
சென்ற ‘இலக்கிய வட்டம்’ அரங்கில் எதுக்காக நான் எழுதுகிறேன் என்பதற்கு என்னால் திருப்தியாக விளக்கம் தரமுடியவில்லை என்று கூறி முடித்தேன். ஏனென்றால் எழுதவைக்க, தூண்டும் சக்தி அல்லது சக்திகள் எவை என்று திட்டமாக வகுத்துக்காட்ட முடியாது. எழுதுகிற ஒவ்வொருவரும் ஒரு சக்தியை குறிப்பிட்டாலும் பல சக்திகளைச் சுட்டிச் சொன்னாலும் இத்தனையோடும், கூட ஏதோ ஒன்று (Plus One) இருக்கிறது என்பதுதான்...