Oct 25, 2012

புத்தனாவது சுலபம்-எஸ்.ராமகிருஷ்ணன்

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான். மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள்.  அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும்....

Oct 22, 2012

சென்று தேய்ந்து இறுதல்-விக்ரமாதித்யன் நம்பி

சென்று தேய்ந்து இறுதல் இது என்ன இது என்னது இது குகை மனிதனொப்ப வேட்டையாடித் திரிவது ஆதிவாசிக்கும் நமக்கும் என்ன பெரிய வித்யாசம் இரை தேடித் தின்பது தூங்குவது   புணர்வது கேளிக்கையும் கொண்டாட்டமுமாய் காலம்கழிப்பது பின்னே சலித்துக்கொள்வது எவ்வளவு இனிய உலகம் இது கவிதை சங்கீதம் நாட்டியம் பாட்டு பறவைகள் வானம் காற்று மழை தொன்மக்கதைகள்...

Oct 20, 2012

ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு முன்னுரை-இ.பா

ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு"  - இந்திரா பார்த்தசாரதி முன்னுரை 'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர்...

Oct 19, 2012

குழந்தையின் கடல்-ராஜா சந்திரசேகர்

குழந்தையின் கடல் நள்ளிரவில் எழுந்து கடல் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்த குழந்தையை சமாதானப்படுத்தி நாளை போகலாம் எனச் சொல்லி தூங்க வைக்க பெரும்பாடாயிற்று பின் விடியும் வரை அலைகள் எழுப்பி தூங்க விடாமல் செய்தது குழந்தையின் கடல் பெயர் வைக்கும் சிறுமி நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைக்கும் சிறுமி நாய்க்குட்டிகளிடம் கேட்கிறாள் தனக்கு பெயர் வைக்கச் சொல்லி...

Oct 16, 2012

கலக்கத்திலும் கனிவை கைமாற்றிவிட்டுப் போன கலைஞன்-ரவிசுப்ரமணியன்

வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத சோகம் போல, வேறு எதுவும் இருக்கமுடியாது நல்ல கலைஞர்களுக்கு. கலைக்காய் சமூகத்திற்காய் தன் வாழ்வின் பெரும்பகுதியை  கரைத்துக் கொள்கிற தேர்ந்த படைப்பாளிகளை உரிய காலத்தில் கௌரவிக்காது மௌனம் காத்து இறும்பூதெய்தும் பெருமை கொண்டது நம் செம்மொழிச் சமூகம். அதற்காக அவன் பதிலுக்கு மௌனம் காப்பதில்லை."கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவுமிலார்..." என்பதை அவன் அறிந்தவனாகையால்...

Oct 15, 2012

க. நா. சு. வின் ஓர் உரை

க.நா.சு.100 இத்துடன் வெளியாகும் க.நா.சு.வின் உரை 16.2.1988 ஆம் நாள் ஒய்.எம்.ஸி.ஏ. கருத்தரங்கில் நிகழ்த்தப் பெற்றது. சிறுகதைபற்றிய பல விளக்கங்களையும் கொண்டிருப்பதே அவ்வுரையின் முக்கியத்துவம். இதுவரை பிரசுரமாகாதது. மா. அரங்கநாதனின் ‘வீடு பேறு’ சிறுகதை தொகுப்பு பற்றிய கருத்தரங்கத்தின் போது ஆற்றிய உரை. () () () இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது புத்தக விமர்சன கூட்டங்களுக்குப் போனால்...

Oct 12, 2012

எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. - பாரதி மணி

க.நா.சு.100 ஐம்பதுகளில் நான் கல்கண்டு, கண்ணன், ஜில்ஜில், அணில் போன்ற சிறுவர் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருந்த போது, எங்களூர் பார்வதிபுரத்தில் நடராஜன் என்ற அறிவுஜீவி — ஹிந்தியில் Ghar Jamai என்று அறியப்படும், பணக்கார மாமனாருக்கு ‘வாழ்க்கைப்பட்ட’ வீட்டோடு மாப்பிள்ளையாக — இருந்தார். ஊரே அவரை ‘மாப்பிள்ளை’யென்று தான் கூப்பிடும். எங்களுக்கு அவர் ‘மாப்ளை மாமா’.  மிகவும் சுவாரசியமாக, எதைப்பற்றியும் பேசத்தெரிந்தவர்....

Oct 11, 2012

க.நா.சுவின் தட்டச்சுப்பொறி-ஜெயமோகன்.

க.நா.சு.100 மலையாள நாவலாசிரியர் சி.ராதாகிருஷ்ணன் இன்று வாழும் முக்கியமான படைப்பாளி. செவ்வியல் தன்மை கொண்ட பெரும்நாவல்களை உருவாக்கியவர். தன் சுயசரிதையில் அவரது முதல் நாவலான நிழல்பாடுகள் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக Patches of shade என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வந்த அனுபவத்தை சொல்லியிருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கான மொழியாக்கங்களுக்கு ஒரு போட்டி வைத்தபோது அன்று இளம் எழுத்தாளராக இருந்த...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்