Jun 30, 2010

பிரிவு- சம்பத்

சரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் 'ராஜதானி' எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. 'இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் 'ஹவ்ரா' பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,' என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி...

Jun 29, 2010

ஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்

அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒரு விறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக் கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்ப முயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின ‘அப்பா!’ என்று...

Jun 28, 2010

நிழல் குதிரை-எஸ்.ராமகிருஷ்ணன்

சா.கந்தசாமி நமண சமுத்திரம். புதுக்கோட்டை அருகில் உள்ள சிற்றூர்.இங்கே நடைபெறும் குதிரை எடுப்புத் திருவிழாவைக் காண்பதற்காகச் சென்றிருந் தேன். அய்யனார் கோயிலுக்கு நேர்சை செய்து, காணிக்கையாக மண் குதிரைகள் செய்து வந்து செலுத்துவது பிரார்த்தனை! மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவில் நூற்றுக்கணக்கில் மண் குதிரைகள் நிற்பதைக் காணும்போது, போர்க்களக் காட்சி போலத் தோணும். குதிரைகளின் கம்பீரமும், அவை கால் தூக்கி நிற்கும் அழகும்...

Jun 27, 2010

அழிவின் தத்துவம்-மு.சுயம்புலிங்கம்,

அழிவின் தத்துவம். ஆட்டுக் கிடை வீட்டுக்குப்பை கொளூஞ்சி ஆவரை நாட்டு உரங்களில் வேர்விட்டு விளைந்த நெல்லுக்குருசி இருந்தது ஆரோக்கியம் இருந்தது இயந்திர உரம்ருசியைக் கெடுத்தது ஆரோக்கியத்தைக் கெடுத்தது பூமியை தன்னீரைகெடுத்தே விட்டதுரசாயணம். என்னைப் பாதித்தவர்கள் பங்களா வாசலில்தூக்கம் மெனக்கெட்டுநினைவுகள் சவைத்துக்கொண்டிருக்கும்கொர்க்காக்கள். பிதுங்கிக்கொப்பளிக்கும் ஜலதாரைக்குள்தன் தன்...

Jun 26, 2010

பெயர் தெரியாமல் ஒரு பறவை-வண்ணதாசன்

இந்த நடையிலிருந்து மலையைப் பார்ப்பது போல உட்கார்ந்திருந்தாலும் நான் மலையைப் பார்க்கவில்லை. சிலசமயம் எரிகிற தீயும் மலையில் இன்று எரியவில்லை. மழைக்குத் தயாராகவே பகலின் அடையாளங்கள் முழுவதுமிருந்தது. அதை உத்தேசித்தே தீயை ஒத்திப் போட்டிருக்கலாம். தீ எரிவதைப் பார்க்காமலே புரிந்து கொள்கிற அளவுக்கு இந்த ஒன்றரை மாதத்திற்குள் புலன்கள் படிந்து விட்டிருந்தன. வாடகைக்கு வீடு கிடைத்துக் குடும்பமும் குழந்தைகளும் வந்தபின் அடுப்புத்...

Jun 25, 2010

பிரயாணம் - அசோகமித்திரன்

      மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின் கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன். “இனிமேலும் முடியாது” என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்துகிடந்த...

Jun 24, 2010

பிரசாதம் - சுந்தர ராமசாமி

எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவுக்குள் அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அப்பொழுதுதான் தலைநிமிர்ந்து முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியும். அவள் சிரிப்பதைப் பார்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட முடியும். ஜங்ஷனுக்கு வந்தான். ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு வளைய வளையச் சுற்றிவிட்டு வந்தான். அதே ஜங்ஷன்தான். மெயின் ரஸ்தா ஓரத்தில் ஒரு புருஷனும் மனைவியும்...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்