எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.
தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
அழியாச்சுடர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!!! சாகித்ய விருது புத்தகத்திற்கு வழங்கப்படுவதா அல்லது எழுத்தாளருக்கு வழங்க படுவதா? புத்தக அடிப்படை இருந்தால், காவல் கோட்டம் ஒரு தகுதியான நாவல் தான். வாழ்வியல் சாதனைக்கு இந்த விருது தர படுவது இல்லை என்பது என் எண்ணம். மற்ற எழுத்தாளர்களின் காழ்புணர்ச்சியப் பார்க்கும் பொழுது, அங்கீகாரம் என்பதை விட மனித மனம் வேறு எதையோ தேடுகின்றது. எழுத்தாளர்களும் விதி விலக்கல்ல.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிரு.சு.வெங்கடேசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதகவலுக்கு நன்றி திரு.ராம்.
நாவல் எனக்குப் பிடித்திருந்தது. மதுரையைப் பற்றி என்பதனால் விரும்பி வாங்கினேன். வரலாற்றை புனைவாக அறிந்துகொள்ளுதல் மிகுந்த உத்வேகமூட்டுவதாக இருந்தது.முக்கியமாக மதுரை கோட்டைச் சுவர் இடிக்கப்படும்போதும், தாதனூர்ர்க் கள்வர்களின் களவு முறைகளை விவரிப்பதிலும் சு. வெ.வின் எழுத்துநடை அபாரமாக இருந்தது. கட்டாயம் படிக்கவேண்டிய வரலாற்று நாவல்.
ReplyDeleteகாவல்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி கொடுத்தமைக்கு வாழ்த்துகள். எங்கள் மதுரையை குறித்த ஆவணம். வாசிக்க வாசிக்க விறுவிறுப்பூட்டும் நடை. காவல்கோட்டம் எழுதிய சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள். மதுரையை மையமாக கொண்டு எழுதியமைக்கு நன்றிகள் பல.
ReplyDelete