Dec 21, 2011

சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.

தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

venkatesan1_300 Kaval_Kottam-su.venkadesan_buy_tamil_book__66978_zoom

 

அழியாச்சுடர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகள்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

6 கருத்துகள்:

மைந்தன் சிவா on December 21, 2011 9:30 PM said...

வாழ்த்துக்கள்!!

Prem on December 21, 2011 11:07 PM said...

வாழ்த்துக்கள்!!! சாகித்ய விருது புத்தகத்திற்கு வழங்கப்படுவதா அல்லது எழுத்தாளருக்கு வழங்க படுவதா? புத்தக அடிப்படை இருந்தால், காவல் கோட்டம் ஒரு தகுதியான நாவல் தான். வாழ்வியல் சாதனைக்கு இந்த விருது தர படுவது இல்லை என்பது என் எண்ணம். மற்ற எழுத்தாளர்களின் காழ்புணர்ச்சியப் பார்க்கும் பொழுது, அங்கீகாரம் என்பதை விட மனித மனம் வேறு எதையோ தேடுகின்றது. எழுத்தாளர்களும் விதி விலக்கல்ல.

திண்டுக்கல் தனபாலன் on December 21, 2011 11:12 PM said...

அருமை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!

யுவபாரதி on December 21, 2011 11:41 PM said...
This comment has been removed by the author.
R.Sezhiyan on December 27, 2011 8:07 PM said...

திரு.சு.வெங்கடேசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
தகவலுக்கு நன்றி திரு.ராம்.

Thangavel Gurusamy on December 30, 2011 8:48 PM said...

நாவல் எனக்குப் பிடித்திருந்தது. மதுரையைப் பற்றி என்பதனால் விரும்பி வாங்கினேன். வரலாற்றை புனைவாக அறிந்துகொள்ளுதல் மிகுந்த உத்வேகமூட்டுவதாக இருந்தது.முக்கியமாக மதுரை கோட்டைச் சுவர் இடிக்கப்படும்போதும், தாதனூர்ர்க் கள்வர்களின் களவு முறைகளை விவரிப்பதிலும் சு. வெ.வின் எழுத்துநடை அபாரமாக இருந்தது. கட்டாயம் படிக்கவேண்டிய வரலாற்று நாவல்.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்