அந்தத் தெருவின் முனையில் அந்தப் பால்கிடங்கு இருந்தது. அவன் வீட்டின் எதிரிலும் ஒரு பால் கிடங்கு. அங்கிருந்துதான் அவனுக்கு ஒரு வேலைக்காரி பால் வாங்கி வருவாள். என்றாவது ஒரு நாள் அந்தப் பால் கிடங்கில் பால் விபியோகிப்பவரிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டுக்குச் சில்லைறைக் கேட்டால் முகத்தில் அடித்த மாதிரி 'இல்லை' என்பான். அது தன் வேலையில்லை என்ற கௌரவத்தில் அவன் முகத்திலேயே ஒரு சிடுமூஞ்சித்தனம். பிறகு அவரிடம் அவன் தவறியிம் சில்லறை கேட்டதில்லை. பாங்குக்குச் செல்லலாமென்றால் அது னிட்டிலிருந்து சற்றுத் தூரத்தில் இருந்தது. இந்த வயதில் அவனால் அதிகமாக நடக்க இருந்தது. இந்த வயதில் அவனால் அதிகமாக நடக்க முடிவதில்லை. அவனோ அவன் வயது வெறும் எழுபது மாத்திரம் என்றாலும் நூறு வயதின் கசப்பான அனுபவம். மாதம் முடிய இரு நாட்கள். பென்ஷன் பெறுவது நூறு ரூபாய் நோட்டுகளில் தான். அதுவும் ஒரு நல்ல ஏற்பாடுதான்.அவன் தன் சொற்பச் சேமிப்பைக் கூட பாங்கில் வைத்திருந்தாலும் செக்புக் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். இது இன்னொரு நல்ல ஏற்பாடு. இத்தனைக்கும் அவன் ஒரு செலவாளி. அந்தத் தெரு முனையில் உள்ள பால் கிடங்கில் உள்ளவன் நல்லவன். எந்தக் கணத்திலும் பிறர்க்கு உதவி செய்பவன் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறான். அவனைப் போய்ப் பார்த்தால் நடக்க வேண்டும். வயது ஒரு முட்டுக்கட்டை. மேலும் அவன் ஒரு சுபாவ சோம்பேறி, சுகவாசி உடம்பை வளைத்து வேலை செய்யவேண்டும். வேறு வழியில்லை. குடையையிம் பையையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். இது அவன் வழக்கம். நடக்க ஆரம்பித்தான். கிடங்கு வந்தது. அவன் சிரித்த முகம். வயது முப்பது இருக்கும். நீலச் சட்டை, நீலக்கால்சராய். திடகாத்திரமான தேகம். இவன் சங்கோஜி. அவன் இவன் நிலையைப் புரிந்து கொண்டு ""ஸாருக்கு என்ன வேண்டும்?"" என்று கேட்டான். இவனைக் கேட்கலாமோ கேட்கக் கூடாதோ என்ற குழம்பின பிலையில் ""ஒரு நூறு ரூபாய் நோட்டுக்கு முடியுமானால் சில்லரை"" என்று இழுத்தான். அவன் சிரித்துக் கொண்டே ""இருந்தால் தருவதற்கென்ன"" என்று சொல்லி நோட்டை வாங்கிக் கொண்டே ஐந்தும் பத்துமாக சில்லறை கொடுத்தான். இது இடைவிட்டு இடை விட்டு நடந்தது.
ஒரு நாள் இவன் அவரிடம் கேட்டான். ""எவ்வாறு உங்களால் இவ்வாறு எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடிகிறது?""
""இயல்பாகவே அப்படி""
""பெயர்?""
""கண்ணன்""
""படிப்பு?""
""பாதி டிக்ரி வரை""
""கல்யாணம் ஆயிருக்காது""
""சரி""
""ஏனோ""
""அதுவா? அப்பா போலிஸில் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்து பென்ஷன் பெற்றார். அவருக்கு இப்பொழுது வயது எழுபது. எனக்கு இரு மூத்த சகோதரிகள். கடன் வாங்கிக் கல்யாணம் நடத்தி விட்டோம். அந்தக் கடனைத் தீர்க்கத்தான் இந்த வேலையில் இருக்கிறேன்.""
""கூட யார்?""
""அப்பாவுடனும், அம்மாவுடனும்தான் இருக்கிறேன். வேறு யாருடன் இருக்க?""
""எங்கிருந்து வருகிறீர்கள்?""
""இங்கிருந்து இரண்டு மைல் தூரம். பஸ்ஸில் வருகிறேன்.""
இந்த உரையாடல் நடந்து மாதங்கள் சென்றபின் கிடங்கில் அவனைப் பார்க்கவென்றே தெருமுனைக்குச் சென்றான் குடையும் பையுமாக. கிடங்கில் வேறு ஒரு ஆள் இருந்தான். அதே நீல நிற ஷர்ட், நீலச் சராய்.
கேட்டான், ""இங்கு கண்ணன் என்று ஒருவர் இருப்பாரே? அவர் இப்பொழுது இல்லையா?""
""அவரை இப்பொழுது பள்ளிவிளைக்கு மாற்றிவிட்டார்கள்.""
அவன் சிந்தனை தேக்கிய உள்ளுடன் திரும்பினான். நேசத்தில் நினைவு முகம் மறக்கவில்லை.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
6 கருத்துகள்:
chinna uli;chinna silai;nalla pathivu;mugam enbathu nizhalkalo? Marayum nizhalkal marupadiyum varumo? endraal eppothu?
நல்ல பதிவு.
நல்ல பகிர்வு
மிக அருமையான. பகிர்வு . நன்றி .
அருமையான பகிர்வு . நன்றி .
அழகான மொழிநடை
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.