Jan 31, 2013

நுஃமானுக்கு விளக்கு விருது (2011)

இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள்
2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளnuhman03ர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது.

பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் (2001), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்  (1987), திறனாய்வுக் கட்டுரைகள் (1986), பாரதியின் மொழிச்சிந்தனைகள் (1999), இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், (1979), அடிப்படைத் தமிழ் இலக்கணம் (2007) ஆகிய பேராசிரியர் நுஃமானின் முக்கியமான விமரிசன நூல்கள். மழைநாட்கள் வரும் (1983), அழியா நிழல்கள் (1982), தாத்தாமாரும் பேரர்களும் நெடுங்கவிதைகள் (1977), பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984) ஆகிய கவிதை  நூல்கள் மிகப் பரவலாக அறியப்பட்டவை.

பாலஸ்தீனக்கவிதைகள், முப்பது கவிஞர்களின் 109 கவிதைகள் (2008), மொகமூத் தர்விஸ் கவிதைகள் (2008), பாலஸ்தீனக்கவிதைகள், 15 கவிஞர்களின் 71 கவிதைகள் (2000), காற்றில் மிதக்கும் சொற்கள் ( மலாய் மொழி கவிதைகள்), இரவின் குரல் (இந்தோனேசிய மொழி கவிதைகள்) ஆகியன குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புக் கவிதைகள், தொகுப்பு நூல்கள் பலவற்றையும் மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கைப் பெரேதனியப் பல்கைலக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியாகப் பணியாற்றும் நுஃமான் அவர்கள் அண்ணாமலைப்பல்கைலக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் மலாய்ப் பல்கலைக் கழகத்திலும் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இலங்கையிலுள்ள பன்னாட்டு இனவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றி வருகிறார்.

பரிசளிப்பு விழாத் தேதியும் பிற விவரங்களும் விளக்கின் இந்தியத் தொடர்பாளரான வெளி ரங்கராஜன் அவர்களால் விரைவில் வெளியிடப்படும்.

நா. கோபால்சாமி
விளக்கு அமைப்பாளர்
2013-01-17

தகவல் : திண்ணை

Jan 18, 2013

பிரபஞ்சனுக்கு சாரல் விருது 2013

 

ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளை சார்பில், எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், தேனுகா, ரவி சுப்பிரமணியன் ஆகியோரை நடுவராகக்கொண்டு வருடாவருடம் சாரல் விருது இலக்கிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு சாரல் விருது வழங்கப்படுகிறது.

இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள்:
2009- திலீப்குமார்
2010- ஞானக்கூத்தன்
2011-அசோகமித்திரன்
2012-வண்ணநிலவன், வண்ணதாசன்

விழா ஜனவரி 26 சனிக்கிழமை நடைபெறுகிறது.
அனைவரும் வருக.

01

விழா அழைப்பிதழ்

saral_2013-final

Jan 10, 2013

36-வது சென்னை புத்தகக் கண்காட்சி -2013

சென்னையில் 36-வது புத்தகக் க‌ண்காட்சி வரு‌ம் ஜனவரி 11-ம் தேதி முத36th_chennai_bookfair_logoல் ஜனவரி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் காட்சி நடைபெற்றது.இப்போது அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அங்கு கண்காட்சியை நடத்த முடியவில்லை.2013ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான பு‌த்தக‌க் க‌ண்கா‌ட்‌சியை  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இ‌ந்த க‌ண்கா‌ட்ச‌ி ஜனவரி 11-ம் தேதி தொடங்‌கி, ஜனவ‌ரி 23ஆ‌‌ம் தே‌தி வரை, மொ‌த்த‌ம் 13 நா‌ட்க‌ள் நடைபெறவு‌ள்ளது.

வார நாள்களில் மதியம் 2 மணி முதல் 8.30 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இந்த முறை புத்தகக் காட்சி நடைபெற உள்ள 13 நாள்களில் 7 நாள்கள் விடுமுறை நாள்களாக வருகின்றன.

 

alt

அனைவரும் வருக.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்