'லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் “நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்" சந்திப்பு: தளவாய் சுந்தரம் படங்கள்: புதூர் சரவணன் 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்டிருந்த ஒரு பிற்பகலில், அம்பத்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் லா.ச.ராமாமிருதத்தின் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டதும், சாலையைப் பார்த்து திறந்திருந்த அவருடைய அறைக்கு அழைத்து சென்றார். பார்ப்பதற்கு...
Jan 31, 2011
“நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்" – லா.ச.ரா- நேர்காணல்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 7:26 AM |
வகை:
நேர்காணல்,
லா.ச. ராமாமிருதம்

Jan 29, 2011
ப. சிங்காரம்: அடங்க மறுக்கும் நினைவு – எஸ்.ரா
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 8:44 PM |
வகை:
அறிமுகம்,
எஸ்.ராமகிருஷ்ணன்,
கட்டுரை,
ப.சிங்காரம்

ப.சிங்காரம் என்ற பெயர் புது யுகம் பிறக்கிறது இதழில் சி. மோகன் எழுதிய நாவல் பற்றிய கட்டுரையில்தான் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது. மோகன் தமிழின் சிறந்த நாவலாசிரியர் வரி சையில் சிங்காரத்திற்குத் தனியி டம் அளித்திருந்தார். அந்த நாட் களில் ஜானகிராமன், ஜெயகாந் தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்று தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த எனக்கு சிங்காரம் யார் என்ன எழுதியிருக் கிறார் என்ற குழப்பம் உண்டா னது. எனது சேமிப்பிலிருந்த...
Jan 27, 2011
புற்றிலுறையும் பாம்புகள் –ராஜேந்திர சோழன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 9:44 PM |
வகை:
கதைகள்,
ராஜேந்திர சோழன்

தோட்டப்பக்கம் வேலி ஓரம் கிடந்த சோளத்தட்டுக் கட்டை இழுத்துப்போட்டு உதறி, குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அடுப்புக்கு தட்டை அடித்து சீராய் அடுக்கிக்கொண்டிருந்த வனமயிலு எதிர்வீட்டில் குடியிருக்கும் வாலிபனைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டாள்.
"கண்ணைப் பாரேன் நல்லா... கோழி முட்டையாட்டம் வச்ச கண்ணு வாங்காம பாக்கறத. இவனெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்கமாட்டானா... எம்மா நேரமா பாத்துக்னுகிறான்யா இதே மாதிரி..."...
Jan 25, 2011
நகுலனின் பத்துக் கவிதைகள் – எஸ்.ரா
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 9:56 AM |
வகை:
எஸ்.ராமகிருஷ்ணன்,
கட்டுரை,
கவிதைகள்,
நகுலன்

நவீன தமிழ் கவிதையுலகில் எனக்கு விருப்பமான மூன்று கவிஆளுமைகள் பிரமீள், நகுலன் மற்றும் தேவதச்சன் . அவர்கள் தங்களுக்கெனத் தனியான கவித்துவ மொழியும் அகப்பார்வையும் தனித்த கவியுலகமும் கொண்டவர்கள். மூவரது கவிதைகளிலும் அடிநாதமாக தமிழின் கவித்துவமரபும் சங்க இலக்கியம் துவங்கி சமகால உலக இலக்கியம் வரை வாசித்த நுட்பமும் ஒடிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த மூவருக்கும் பொது ஒற்றுமைகள் கிடையாது. தன்னளவில் இவர்கள் தனித்துவமான ஆளுமைகள்....
Jan 23, 2011
பாச்சி -ஆ.மாதவன்
பாச்சி செத்துப் போனாள். வாழ்வு அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப் போவாள் என்று கனவில்கூட நினைத்ததில்லை. மனத்தால் தீண்டிக்கூடப் பார்க்காத ஒரு பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. பாச்சி செத்துப் போனாள்! நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே! என்ன வேண்டிக் கிடக்கிறது? போச்சு, எல்லாம் போச்சு.” கடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய...
Subscribe to:
Posts (Atom)
நன்றி..
இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.
http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது
ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம்
அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்
ஜெயமோகன்
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்