Oct 19, 2008

மருமகள் வாக்கு-கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி (நன்றி : ஸ்நேகா பதிப்பகம் வெளியீடு. )மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது. சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள்...

கிருஷ்ணன் நம்பி

தமிழகத்தின் தென்முனையில் கன்னியாக் குமரி மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்றான அழகியபாண்டிபுரத்தில் 1932 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கிருஷ்ணன் நம்பி பிறந்தார். பெற்றோர்களுக்கு கிருஷ்ணன் நம்பி முதல் குழந்தை. அவருக்கு அவர்கள் இட்ட பெயர் அழகிய நம்பி. கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் ; இரண்டு சகோதரிகள். அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை 1939இன் பிற்பகுதியில் நாகர்கோவிலில்...

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன் போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் ,ல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா ,ன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த...

குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்-ஆத்மாநாம்

ஆத்மாநாம் ஹலோ என்ன சௌக்கியமாஇப்பொழுது புதிதாக என்ன விளையாட்டுக் கண்டுபிடித்துள்ளாய்உன்னுடைய குஞிச்ட்ணீ எப்படி இருக்கிறதுபூச்செடிகளுக்கிடையேபுல்தலைகளின் மேல்நெடிய பசும் மரங்களின் கீழ்சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சிமரச்சுவர்களுக்கிடையேசிவப்பு வீட்டின் உள்ளேயிருந்துஷிநீணீனீஜீ எட்டிப் பார்க்கிறான்வெளியே பழுப்புநாய் இருந்தான்என்ன விஷயமென்று குஞிச்ட்ணீ வெளியே வந்தான்தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில்சீக்கிரம் வந்துவிடு என்றான்பலவர்ண...

ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பெற்றோர்களின் சொந்த ஊரான மதுரையில் அவர்களின் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை பெயர் கணேச அய்யர்; பழனியில் வக்கில் தொழிலை மேற்கொண்டு வந்தார். நாகராஜனின் நான்காவது வயதில் அவரது தாயார். தமது ஒன்பதாவது பிரசவத்தின்போது மரணமடைந்தார். நான்கு குழந்தைகள் பிறப்பின் போதும், பிறந்து சில மாதங்களுக்குள்ளாகவும் இறந்துவிட்ட நிலையில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஜி. நாகராஜனுக்கு...

என் ரோஜாப் பதியன்கள்-ஆத்மாநாம்

ஆத்மாநாம் என்னுடைய இரண்டு ரோஜாப்பதியன்களைஇன்றுமாலை சந்திக்கப் போகிறேன்நான் வருவது அதற்குத் தெரியும்மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவதுஎனக்குப் புரிகிறதுநான் மெல்லப் படியேறி வருகிறேன்தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றனபுன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்செருப்பைக் கழற்றி முகம் கழுவிபூத்துவாலையால் துடைத்துக் கொண்டுகண்ணாடியால் எனைப்பார்த்துவெளி வருகிறேன்ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்திஎன் ரோஜாப்...

முத்தம்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்முத்தம் கொடுங்கள் பரபரத்துநீங்கள்முன்னேறிக் கொண்டிருக்கையில்உங்கள் நண்பி வந்தால்எந்தத் தயக்கமும் இன்றிஇறுகக் கட்டித் தழுவிஇதமாகதொடர்ந்துநீண்டதாகமுத்தம் கொடுங்கள்உங்களைப் பார்த்துமற்றவர்களும்அவரவர்நண்பிகளுக்கு முத்தம்கொடுக்கட்டும்விடுதலையின் சின்னம் முத்தம்முத்தம் கொடுத்ததும்மறந்துவிட்டுசங்கமமாகிவிடுவீர்கள்பஸ் நிலையத்தில்ரயிலடியில்நூலகத்தில்நெரிசற் பூங்காக்களில்விற்பனை அங்காடிகளில்வீடு சிறுத்துநகர் பெருத்தசந்தடி...

ஆத்மாநாம்

பிரக்ஞை பூர்வமாக எதிர் கவிதை எழுதியவர்களில் ஆத்மாநாம் முதன்மையானவர். அவரின் சமூகக் கவிதைகளிலும் சரி, நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் சரி, ஒரு மெல்லிய கீற்றாக நம்பிக்கை துளிர்த்து நிற்கிறது. ஆத்மாநாமின் இயற்பெயர் எஸ்.கே. மதுசூதனன். 1951ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தவர். 1978இல் மனநலத்தாக்குதல் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆத்மாநாம் 1983 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஆனால் பின்பு...

Sep 28, 2008

சிற்பியின் நரகம்-புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும் விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேச வாசிகளும். வெளுத்து ஒதுங்கிய கடாரவாசிளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், வடநாட்டுப் பிராகிருதமும் - எல்லாம் ஒன்றிற்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோகஸ்தர்கள் அன்னம் போலும், முதலைகள் போலும் மிதக்கும் நாவாய்களிலிருந்து...

காலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி `நோபல் பரிசு பெற்ற சில கலைஞர்களையாவது பின்தங்கச் செய்யும் கலைஞனாகப் புதுமைப்பித்தனை உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இம்முடிவுக்கு நீங்கள் வந்தததற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை விளக்க முடியுமா?’என்கிற கேள்விக்கு சுந்தர ராமசாமி காலச்சுவடு; இதழ் 10, ஜனவரி 1995-_ல் எழுதிய பதிலின் சுருக்கம்.   புதுமைப்பித்தன் சிறுகதைகளும் கவிதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவரின் நாடகங்கள் பலவீனமானவை. கட்டுரைகள் அவ்வடிவத்திற்குள் இன்று உலகெங்கும் உறுதிப்பட்டு-விட்ட வாதத்தின் நீட்சி முழுமை பெறாமல்...

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருதாச்சலம். 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி, திருப்பாதிர்புலியூரில் அவர் பிறந்தார். தந்தை பெயர் வி. சொக்கலிங்கம் பிள்ளை; அம்மா பெயர் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தனின் உடன் பிறந்த-வர்கள் இரண்டுபேர். முதலில் தங்கை ருக்மணி அம்மாள், பிறகு தம்பி சொ. முத்துசாமி. தாசில்தாராகப் பணியாற்றிய வி. சொக்கலிங்கம் பிள்ளை பணிநிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றலாகிப்-போனபோது, புதுமைப்பித்தனின் தொடக்கக்...

நினைவுப் பாதையில் பதுங்கியிருக்கும் நகுலன்

ramana_ps75@yahoo.com தமிழ்ப் புனைவுபரப்பிலும், கவிதை புலத்திலும் நகுலனின் இடம் தனித்தது. தமிழ் நவீன கவிதையின் இரு பாதிக்கத்தக்க குணாம்சங்களாக பிரமிளையும் நகுலனையும் சொல்லலாம். பிரமிளுடையது, மரபின் செழுமையையும் சமத்காரத்தையும் எடுத்துக்கொண்டு படிம மொழியில் பேசுவது. நகுலனின் கவிதையை, மரபை அழைத்தும், மரபிலிருந்து விடுபட்டுக் கொண்டும் எழுதிக் கொண்ட நேர் கவிதை எனலாம். முதல் தலைமுறை நவீன கவிஞர்களை உருவாக்கிய சி.சு....

கோட்ஸ்டாண்ட் கவிதைகள்-நகுலன்

நகுலன் வழக்கம்போல் வழக்கம் போல் வெளி வாசல் திண்ணையில் சூரல் நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றான்.    அந்தி மயங்கும் வேளை--_ - அதற்கு முன்: ஒளியும் நிழலும் பக்கத்தில் பக்கத்தில் காணும் போது அவனை ஒரு விசித்திர உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில் மண்சுவரில் இலை, நிழல்களைக் காணும் பொழுது கலையின் வசீகர_சக்தி அவனை ஆட்கொள் கிறது.      ...

நகுலன்

நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி, டி.கே. துரைசாமி என்கிற பெயரிலும் எஸ். நாயர் என்கிற பெயரிலும் நகுலன் எழுதியிருக்கிறார். 1922 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நகுலன் பிறந்தார். ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்று பின்னர் நகுலன் திருவனந்தபுரம் மார் இவானியஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். மறைந்த பெண் கவிஞர் திரிசடை, நகுலனின் சகோதரி. நகுலனின் வெளிவந்திருக்கும் படைப்புகள்: நிழல்கள்...

கு.ப. ரா கலையின் தனித்துவம்-கரிச்சான் குஞ்சு

கரிச்சான் குஞ்சு (1990_ல் வானதி பதிப்பகம் வெளியிட்ட `கு.ப.ரா.’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கு.ப.ரா. சிறுகதைகள் பற்றிய நீளமான கட்டுரையின் சுருக்கம்)எளிய சொற்கள், அழகிய நுண்ணுணர்வு மிக்க பதச் சேர்க்கைகள், தேர்ந்தெடுத்த சொற்பிணைப்பினால் உருவாக்கப்பட்ட, அர்த்த பேதங்கள் நிறைந்த, புதுமையான படைப்புகள் கு.ப.ரா. சிறுகதைகள். அவற்றை ரசனைத் திறத்தின் அளவு கோல்களாகவே குறிப்பிடலாம். அவரது கதைகளின் எளிமை ஆச்சரியமானது. மூடு மந்திரங்களோ, புரியாத சொற்றொடர்களோ, கஷ்டமான பதச்சேர்க்கைகளோ, சிரமமான வாக்கியங்களோ, நீண்டு புரியாது குழப்பும் சொற்றோடர்களோ...

ஆற்றாமை-கு.ப.ரா

கு.ப.ரா (1943) ‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள். ‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா. ‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’ அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான். ‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்