1
சிறு தெய்வங்களை
சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்
பெருந் தெய்வம்தான்
பிடிகொடுத்துத் தொலைக்காது
2
முந்தாவிட்டால் ஒன்றும்
மோசமில்லை
பிந்திவிட்டாலோ
பெரும்பாதகம் வந்துவிடும்
3
செடிகள்
வளர்கின்றன
குழந்தைகள்
வளர்கிறார்கள்
எனில்
மரங்களுக்கு
வருவதில்லை மனநோய்
4
பறவைகள்
பறக்கும் ஆகாயத்தில்
புழுக்கள்
வளரும் பூமியில்
மானுடம் மட்டும்
மயங்கும் இடம் தெரியாமல்.
மிக நன்று !
ReplyDeleteசெடிகள்
ReplyDeleteவளர்கின்றன
குழந்தைகள்
வளர்கிறார்கள்
எனில்
மரங்களுக்கு
வருவதில்லை மனநோய்//
அருமை !
simple way of great things
ReplyDeleteஉங்க கவிதை எல்லாம் படிக்காமல் வெறும் வைரமுத்து. . வாலினே. . பாதி வாழ்க்கை போச்சு..
ReplyDeleteபல்கலைக்கழகங்ளும். . கல்லூாிகளும் இன்னும் பாரதி பற்றியே பாடம் நடத்துகின்றன. என்னத்த சொல்ல. . மீதி .இருக்க காலத்திலையாவது. . உங்க மாதாி ஆளகள. . . தேடுவோம்
காடுகள்
ReplyDeleteஅழிய அழிய
சுடுகாடுகள்
பெருகும்'
விக்ரமாதித்தனின் கவிதையை வாசிக்கும் போது தோன்றிய வரிகள். விக்ரமாதித்தனின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பகிர்விற்கு நன்றி.