வெங்கட் சாமினாதன்தமிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று சமீபத்து நிகழ்வுகள் என்று தான் சொல்லவேண்டும். இரண்டும் முரண்பட்டவை. இரண்டு வேறுபட்ட முகங்களைக் காட்டும் நிகழ்வுகள். இவ்விரண்டையும் ஒன்றாக்கிப் பார்க்கச் செய்வது இந்த முரண் நகை தான். ஒன்று,...
Apr 30, 2010
தோப்பில் முகம்மது மீரான்-வெங்கட் சாமினாதன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 5:31 AM |
வகை:
கட்டுரை,
தோப்பில் முஹம்மது மீரான்,
வெங்கட் சாமினாதன்

Apr 29, 2010
சங்கிலி - வண்ணதாசன்
வண்ணதாசன்'புள்ளை கழுத்தில சங்கிலி கிடக்கான்னு பாருங்க ' '-- பஸ்ஸை விட்டு இறங்கியும் இறங்காமலும் சொன்னாள். இறங்குகிற கூட்டத்தின் கடைசி ஆள் தரையில் காலை வைப்பதற்குள்ளாகவே மூன்று நான்குபேர் பஸ்ஸிற்குள் தங்களைத் திணித்துக்கொண்டிருக்க, குழந்தையும் கையுமாக விலகி வந்து வந்து நின்றவன்-- 'இந்தா, நீயே பாத்துக்கோ ' என்று கொஞ்சம் கோபமாகவே அவளிடம் குழந்தையை நீட்டினான். குழந்தை அதன் நான்கைந்து வயது உற்சாகத்துடன், கூட்டத்தை, பஸ்ஸை,...
Apr 28, 2010
மாடன் மோட்சம்-ஜெயமோகன்
ஜெயமோகன் ஆடிமாதம், திதியை, சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சுடலைமாடசாமி விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக் கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின்மீது கீய்ஞ் கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து, பாதக்குறடு ஒலிக்கப் புறப்பட்டது. சேரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஒரு பயலுக்காவது இப்படி ஒரு தெய்வம், நடுராத்திரி மையிருட்டில் பசியும் பாடுமாக அல்லாடுவதைப் பற்றிய பிரக்ஞை இல்லை....
Apr 27, 2010
கடல்புரத்தில் - வண்ணநிலவன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 8:03 AM |
வகை:
கதைகள்,
வண்ணநிலவன்

வண்ணநிலவன்ஊரிலே என்ன நடந்தால் தான் என்ன? அறுப்பின் பண்டிகை வந்துவிட்டது. கோயில் முன்னே இருக்கிற உயரமான கொடிக் கம்பத்தில் சிவப்புப் பட்டுத்துணியில் காக்காப் பொன்னிழைகள் பதிக்கப்பட்ட கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் ஆராதனைகள் நடந்தன.
அனேகமாக எல்லா வீடுகளிலும் விருந்தினர்கள் நிரம்பியிருந்தார்கள். பக்கத்து ஊர்களில் கல்யாணமாகியிருந்த பெண்கள் தங்கள் கணவன் வீட்டாருடன் வந்து விட்டார்கள். எல்லோரையும்...
Apr 25, 2010
அரிசி - நீல. பத்மநாபன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 5:06 AM |
வகை:
கதைகள்,
நீல பத்மநாபன்

நீல. பத்மநாபன்சற்றுத் தொலைவில் நீரில் துடுப்புகள் சலசலக்கும் ஓசை...
காலூன்றி நின்ற வையத்திலும், அண்ணாந்து பார்த்த வானிலும் இருள்தளம் கெட்டி நிற்கையில், விருட்சங்களுக்கு மட்டும் எப்படித் தோற்றம் இருக்க முடியும்?
மண்ணிலும் காற்றிலும் ஈரம் சொட்டுகிறது. அடுத்த மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம்...
மேற்குவான்மூலையில் அடிக்கடி மின்னலின் மின்சார வீச்சு... அதோடு இடியோசையும் சடசடவென்கிறது.
நெய்யாற்றில்...
Apr 24, 2010
ஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 7:22 AM |
வகை:
கதைகள்,
வைக்கம் முஹம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர் தமிழில்: குளச்சல் மு. யூசுப் மகர1 மாதம் 8ஆம் தேதி. இன்று எனது பிறந்த நாள். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்து, குளிப்பது போன்ற காலைக் கடன்களை முடித்தேன். இன்று அணிவதற்காகவென்று ஒதுக்கிவைத்திருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையையும் வெள்ளைக் கதர் வேட்டியையும் வெள்ளை கேன்வாஸ் ஷ¨வையும் அணிந்து எனது அறையில் சாய்வு நாற்காலியில் கொந்தளிக்கும் மனதுடன் மல்லாந்து படுத்திருந்தேன். என்னை...
Subscribe to:
Posts (Atom)
நன்றி..
இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.
http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது
ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம்
அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்
ஜெயமோகன்
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்