Aug 31, 2010

பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்

முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம்,...

Aug 25, 2010

நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்

நினைவோடை இம்மாதம் 18_ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 85 வயதில்_இடையே ஏறத்தாழ ஒரு பத்தாண்டு காலம். அவர் இந்த நிஜ உலகில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட நினைவில்லாத தடுமாற்ற உணர்வு நிலை. ‘‘நீங்கள் தானே மாதவன்? நான் நாஞ்சில் நாடனுடன்தான் பேசிக் கொண்டிருந்ததாக...

Aug 22, 2010

ஒளியும் இருளும்-மகாகவி பாரதியார்

ஒளியும் இருளும் வான மெங்கும் பரிதியின் சோதி; மலைகள் மீதும் பரிதியின் சோதி; தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே தரையின் மீதுந் தருக்களின் மீதும் கான கத்திலும் பற்பல ஆற்றின் கரைகள்மீதும் பரிதியின் சோதி; மான வன்ற னுளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருளிது வென்னே! சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம், தோன்றி யெங்குந் திரைகொண்டு பாய, சோதி யென்னும் பெருங்கடல், சோதிச் சூறை, மாசறு சோதி யனந்தம்,...

Aug 21, 2010

ப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..

‘எல்லாம் யோசிக்கும் வேளையில்...’ ந. முருகேசபாண்டியன் பெரிய கட்டடத்தின் மாடிப் படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத் துளைத்தது. பெரிய அறையினுள் நுழைந்தேன். தூய வெள்ளாடை உடுத்திய கருத்து வாட்டசாட்டமான பெரியவர் எழுதிக் கொண்டிருந்தார். வழுக்கைத் தலை பளபளத்தது. சுவரையொட்டியிருந்த டெலிபிரிண்டர்கள் கட-கடத்தன. அடுத்திருந்த பெரிய ஹாலில் ராட்சத அச்சு இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தன. கரடுமுரடான...

Aug 19, 2010

வெள்ளி விழா - ந.பிச்சமூர்த்தி

வெள்ளி விழா சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு மெரினாவில் காந்தி சிலைமுதல் விவேகானந்தர் சிலைவரை சவுக்கு முளை அடித்து குறுக்குக் கழிகட்டி வேடிக்கை பார்க்கவரும் வெள்ளம் அணிவகுப்பை அழிக்காமல்  வெற்றிக்கு வித்திட்ட கண்டிராக்டர் மறுநாள் கணக்குப் பார்த்தார் நல்ல ஆதாயம். மக்கள் கணக்குப் பார்த்தார். விழாதான் ஆதாயம் காலைக் கருக்கிருட்டில் சுள்ளி பொருக்க வந்த கிழவிக்கு...

Aug 17, 2010

கிருஷ்ணன் நம்பி கவிதைகள்

1. ஆனை வேணுமென்று _ குழந்தை அழுது கூச்சலிட்டான் ஆனை கொண்டு வந்தார் _ ஆனால் அழுகை தீரவில்லை  பானை வேணும் என்றான் _ குழந்தை பானை கொண்டு வந்தார் ஆனை பானை இரண்டும் _ வந்தும் அழுகை ஓயவில்லை   `இன்னும் அழுவதேனோ _ குழந்தாய் இனியும் என்ன வேணும்?’ என்று கேட்டபோது _ குழந்தை ஏங்கி அழுது கொண்டு இந்தப் பானைக்குள்ளே _ அந்த ஆணை போக வேணும்! என்று சொல்லுகின்றான் _...

Aug 16, 2010

சில புத்தகங்களை படிப்பது பெரிய தண்டனை - தோப்பில் நேர்காணல்

தோப்பில் முகம்மது மீரான் நேர்காணல் சந்திப்பு: சங்கர ராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம்   தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் முகம்மது மீரானின் வரவு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமூகம் தன் இருட்பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த நூற்றாண்டு சோகங்கள், ஆதங்கங்கள், கதறல்கள், இளைப்பாறுதல்கள் தோப்பில் முகம்மது மீரான் மூலம் வெளிச்சம் பெற்றது.தன் அனுபவங்களின்...

Aug 14, 2010

போய்யா போ - ஆத்மாநாம்

  போய்யா போ நான் ஒரு கெட்டவன் நான் பீடி குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் இலைச்சுருள் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் ஒரு சிகரெட் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் பில்டர் சிகரெட் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் பில்டர் கிங்ஸ் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் சுருட்டு குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் பைப் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் மூக்குப்பொடி...

Aug 13, 2010

என் நினைவுச்சின்னம் - பசுவய்யா

இந்த நிழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலுன்றி நிற்கும் போது நிழல்மேல்தான் நிற்கிறோமா? காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான் அந்த யோசனையை நான் ஏற்கவில்லை பூமியில் நிற்கும் போது எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல் என்பதுதான் எனக்கு தெரியவேண்டும். ******************** வருத்தம் வேட்டையாடத்தான் வந்தேன்...

Aug 12, 2010

மண்ணின் மகன்-நீலபத்மநாபன்

வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை... வேலை மாற்றலாகி, முதல் முறையாய் வந்திருக்கும் இந்த இடம் இதற்கு முன்பே பரிச்சயமானதாய் தோன்றும் இந்த விசித்திர மனமயக்கம்... ? பஸ்ஸிலிருந்து இந்தக் கடற்கரையில் இறங்கி, ஆபீஸ்உம், குவார்ட்டர்ஸ்உம் ஒன்றாய் இயங்கும் அதோ தெரியும் சிறு கட்டிடத்தில் போய் பெட்டி படுக்கையைப்...

Aug 10, 2010

இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி

இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்