தேவதச்சன் கவிதைகள் நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொள வென்றோ இறுக்கமாகவோ போடுகிறாய் தலைமுடியை நீளமாகவோ குறுகவோ தரிக்கிறாய் உன்னிடமிருந்து பறந்து சென்ற இருபது வயது என்னும் மயில் உன் மகளின் தோள் மீது தோகை விரித்தாடுவதை தொலைவிலிருந்து பார்க்கிறாய் காலியான கிளைகளில் மெல்ல நிரம்புகின்றன, அஸ்தமனங்கள், சூரியோதயங்கள் மற்றும் ...
Jul 31, 2010
Jul 30, 2010
வலி தரும் பரிகாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:03 AM |
வகை:
எஸ்.ராமகிருஷ்ணன்,
கட்டுரை,
கோபிகிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன் இலக்கியச் சிந்தனை 1986ம் ஆண்டு சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக கோபி கிருஷ்ணனைக் கேட்டுக்கொண்டபோது அவர் எனது சிறுகதையான தெருவின் சுபாவத்தைத் தேர்வு செய்திருந்தார். அந்தக் கதையைப் பற்றி தபால் கார்டு ஒன்றில் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எனக்கு எழுதியிருந்தார். அப்படித்தான் கோபி கிருஷ்ணனுக்கும் எனக்குமான உறவு துவங்கியது. அதன் முன்னதாக கோபியின் கதையொன்றை கணையாழியில் வாசித்திருக்கிறேன்....
Jul 29, 2010
இவ்வாறாக- விக்ரமாதித்யன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:58 AM |
வகை:
கவிதைகள்,
விக்ரமாதித்யன் நம்பி

இவ்வாறாக அன்றைக்குப் போலவே இன்றைக்கும் ஆதரவாயிருக்கும் அம்மாவை ஐயோ பாவம் தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் ஆயிரத்தோரு சண்டைகளுக்கு அப்புறமும் அப்பா காட்டும் அக்கறையை அன்புக்கு நேர்வதெல்லாம் துன்பம்தானென்று விட்டுவிடலாம் மார்பில் முகம்புதைத்து மனைவி கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழியாக மெளனத்தை விட்டுவிடலாம் காலைக்கட்டி மயக்கும் குழந்தைகளை கடவுளின் அற்புதங்களை...
Jul 28, 2010
நிகழாத அற்புதம்- ராஜ மார்த்தாண்டன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:21 AM |
வகை:
கவிதைகள்,
ராஜ மார்த்தாண்டன்

நிகழாத அற்புதம்சிவராத்திரி நள்ளிரவு
ஒளிக்கீற்றொன்று
இறங்கிற்று வான்விட்டு
திறந்தவெளியில் 16எம்எம்மில்
திருவிளையாடல் கண்டு
பரவசத்தில் உறைந்திருந்த மக்கள்
ஏவுகணையோ ஏதோவென்றஞ்சி
அலறி ஓடினர்
வெடியோசை கேட்டதும்
சிதறிப் பறக்கும் கொக்குகளாக
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணீறுமாய்ச்
சுற்றிலும்...
Jul 27, 2010
பூமாலை- ஆர். சூடாமணி
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 3:57 AM |
வகை:
ஆர்.சூடாமணி,
கதைகள்

