இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்காக எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சூடிய பூ சூடற்க
கிடைக்குமிடம்;
தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயாப்பேட்டை, சென்னை..6000014
தொலைபேசி: +91-9884196552
இணையத்தில் வாங்க : உடுமலை.காம்
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
8 கருத்துகள்:
//இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான//
ஞானபீட விருது -தான் மிக உயரிய விருது.
அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!
Very Happy to hear... Congrats Nanjil Sir !
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...
என்னே தீர்க்கதரிசனம்!!
2009-ல் உயிர்மை நடத்திய எஸ்.ரா. புத்தக
வெளியீட்டின்போது, “எனக்கொரு ஆசை. காத்திருப்போர் பட்டியலிலிருந்து
விடுபட்டு, தத்கால், வெயிட்டிங் லிஸ்ட், RAC இல்லாமல் 2010-ம் (வருட)
சீட் நாஞ்சில் நாடனுக்கும், 2011-ம் (வருட) சீட் எஸ். ராமகிருஷ்ணனுக்கும்
2012-ம் (வருட) சீட் ஜெயமோகனுக்கும் சாகித்ய அகாதெமி எக்ஸ்பிரசில் இடம்
கிடைக்கவேண்டும்!” என்று 72 வயதான மகானுபாவன் ஒருவன் சொன்னான். அவன்
வாய்க்கு சர்க்கரை தான் போடவேண்டும்! அந்த மகானுபாவன் நான் தான்! அதில் 33 சதவீதம் பலித்துவிட்டது! மீதியும் பலிக்க ஆண்டவன் அருள வேண்டும்!!
நாஞ்சில் நாடனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
பாரதி மணி
நாஞ்சில் நாடனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மணி சார், கொஞ்சம் வண்ணநிலவனையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்களேன்.
நன்றி, பாஸ்கர்.
பாஸ்கர்: அப்படிப்பார்த்தால் எனக்கும் கநாசு போடுவது போல ஒரு பெரிய லிஸ்டே உண்டு. அதில் வண்ணநிலவனும் அடக்கம்!
மணி சார், எழுத்தாளர் ஜெயமோகன் போல நீங்களும் உங்கள் பட்டியலை வெளியிடுங்களேன்? ஒரு வேளை எதிர்காலத்தில் கர்நாடக சங்கீதத்தில் இருப்பது போல "Hall of Fame" ஒன்று தமிழ் இலக்கியத்தில் உருவாக்க உதவலாம். நன்றி.
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.