சென்னையில் 36-வது புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் ஜனவரி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் காட்சி நடைபெற்றது.இப்போது அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அங்கு கண்காட்சியை நடத்த முடியவில்லை.2013ஆம் ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கண்காட்சி ஜனவரி 11-ம் தேதி தொடங்கி, ஜனவரி 23ஆம் தேதி வரை, மொத்தம் 13 நாட்கள் நடைபெறவுள்ளது.
வார நாள்களில் மதியம் 2 மணி முதல் 8.30 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இந்த முறை புத்தகக் காட்சி நடைபெற உள்ள 13 நாள்களில் 7 நாள்கள் விடுமுறை நாள்களாக வருகின்றன.
அனைவரும் வருக.
No comments:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.