.
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.
உலகம் ஆரம்பிக்கும்
உலகம் ஆரம்பிக்கும் ஓசைகள் கேட்கின்றன
சிலபல
குரல்கள் மோதி
பாறை சிலையாகி
சிலபல
குரல்கள் மோதி
சிலை
பாறையாகி
தெருவில்
ரெண்டு பிள்ளைகளை
சிறகுகள் என கோர்த்தபடி
செல்லும் பெண்
பள்ளிக்கூடத்தில்
தெருவில்
நடுவீட்டில்
யாரைப் பார்த்தாலும், நல்ல செய்தி
எதுவும்
காதில் விழவில்லை
*****
நன்றி: அரியவை
காற்றில்
ReplyDeleteஅலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன .
தேவ தச்சனை பற்றிக் கேட்டால் தூக்கத்தில் கூட எழுந்து நாம் அடையாளம் சொல்ல முடியும்படியான கவிதை இது.
சமீபமாக பெங்களூரு பண்பலையில் எதேச்சையாக ஒரு பாடல் கேட்டேன். "காலியே நோடனா தீபதா நர்த்தனா" என்ற கன்னட வரிகள் அரைகுறையாக தெரிந்த என் மனதையே ஈர்த்தது.
காற்று பார்க்கும்போது
தீபம் நடமிடுகின்றது
என்ன ரம்யமான வரிகள். அப்போது
"காற்று ஒருபோதும்
ஆடாத மரத்தை பார்த்ததில்லை"
என்ற தேவ தச்சன் நினைவுக்கு வந்தார்.