May 31, 2010

கற்பக விருட்சம்-கு.அழகிரிசாமி

  மாலை ஐந்து மணி அடிப்பதற்கு முன்பே சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்து விட்டான் ஸ்ரீனிவாசன். கையில் ஒரு காசுகூடக் கிடையாது. இருந்ததெல்லாம் ஒரு மலிவு விலைப் பவுண்டன்பேனா, ஒரு வேஷ்டி, ஒரு சட்டை, சட்டையில் இரண்டு பிளாஷ்டிக் பித்தான்கள், அன்று மாலைப் பதிப்பாக வெளிவந்த  ஒரு தமிழ்த் தினசரி, சந்தேகத் தெளிவுக்காக வாங்கிய ஓர் ஆங்கில தினசரிப் பத்திரிக்கை--இவ்வளவுதான். பிளாட்பாரத்தின் கோடியில் கிடந்த ஒரு...

ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

  கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார். தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப் பருகி, அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அறையின் மறு பக்கத்தை நோக்கி ஒரு கணம் - ஒரே கணம் - பார்வையை ஓட விட்டார். அகர்வால் மேஜை மீது குனிந்து ஏதோ ஃபைலை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். கைலாசம் தம்ளரை மறுபடி மேஜை மேல் வைத்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். நீலவானம், ஓரிரு...

May 30, 2010

திலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெ.சா

வெங்கட் சாமினாதன் இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலிப் குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர்...

May 29, 2010

அன்பின் எழுத்துகள்-தேவதச்சன்

குருட்டு ஈ ஆஸ்பத்திரியில் வெண்தொட்டிலில் சுற்றுகிறது இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின் மூச்சொலி பார்க்கப் பயமாக இருக்கிறது சுவரில் தெரியும் பல்லி சீக்கிரம் கவ்விக் கொண்டு போய்விடாதா என் இதயத்தில் சுற்றும் குருட்டு ஈயை ** பரிசு என் கையில் இருந்த பரிசை பிரிக்கவில்லை. பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது என் அருகில் இருந்தவன் அவசரமாய்...

May 28, 2010

தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலிங்கம்

 தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும் ஒரு அடி கொடுப்போம் வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள் தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் பழைய துணிச்சந்தையில் சகாயமாகக் கிடைக்கிறது இச்சையைத் தணிக்க இரவில் எப்படியும் இருட்டு வருகிறது கால்நீட்டி தலைசாய்க்க தார்விரித்த பிளாட்பாரம் இருக்கிறது திறந்தவெளிக்...

May 27, 2010

சருகுத் தோட்டம்-விக்ரமாதித்யன்

முன்னொருகாலத்தில் அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் அரண்மனையில் ஒரு பெரிய தோட்டம் போட்டிருந்தான். தோட்டக்காரர்களை அமர்த்திப் பூஞ்செடிகள், மலர்க்கொடிகளெல்லாம் நட்டு வளர்த்திருந்தான். பழமரங்கள் நிறைய வைத்திருந்தான். தனது தோட்டத்தைப்பற்றி அவன் மிகவும் பெருமை கொண்டிருந்தான். அரண்மனைக்கு யார்வந்தாலும் முதலில் அவர்கலைத் தோட்டத்துக்குத்தான் கூட்டிக்கொண்டு போய்க் காண்பிப்பான். அது அவனுக்கு சந்தோஷமான காரியம். ஒரு...

May 26, 2010

ஞானப்பால் - ந. பிச்சமூர்த்தி

  லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் என்ற நினைப்பு அவன் நெஞ்சில் தடித்தே இருந்தது. ‘அ’னா ‘ஆ’வன்னா தெரியாத கரிக்கட்டைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமும், சாப்பாடும், தினம் ஆறுபேருக்குச் சாப்பாடு போட்டுச் சமாளிக்கும் அதிகாரமும் எல்லாருக்கும் இலேசில் கிடைத்துவிடுமா ...

May 25, 2010

புகை நடுவில்- எஸ்.ராமகிருஷ்ணன்

  கோணங்கி பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து எழுந்து பால்கனியில் வந்து நின்றால், இருளைக் கரைத்துக்கொண்டு யாருமற்ற தெருவில் மழை தனியே நடந்துபோய்க்கொண்டு இருக்கும் அபூர்வ காட்சியைக் காண முடியும். பால்யத்தின் பொழுதுகளும் பின்னிரவு மழைக் காட்சிகள்தான். திடீரென, எப்போதோ உடன்படித்த சிறுவர்களின்...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்