அழிவின் தத்துவம்.
ஆட்டுக் கிடை
வீட்டுக்குப்பை
கொளூஞ்சி ஆவரை
நாட்டு உரங்களில் வேர்விட்டு விளைந்த
நெல்லுக்குருசி இருந்தது
ஆரோக்கியம் இருந்தது
இயந்திர உரம்ருசியைக் கெடுத்தது
ஆரோக்கியத்தைக் கெடுத்தது
பூமியை தன்னீரைகெடுத்தே விட்டதுரசாயணம்.
என்னைப் பாதித்தவர்கள்
பங்களா வாசலில்தூக்கம் மெனக்கெட்டுநினைவுகள்
சவைத்துக்கொண்டிருக்கும்கொர்க்காக்கள்.
பிதுங்கிக்கொப்பளிக்கும் ஜலதாரைக்குள்தன்
தன் முழு உடம்பைத் தள்ள
இரும்புபிளேட்டைத்தூக்கும்
தோட்டிகள்
நாளைக்கு இந்தியா வல்லரசாகப் போகிறது
எல்லா தேசத்து அதிபர்களுக்கும்
சொல்லப் படுவது
என்னவென்றால்
எங்கள் மண்ணில்
குப்பை கொட்டுவதை
நிறுத்துங்கள்.
இந்த உத்தரவு
இந்த நிமிசம் முதல்
அமல் படுத்தப்படும்.
........
வாக்கரிசி(ரேசன் அரிசி)
நுகர்வோர்
கூட்டுறவுக் கடையில்
கொள்ளை மலிவு
அரிசி.
மூன்று வேளையும்
நாங்கள்
நெல்லுச் சோறு தின்கிறோம்.
எங்கள் வயிறெல்லாம்
அழகான தொப்பை.
நெல்லுச் சோறும்
வடி தண்ணியும்
கொட்டிக் கிடக்கு கால்வாய்களில்
பெருச்சாளிகள்
ஆனந்தமாய் நீச்சலடிக்கின்றன.
தாம்பாளம்
சிந்தச் சிந்த
வாக்கரிசி கொண்டுபோகிறார்கள்
பெண்கள்
எளவு வீட்டுக்கு.
..........
மணல்
எதை
உற்பத்தி செய்தோம்
நாம்.
ஆறுகளில்
மணல் இருக்கிறது..
விவசாயிகளிடம்
நிலம் இருக்கிறது.
மணலையும்
நிலத்தையும்
விற்காமல்
எதை விற்பது..!
நன்றி : suyambulimgam.blogspot.com
*************குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
0 கருத்துகள்:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.