
செங்கல்பட்டுத் தொழுநோய் மருத்துவமனையில் ஸர்ஜனாக இருக்கும் சார்வாகனின் இயற்பெயர் ஹரி. ஸ்ரீனிவாசன். பிறந்தது வேலூரில்(7-9-1929). இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலேயே வெளிவந்திருப்பினும் பரவலான வாசகர் கவனமும் பாராட்டும் பெற்றவை- சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட "அறுசுவை" என்ற குறுநாவல் தொகுப்பிலும்,திருவனந்தபுரம் நகுலன் தொகுத்த "குருக்ஷேத்திரம்" நூலிலும் இவருடைய படைப்புகள்...