அன்புள்ள ரம்யா, உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக. கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ''எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க...
Jul 25, 2010
எறும்பு தின்னி - ஜெயமோகன் கவிதைகள்
எறும்பு தின்னி * எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது. உள்ளே ஓலங்கள் உயிரின் குருட்டு வெறி தினம் அதுகாண்பது அக்காட்சி. மரணம் ஒரு பெரும் பதற்றம் என அது அறிந்தது. எனவே வாழ்வு ஒரு நிதானமான...
Jul 23, 2010
புலியின் தனிமை-தேவதேவன்
1] விரும்பினேன் என் தந்தையே பேயோ தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே நீ படித்தது போதும் எல்லாரும் மேற்படிப்பு படித்தேகிவிட்டால் இருக்கும் பிற வேலைகள் எல்லாம் யார் செய்வார் என்றறைந்தீர். கடும் உழைப்பை அஞ்சினேனா ? கூட்டாகப் புரியும் பணிகளிலே இருக்க வேண்டிய தாளம் இல்லாமை கண்டு அஞ்சினேனா ? விரும்பினேன் நான் என் தந்தையே விண்ணளவு பூமி விரிந்து நிற்கும்...
Jul 22, 2010
அந்நியமற்ற நதி-கல்யாண்ஜி
கல்யாண்ஜி கவிதைகள் 1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்து விட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு உடைந்தது கண்ணாடிக்குளம். நீ வந்திருக்க வேண்டாம் இப்போது. 2.தினசரி...
Jul 21, 2010
சந்நியாசி கரடு- பெருமாள்முருகன் கவிதைகள்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 8:11 AM |
வகை:
கவிதைகள்,
பெருமாள்முருகன்

குவிந்த கை மூக்கால் ஆனவன் அவன் வாசனை பிடிக்குமானால் முகம் மலர்ந்து உள்ளிழுத்து நுகர்ந்து ஆசையாய் அவனே சாப்பிட்டுக்கொள்வான் பிடிக்காதபோது என் கை தேவைப்படும் என் விரல்கள் அவ்வுணவில் கலந்துவிடும் பிரியத்தால் சுவை மாறிவிடுமா நினைந்தூட்டும் தாய் முலைபோல விரல்கள் குவித்துச் சோறூட்டி ஊட்டித் திரும்புகிறது கை எதையாவது கதைபோலச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் அவன் குரலுக்குக்...
Jul 19, 2010
கன்னியாகுமரியில்.... - பசுவய்யா
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 11:12 PM |
வகை:
கவிதைகள்,
சுந்தர ராமசாமி

கன்னியாகுமரியில்.... இன்று அபூர்வமாய் மேகமற்ற வானம் மிகப்பெரிய சூரியன் ஒரே ரத்தக் கலங்கல் எங்கிருந்தோ வந்து சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது இந்த ஆட்டுக்குட்டி அசடு அபோதம் தன்னிலை அறியாதது இடம்பெயர்வதா நான் அல்லது நின்ற நிலையில் நிற்பதா? மூளையின் தர்க்கம் அறுபட்டு விழித்ததும் நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி சூரியனைக் காணோம் . ******************** வாழ்க்கை...
Jul 17, 2010
ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 11:20 PM |
வகை:
இந்திரா பார்த்தசாரதி,
கதைகள்

ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம்.
’வனாந்திரமான இடம். பாம்புப் புற்று போல் ஓங்கி வளர்ந்திருந்த மண்மேடிட்ட பெரிய குகைகள். அவன் தனியாக அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போய்க் கொண்டிருக்கிறான். அங்கு நிலவிய நிசப்தம் ஒரு பாரமாகச் சூழ்ந்து அவன் நெஞ்சை அழுத்தியது. குகைகளிலிருந்து...
Jul 16, 2010
தொலைவு-பூமணி
பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று. 'சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்தும். ' ரோசம்மா நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் காலடியில் மேரிக்குட்டி பஸ்டாண்டில் பார்வை விளையாட நின்றிருந்தாள். அந்தோணியும் வயலெட்டும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு குழந்தைகளும் இடையில் ஓடி தொந்தரவு செய்தன. ஆனாலும் சட்டை செய்யவில்லை. ஒரு தடவை அந்தோணி அரட்டினான்....
Jul 14, 2010
தனுமை - வண்ணதாசன்
இதில்தான் தனு போகிறாள்.
பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக்...
Subscribe to:
Posts (Atom)
நன்றி..
இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.
http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது
ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம்
அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்
ஜெயமோகன்
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்