காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ,கலைக்கு எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ,...
Nov 9, 2012
'காஞ்சனை'..முன்னுரை -புதுமைப்பித்தன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 7:32 AM |
வகை:
கட்டுரை,
புதுமைப்பித்தன்

Nov 8, 2012
கானம் - ரவிசுப்ரமணியன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 7:34 AM |
வகை:
கவிதைகள்,
ரவிசுப்ரமணியன்

மழை
வாசம் ததும்ப விட்டு பெய்யுது மழை முள்ளில் சிக்கிய வண்ணத்துப்பூச்சி மழை நீர் சொட்ட சடசடத்து உதிர்க்கிறது ஞாபக வர்ணங்களை உடம்புலுக்கி நீர் உதறும் காகங்கள் மழைக்கு ஒதுங்கிய வெள்ளாடுகள் விலுக்கென பறக்கும் வவ்வால் அதே குளிர் அதே காற்று நீதான் இல்லை ஏதேதோ நேசிக்கக் கற்றுத்தந்த நேசிகையே இதோ வானத்தைப் பிரிந்த மழை வந்து சொல்லுது ஆறுதல் சொப் சொப்பென டப்டப்பென...
Subscribe to:
Posts (Atom)
நன்றி..
இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.
http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது
ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம்
அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்
ஜெயமோகன்
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்