Dec 31, 2010

அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்

மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின்...

Dec 30, 2010

தண்ணீர்-கந்தர்வன்

வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது.உள்ளே அம்மா 'பொட்டுத் தண்ணியில்லை ' என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொ ல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப்...

Dec 28, 2010

போர்த்திக் கொள்ளுதல்-வண்ணதாசன்

கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற கைலியையோ போர்த்திக் கொண்டு தூங்குவதைக் காலையில் பார்க்கும் போதெல்லாம் ஒரு போர்வை எப்படியாவது இந்த மாதம் வாங்கிவிட வேண்டும் என்று சரசு நினைப்பாள். ராத்திரி படுக்கும்வரை படித்துக் கவிழ்ந்து வைத்த வாரப் பத்திரிகையையும் கண்ணாடியையும் எடுத்து ஜன்னலில் வைத்த கையோடு அவனை எழுப்பி நேரே ஒரு போர்வை வாங்கிக்...

Dec 27, 2010

நவீன எழுத்தாளனின் தலைவிதி-சுந்தர ராமசாமி

கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டின் தொடக்கவுரை - 28.12.90 கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டை ஒட்டி நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் தொடக்கவுரையை நிகழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நானும் இதில் பங்கு பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த என் நண்பர் டாக்டர். பத்மனாபன் அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்....

Dec 25, 2010

உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை - எஸ் . ராமகிருஷ்ணன்

பிரபவ வருடம் சித்திரை இரண்டாம் நாள் முகாம். திருவாவடுதுறை , தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு, தங்கள் அடிப்பொடியான் வலசைஏகாம்பரநாதன் எழுதும் மடல் திருப்புல்லணி பால்வண்ணசாமி எழுதிய பசுபதி விளக்கம் நுாலில் அடிக்குறிப்பாக இடம்பெற்றிருந்த ஆற்காடு ரத்னசாமி முதலியாரால் எழுதப்பட்டதாக சொல்லபடும் (ஒரு வேளை தழுவி எழுதப்பட்டதாக கூட இருக்கலாம் ) உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை என்ற நுாலை பற்றிய விபரங்களை தெரிந்து...

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்