Feb 23, 2013

வந்தான்,வருவான்,வாராநின்றான் - நாஞ்சில்நாடன்

ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வெயிலில் அலைவதென்பது அன்றாடம். தலையில் இருந்து...

Feb 10, 2013

கனவு-அன்று-கனவு -அபி

கனவு-அன்று-கனவு எல்லாம் முடிந்துவிட்டது எனக் கடைசியாக வெளியேறிய போது கவனித்தான் பின்புலமற்ற தூய நிலவிரிவு ஒன்று அவனுக்காகக் காத்திருப்பதை கனவுபோன்று இருந்தாலும் கனவு அன்று அது ஒளியிலிருந்து இருளை நோக்கிப் பாதிவழி வந்திருந்தது அந்த இடம் கிழக்கும் மேற்கும் ஒன்றாகவே இருந்தன தூரமும் கூடத் தணிந்தே தெரிந்தது தெரிந்ததில் எப்போதாவது ஒரு மனிதமுகம் ...

Feb 7, 2013

வறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு-ரவிசுப்ரமணியன்

தன் படைப்புகளை முன்நிறுத்தாது தன்னை முன்னிறுத்தும் போக்கு மலிந்த தமிழ்ச் சூழலில் தன் படைப்புகளின் மேன்மை வழியே தன்னை அறிந்துகொள்ளவைத்தவர் கரிச்சான் குஞ்சு. நம் காலத்தில் வாழ்ந்து மறைந்திருந்தாலும் கீழான வகைதொகைகளில் அவர் சிக்கிவிடவில்லை. கலைக்குள் இயங்குவதை ஒரு நோன்பென நோற்று ஆழமான அமைதியோடு படைப்புக்கு உண்மையாய் இருந்து அதற்குச் செழுமை சேர்த்தவர் கரிச்சான் குஞ்சு. அவரது படைப்புகளைத் தேடுபவர்களே கண்டடைய முடியும்....

Feb 6, 2013

புவியீர்ப்புக் கட்டணம் - அ.முத்துலிங்கம்

கடிதத்தை உடைக்கும்போதே அவனுக்கு கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்பு கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே கட்டவேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்த தொல்லை. அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை - புவியீர்ப்பு துறை - உண்டாகியிருக்கவில்லை. 'அம்மையே!' 'சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி...

Feb 5, 2013

மா. அரங்கநாதன் நேர்காணல்

நேர்காணல்: ஆர்.சி.ஜெயந்தன்   படங்கள் : செழியன் ஓவியம்- ஜேகே உங்கள் கதைகளில் முத்துக்கருப்பன் என்ற பாத்திரம் தொடர;ந்து வருகிறது. உண்மையில் முத்துக்கருப்பன் யார்? ‘‘என்னால் விளக்கிச் சொல்ல முழயாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு உதவி செய்கிறவன் முத்துக்கருப்பன். கதை என்றால் என்ன - கவிதை என்றால் என்ன என்று கேட்டால் சரியான பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அது என்னவென்று தொpந்தால் அது இனிமேல்...

Feb 4, 2013

மைத்ரேயி - ஸில்வியா

பொய்சொல்லியாகிய நீ மைத்ரேயியை உன் கட்டுரையில் சாகக்கிடத்தியபோது மழை பிடித்துக்கொண்டது. சித்தப்பிரமையின்பாற்பட்ட அந்த மழை விடாமல் பெய்துகொண்டே இருந்ததை  ஏதேனும் சங்கேத மொழியில் பதிவு செய்ய நீ முடிவு செய்தாய். அரசாங்க அதிகாரிகள், நாய்கள், குடும்பிகள், மந்திரவாதிகள், தேசங்கள், கொரில்லாக்குரங்குகள், பெண்கள், இலக்கிய ஆசிரியர்கள், காமுகர்கள், குற்றவாளிகள், பாம்புகள், தத்துவ அறிஞர்கள், பேய்கள், ஆயுத வியாபாரிகள், அரசியல்வாதிகள்,...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்