Dec 17, 2010

திலீப்குமார், ஆ.மாதவன் - விருதுகள்

a maathavan1 dilipkumar1

ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’

திலீப்குமார் ‘விளக்கு’

இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் அழியாச்சுடர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. விளக்கு அமைப்பு, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இரண்டுக்கும் அழியாச்சுடர்கள் சார்பாக தேர்ந்த எழுத்தாளர்களைக் கெளரவிப்பதற்காக நன்றிகளும், வாழ்த்துகளும்.

‘திலீப்குமார்’ குறித்த சுட்டிகள்:

மெளனியுடன் கொஞ்சதூரம் - திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை
மாநகரகோடை - திலீப்குமார் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
அக்கிரகாரத்தில் பூனை - திலீப்குமார் சிறுகதை
திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்

மொழியின் எல்லைகளைக் கடந்து - வெங்கட் சாமிநாதன்
திலீப்குமார் - ஜெயமோகன்
திலீப்குமார் - இணையத்திலிருந்து சில தொகுப்புகள் - பாஸ்டன் பாலா
திலீப்குமார் - அழியாச்சுடர்கள் தொகுப்பு

மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.

ஆ.மாதவன் - சுட்டிகள்:

பாச்சி - ஆ.மாதவன் சிறுகதை
ஆ.மாதவன் குறித்து அ.முத்துலிங்கம்

ஆ.மாதவன் - ஜெயமோகன்
ஆ.மாதவன் விக்கி இணையப்பக்கம்
ஆ.மாதவன் - அழியாச்சுடர்கள் தொகுப்பு

ஆ.மாதவன் நூல்களை இணையத்தில் வாங்க:

கிருஷ்ணப்பருந்து - தமிழினி பிரசுரம்
ஆ.மாதவன் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி பிரசுரம்
புனலும், மணலும் - காலச்சுவடு பிரசுரம்
இனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன் மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு

நன்றி: சொல்வனம்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

அ.வெற்றிவேல் on December 17, 2010 at 10:32 PM said...

ஆ.மாதவன் திலீப்குமார் இரண்டு பேருமே மிகச் சிறந்த படைப்பாளிகள்.. ஆ.மாதவன் வாச்கர்களிடையே போதிய கவனம் பெறாமல் போனவர். ஆ.மாதவனின் நாயணம் சிறுகதை அவரின் மாஸ்டர்பீஸ். நாவல்கள் கிருஷ்ணபருந்து புனலும் மணலும் நம் முகத்தில் அறைந்து உண்மை வாழகையைச் சொல்லும் நாவலகள்.. இருவரையும் கௌரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும், விளக்கு அமைப்பிற்கும் அவர்களின் திவீர வாசகனாகிய என் நன்றிகள்..

RAMESHKALYAN on December 20, 2010 at 8:03 PM said...

திலீப் குமாருக்கான விருது குறித்து மகிழ்ச்சியாயிருக்கிறது. எனக்கு அவருடைய தீர்வு சிறுகதை மிகப் பிடித்த ஒன்று. விளக்கின் வெளிச்சம் சரியாக விழுந்திருப்பது குறித்து மனம் மகிழ்கிறது.
RAMESH KALYAN

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்