Nov 23, 2011

தியாகமூர்த்தி - புதுமைப்பித்தன்

     செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த,      தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம்      தானே வந்தால்...

Nov 22, 2011

வெளியில் ஒருவன்-சுகுமாரன்

வெளியில் ஒருவன் பரிவில்லாதது வீடு வெளிக் காற்றில் ஏராளம் விஷம் சோகை பிடித்த தாவரங்கள் நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள்  . பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில் சரித்திரம் கெக்கலிக்கும். தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து எங்கும் பொய்கள் கவியும். ஒன்று அல்லது மற்றொன்று - விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள். திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று மனிதர்கள் எரிக்கப்...

Nov 15, 2011

மூங்கில் குருத்து - திலீப்குமார்

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான். வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக் கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக் கறைபடியச் செய்து கெட்டுப்போய்க் கொண்டிருந்த அநேகம்...

Nov 7, 2011

உன் நினைவுகள் - ஆத்மாநாம்

காட்சி முதலில் நீதான் என்னைக் கண்டுகொண்டாய் எனக்குத் தெரியாது மனிதர்களைப் பார்த்தவண்ணம் முன்னே வந்துகொண்டிருந்தேன்  உயிருடைய ஒரு முகத்துடன் பளிச்சிட்டுத் திரும்பினாய் பின்னர் நடந்தவைக்கெல்லாம் நான் பொறுப்பல்ல எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய் அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க காட்சிகள் மாற மாற ...

Nov 6, 2011

வீடியோ மாரியம்மன்-இமையம்

"எதுக்குடா பயலெ அடுப்புக்கட்டிகிட்ட வந்து ஏறிகிட்டு நிக்குறவன்?" "பாயி கொடு." "பாயி இல்லெ." "ஊருல இருக்கிற எல்லாப் பசங்களும் எடுத்துகிட்டுப் போறாங்க இல்லெ." "போனாப் போறாங்க" என்று சொன்ன கம்சலை அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றைக் கிண்டிவிட ஆரம்பித்தாள். முருகன் லேசாகச் சிணுங்கி அழ ஆரம்பித்தான். சோற்றை இறக்கி வடித்த கம்சலை, குழம்புச் சட்டியைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். "பாய் தா" என்று சொல்லி முருகன் அடம்பிடிக்க...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்