பாத மலர் மலரற்ற தார் ரோடில் பாதங்கள் விழிக்கு மலர். கார் அலையும் தெருக்கடலில் பாதங்கள் மிதக்கும் மலர். வெயில் எரிக்கும் வெறுந் தரையில் வழி யெதிரில் பாவாடை நிழலுக்குள் பதுங்கி வரும் வெண் முயல்கள். மண்ணை மிதித்து மனதைக் கலைத்தது, முன்னே நகர்ந்து மலரைப் பழித்தது பாதங்கள். மனிதனுக்கு மேக நிழல் மிக மெல்லிய நைலான் துணியாய் நிலத்தில் புரளும், பகல். தார் ரோடில் தன்...
May 22, 2012
பாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 8:34 AM |
வகை:
எஸ். வைத்தீஸ்வரன்,
கவிதைகள்

May 19, 2012
எழுத்தாளுமைகள் பற்றிய ரவிசுப்ரமணியனின் ஆவணப்படங்கள்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:52 PM |
வகை:
ஆவணப்படம்,
இந்திரா பார்த்தசாரதி,
மா. அரங்கநாதன்,
ரவிசுப்ரமணியன்,
ஜெயகாந்தன்

1. ஜெயகாந்தன்:எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்
“ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால், அவன் ஒரு பேட்டியிலோ அல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சார்ந்த நோக்கில் இத்தகைய ஆவணப்படுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை.
ஆனால் நமக்கு இலக்கியவாதி...
May 13, 2012
ராஜகுமாரி-லா.ச.ரா
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 10:49 AM |
வகை:
கதைகள்,
லா.ச. ராமாமிருதம்

நிழல்கள் நீளத் தொடங்கிவிட்டன. பொழுதின் உருவச் சோதனைகளாய் வானத்தில் வண்ணங்கள் குமைகின்றன. கோணக்கிழக்கில் அடிவானத் திருப்பத்தில் தோன்றியிருக்கும் நீலச் சிரிப்பின் குறுக்கே பக்ஷிகள் மூன்று கோலப் புள்ளிகள் போலும் ஒரே அச்சில் பறக்கின்றன. அந்தரத்தில் கூடு கட்ட இடந்தேடுகின்றனவா? தொடுவானிற்கும் பூமிக்கும் பாலம் விழுந்த ஒளி தூலத்தின் குழல் வழி வர்ணங்கள் விதவிதமாய்ப் பெய்கின்றன. எதிரிலிருந்து எதில்? வானத்திலிருந்து...
May 5, 2012
சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு !சி.சு.செல்லப்பா
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 8:32 AM |
வகை:
கட்டுரை,
சி.சு. செல்லப்பா

சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற பேச்சு எழுகிறது. உருவம் என்றால் ஏதோ ஒரு வரையறை ஏற்படுத்தி இந்த மாதிரி இருந்தால்தான் அது ஒரு சிறுகதை என்று ஒரு ஆரம்ப சட்டம் இட்டு, ஒரு கட்டுப்பாட்டுக்குள், அடாபிடித்தனமாக, இயங்க வைக்கப்பட்ட ஒன்று என்று கொண்டு விட முடியாது. ஆரம்பகாலப் படைப்பு...
May 1, 2012
'எழுத்து' முதல் 'கொல்லிப்பாவை' வரை-ராஜமார்த்தாண்டன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 10:58 PM |
வகை:
கட்டுரை,
ராஜ மார்த்தாண்டன்

கனவுகளும் யதார்த்தமும்: 1970களின் ஆரம்பத்தில் கேரளம் பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேரும்வரையிலும் இலக்கியப் பத்திரிகைகள் என்றால் எனக்குக் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு என்பவைதான். இலக்கியப் படைப்பாளிகள் என்றால் அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், தமிழ்வாணன் போன்றவர்கள்தான். தி. ஜானகிராமனும் ஜெயகாந்தனும் கல்கி, ஆனந்த விகடனில் எழுதியதால்...
Subscribe to:
Posts (Atom)
நன்றி..
இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.
http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது
ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம்
அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்
ஜெயமோகன்
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்