Feb 2, 2023

தபால்கார அப்துல்காதர் - எம். எஸ். கல்யாணசுந்தரம்

சென்ற வருஷம் பெர்னாட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது, “இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன?” என்று விசாரித்தார்.“நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடி நாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி நீர் ஊற்று, தபால்கார அப்துல் காதர்” என்றேன்.போஸ்ட்மன் அப்துல் காதர் என்ற சொற்கள் கேட்டதும் அவரது முகம் மலர்ந்து கண்களிலிருந்து அவருடைய உலகப் பிரசித்தியான ஹாஸ்ய ஒளி வீசிற்று.“கடைசியாகச் சொன்னீரே, அதென்ன வேடிக்கை?” என்று வினவினார்...

Feb 1, 2023

புதுமைப்பித்தன் - க. நா. சுப்ரமண்யம் ( கவிதை)

புதுமைப்பித்தன் இருந்தவீட்டைத் தாண்டிச் செல்லும்போதுஇந்த வீட்டு முன்கூடத்தில் வெற்றிலைச் செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ கதைத்து எத்தனையோ நாட்கள் போக்கியாகிவிட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி புஸ்தகங்கள் படித்து முடித்தாகி விட்டது ரெண்டுகப் காபிக்கு காசு இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு காபியும் சாப்பிட்டுவிட்டு மீதி கையில் காசிருந்தால் வீட்டுக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு பேசிக்கொண்டே...

நினைவுகள் - க. நா. சுப்ரமண்யம்

முதல் தடவை புதுமைப்பித்தனைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. மணிக்கொடி காரியாலயத்தில் ஒரு சனிக்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கதைகள் கொடுத்தால் அவர்கள் போடுவார்களா என்று கேட்கப் போயிருந்தேன். 1935 நவம்பர் என்று எண்ணுகிறேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது.இரண்டு ஆசாமிகளைச் சந்தித்தேன். ஒருவர் கண்ணால் பயமுறுத்துகிறவராக இருந்தார். ஒருவர் பல்லால் பயமுறுத்துகிறவராக இருந்தார். இருவரும் பயமுறுத்துகிறவர்களாகத்தான் அப்போது தோன்றினார்கள்....

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்