்ற இடத்தில் நடத்தி வந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காக கப்பலில் சென்றார். 1940_ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பின்னர் மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கு மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். இச்சமயத்தில் தென்கிழக்காசிய யுத்தம் மூண்டது. யுத்தம் முடிந்ததும் இந்தோனேஷிய இராணுவ அரசின் அனுமதி பெற்று, பினாங்குக்குக் கப்பலில் சரக்குகள் அனுப்பும் வர்த்தகத்தைச் சில தமிழர்களுடன் சேர்ந்து செய்தார்.

யுத்த காலத்தில் இந்தோனேஷியாவை ஜப்பான் துருப்புகள் கைப்பற்றியபோது அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டு, புத்தகங்கள் தெருவில் வாரிக் கொட்டப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்பத்தில் நூலகத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவர் மூலம் சிங்காரத்துக்கு பல ஆங்கில நூல்கள் கிடைத்தன. அப்போது, குறிப்பாக ஆங்கில நாவல் வாசிப்பு சிங்காரத்துக்கு ஏற்பட்டது. அவரை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் ஹெமிங்வே.

இந்தானேஷியாவில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். தலைப்பிரசவத்தின் போது அவரது மனைவியும் பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர்.

1946_ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய சிங்காரம் பின்னர் மீண்டும் இந்தோனேஷியா செல்ல திட்டமிட்டார். ஆனால் கடைசிவரை அங்கு செல்லாமல் மதுரையிலேயே தங்கிவிட்டார். 1947_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மதுரைச் செய்திப் பிரிவில் சேர்ந்தார். சொந்த ஊருக்கும், நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்த்து மதுரை ஒய்.எம்.சி.ஏ.வில் தனியாக தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். 1987_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 1997_ஆம் ஆண்டு ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் அவரை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியது. பிறகு மதுரை, விளக்குத்தூண் அருகிலுள்ள நாடார் மேன்சனில் வாடகை அறையெடுத்து தங்கியிருந்தார். கடைசி காலத்தில் அவரது வாழ்நாள் சேமிப்பான ரூபாய் ஏழு லட்சத்தை, மதுரை நாடார் மகாஜன சங்கம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகைத் திட்டத்திற்காக வழங்கினார். அப்போது தனது பெயரில் அறக்கட்டளை, புகைப்படம் திறப்பு போன்றன வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டாராம்.

நாடார் மேன்சனில் வாழ்ந்த கடைசி மூன்று மாதங்களிலும்கூட, எல்லோருடனும் சுமுகமாகப் பழகியபோதும், யாருக்கும் தொல்லை தரக்கூடாது என்று ஒதுங்கியே இருந்தார். சொந்த வாழ்க்கை பற்றியோ அந்தரங்க விஷயங்களையோ எப்போதும் அவர் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இப்படி அவராக விரும்பி, தனியாக ஒதுங்கி வாழ்ந்ததற்கு, 25_வது வயதில் அவரது இளம் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டது, வாழ்க்கைப் பற்றிய அவநம்பிக்கை-யையும் இறுக்கத்தையும் அவரிடம் ஏற்படுத்திவிட்டது-தான் காரணம் என்று கூறப்படுகிறது.

எழுத்துலகத்திலிருந்தும் குறிப்பாக நூல்களை பதிப்பிப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகத் தொடர்ந்து எழுதாமல் ஒதுங்கிக் கொண்டார். 1950_ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினார். புலம் பெயர்ந்து அந்நியச் சூழலில் வாழும் தமிழர்கள் வாழ்வை களனாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இது. இதைப் பிரசுரம் செய்ய மதுரைக்கும் சென்னைக்குமாக பல தடவைகள் அலைந்தார். பின்னர் ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினார், திரும்பி வந்தது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1959_ஆம் ஆண்டு கலைமகள் நாவல் போட்டியில் ‘கடலுக்கு அப்பால்’ முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. 1962_ஆம் ஆண்டு ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அது பத்து ஆண்டுகளாக பல பிரசுரகர்த்தர்களின் கைமாறி, கடைசியில் மலர் மன்னன் (‘1/4’ இதழை நடத்தியவர்) எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக 1972_ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் பெரியதாகயிருக்கிறது என்கிற காரணம் சொல்லி எடிட் செய்யப்பட்டு, வெளியானது. ‘‘அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் படைப்பு தீர்மானிக்கப்-படும் தமிழ்ச் சூழலில், எழுத்தாளனுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று ஒதுங்கியிருந்த சிங்காரம் பல காலமாகச் சற்றும் பொருட்படுத்தப்படாமல் அசட்டையாக ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமில்லை’’ என்கிறார் விமர்சகரான சி. மோகன். ‘புதுயுகம் பிறக்கிறது’ பத்திரிகையில் வெளியான நாவல் பற்றிய கட்டுரையில் தொடங்கி தமிழ்ச் சூழலில் ப. சிங்காரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சி. மோகன் மட்டும்தான். சிங்காரத்தின் மறைவுக்குப் பின்னர் 1999_ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ இரண்டு நாவல்களையும், எடிட் செய்யப்படாத மூலப் பிரதியை தேடியெடுத்துப் பதிப்பித்தது.

ப. சிங்காரம், வாழ்வின் கடைசி 2 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 1997_ஆம் ஆண்டு டிசம்பர் 30_ஆம் நாள் விடாத வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மதுரை, கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே மருத்துவமனையிலிருந்து ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே சென்ற வழியில் ஆம்புலன்ஸிலேயே அவர் உயிர் பிரிந்தது. மதுரைக்கு அருகில் தத்தநேரி சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர், கடைசியாக தனது இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்கவேண்டாம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்