Mar 31, 2010

பூ உதிரும் - ஜெயகாந்தன்

 ஜெயகாந்தன்பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும்.அவரது வலது புருவத்துக்கு மேல் இருக்கும் ஒரு நீண்ட தழும்பு; முன் பற்களில் ஒன்றுக்கு...

Mar 30, 2010

வண்ணதாசன் - நேர்காணல்

சந்திப்பு : பவுத்த அய்யனார்  வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன். 60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசனுக்கு பத்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு, கல்யாண்ஜி குரலிலேயே...

Mar 29, 2010

கவிதையின் புதிய உலகங்கள் - விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் நம்பிநமது தமிழ்மொழி உலகிலுள்ள செவ்வியல் மொழிகளில் ஒன்று. நீண்ட நெடிய  கவிதை மரபு கொண்டது. அகிலத்தின் சிறந்த கவிதைகளுக்கு ஈடு இணையான கவிதை வளம் நிரம்பியது. காலத்தாலும் அழிக்க முடியாத இலக்கியப் பின்புலம் உடையது.சங்கக்கவிதைகளில் தலைவன் - தலைவியின் நுட்பமான காதல் உணர்வுகளும் அனுபவங்களும் அகப்பாடல்களாய் வடிவு கொண்டிருக்கையில், அன்றைய வாழ்வின் இயல்பான வீரம் செறிந்த வாழ்வனுபவங்களும் எதார்த்தமான உணர்வலைகளும்...

Mar 27, 2010

பாக்கி - அசோகமித்ரன்

அசோகமித்ரன்போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி.நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன். ஆனால் அவள் உரத்த குரலில், 'என்னாங்க என்னாஙக ' ' என்று கூப்பிட்டாள். சந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் நின்றேன்.சுந்தரி அருகில் வந்து, 'ரெண்டு நிமிஷம் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போங்க...

தரிசனம் - ந. பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்திதரிசனம்     நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே சென்றேன். ஆகாயம் ஓர் எல்லையற்ற மைக் கூண்டு. விளையாட்டுத்தனமாய் ஏதோ தெய்வீகக் குழந்தை அதைக் கவிழ்த்து விட்டது போலும்! ஒரே இருள் வெள்ளம். மரங்களெல்லாம் விண்ணைத் தாங்கும் கறுப்புத் தூண்கள். மின்னும் பொழுதெல்லாம் வானம் மூடிமூடித் திறந்தது. கண் சிமிட்டிற்று....

அடங்குதல் - வண்ணதாசன்

வண்ணதாசன்'எங்கேயோ கிடக்கிற ஊர்லேருந்து வந்து இங்கே டெண்ட் அடிச்சிருக்கோம். இதுதான் நிரந்தரம்னாகூட சரி. நாம இங்கேயே தானே இருக்கப் போறோம்னா எல்லாத்தையும் இங்கேயே முடிச்சிரலாம். ''அது சரி ''ஒரு கல்லறைத் திருநாள் அது இதுண்ணு வந்தால் வெள்ளை அடிச்சு ரெண்டு மெழுகுதிரி கொளுத்தி வச்சி ஜபம் பண்ணனும்னு நினைச்சால் கூட வரதுக்கு ஏலாது. அடுத்த வருஷம் எங்கெங்கே தூக்கி அடிப்பானோ. நம்ம அதிர்ஷ்டம் தெரிஞ்சதுதான். இந்த ஊர் வேணும்னா எதிர்த்த...

Mar 25, 2010

கோயிலுக்கு - விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஓர் ஒழுங்கமைவுக்குள்ளும் ஒழுங்கமைப்புக்குள்ளும் தான் இருந்து கொண்டிருக்கின்றன என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கின்றது. இயற்கை, சமூகம், வாழ்க்கை இப்படி எல்லாமே ஓர் ஒழுங்கமைவில் (system) அல்லது ஒழுங்கமைப்பில்தான் இருக்கின்றன. தன்னியல்பில் ஓர் ஒழுங்கு கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைவு என்றும் ஏற்படுத்திவைத்திருக்கிற ஓர் ஒழுங்கு கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைப்பு என்றும் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்....

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்