Oct 19, 2008

மருமகள் வாக்கு-கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி (நன்றி : ஸ்நேகா பதிப்பகம் வெளியீடு. )மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது. சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள்...

கிருஷ்ணன் நம்பி

தமிழகத்தின் தென்முனையில் கன்னியாக் குமரி மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்றான அழகியபாண்டிபுரத்தில் 1932 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கிருஷ்ணன் நம்பி பிறந்தார். பெற்றோர்களுக்கு கிருஷ்ணன் நம்பி முதல் குழந்தை. அவருக்கு அவர்கள் இட்ட பெயர் அழகிய நம்பி. கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் ; இரண்டு சகோதரிகள். அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை 1939இன் பிற்பகுதியில் நாகர்கோவிலில்...

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன் போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் ,ல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா ,ன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த...

குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்-ஆத்மாநாம்

ஆத்மாநாம் ஹலோ என்ன சௌக்கியமாஇப்பொழுது புதிதாக என்ன விளையாட்டுக் கண்டுபிடித்துள்ளாய்உன்னுடைய குஞிச்ட்ணீ எப்படி இருக்கிறதுபூச்செடிகளுக்கிடையேபுல்தலைகளின் மேல்நெடிய பசும் மரங்களின் கீழ்சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சிமரச்சுவர்களுக்கிடையேசிவப்பு வீட்டின் உள்ளேயிருந்துஷிநீணீனீஜீ எட்டிப் பார்க்கிறான்வெளியே பழுப்புநாய் இருந்தான்என்ன விஷயமென்று குஞிச்ட்ணீ வெளியே வந்தான்தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில்சீக்கிரம் வந்துவிடு என்றான்பலவர்ண...

ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பெற்றோர்களின் சொந்த ஊரான மதுரையில் அவர்களின் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை பெயர் கணேச அய்யர்; பழனியில் வக்கில் தொழிலை மேற்கொண்டு வந்தார். நாகராஜனின் நான்காவது வயதில் அவரது தாயார். தமது ஒன்பதாவது பிரசவத்தின்போது மரணமடைந்தார். நான்கு குழந்தைகள் பிறப்பின் போதும், பிறந்து சில மாதங்களுக்குள்ளாகவும் இறந்துவிட்ட நிலையில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஜி. நாகராஜனுக்கு...

என் ரோஜாப் பதியன்கள்-ஆத்மாநாம்

ஆத்மாநாம் என்னுடைய இரண்டு ரோஜாப்பதியன்களைஇன்றுமாலை சந்திக்கப் போகிறேன்நான் வருவது அதற்குத் தெரியும்மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவதுஎனக்குப் புரிகிறதுநான் மெல்லப் படியேறி வருகிறேன்தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றனபுன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்செருப்பைக் கழற்றி முகம் கழுவிபூத்துவாலையால் துடைத்துக் கொண்டுகண்ணாடியால் எனைப்பார்த்துவெளி வருகிறேன்ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்திஎன் ரோஜாப்...

முத்தம்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்முத்தம் கொடுங்கள் பரபரத்துநீங்கள்முன்னேறிக் கொண்டிருக்கையில்உங்கள் நண்பி வந்தால்எந்தத் தயக்கமும் இன்றிஇறுகக் கட்டித் தழுவிஇதமாகதொடர்ந்துநீண்டதாகமுத்தம் கொடுங்கள்உங்களைப் பார்த்துமற்றவர்களும்அவரவர்நண்பிகளுக்கு முத்தம்கொடுக்கட்டும்விடுதலையின் சின்னம் முத்தம்முத்தம் கொடுத்ததும்மறந்துவிட்டுசங்கமமாகிவிடுவீர்கள்பஸ் நிலையத்தில்ரயிலடியில்நூலகத்தில்நெரிசற் பூங்காக்களில்விற்பனை அங்காடிகளில்வீடு சிறுத்துநகர் பெருத்தசந்தடி...

ஆத்மாநாம்

பிரக்ஞை பூர்வமாக எதிர் கவிதை எழுதியவர்களில் ஆத்மாநாம் முதன்மையானவர். அவரின் சமூகக் கவிதைகளிலும் சரி, நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் சரி, ஒரு மெல்லிய கீற்றாக நம்பிக்கை துளிர்த்து நிற்கிறது. ஆத்மாநாமின் இயற்பெயர் எஸ்.கே. மதுசூதனன். 1951ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தவர். 1978இல் மனநலத்தாக்குதல் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆத்மாநாம் 1983 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஆனால் பின்பு...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்