மந்த்ரம்
ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம்
உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன்
நாயர் உபயம்
சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம்
தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்
அலுமினியப் போணி வமு.சல.பெ.ம.
அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்
ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்னத்தட்டு ஒரு டஜன்
வைரங்குளம் மிட்டாதார் உபயம்
வைரங்குளம் மிட்டாதார்...
Jul 20, 2009
பசுவய்யா கவிதைகள்-சுந்தர ராமசாமி
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 7:11 AM |
வகை:
கவிதைகள்,
சுந்தர ராமசாமி,
பசுவய்யா

நகுலன் கவிதைகள்
நகுலன் நன்றி: 'ழ' இலக்கிய இதழ்நான்
எனக்கு யாருமில்லை
நான்
கூட...
இவ்வளவு பெரிய
வீட்டில்
எனக்கு இடமில்லை
இவ்வளவு
பெரிய நகரத்தில்
அறிந்த முகம் ஏதுமில்லை
அறிந்த முகம் கூட
மேற் பூச்சுக் கலைய
அந்நியமாக
உருக்காட்டி
மறைகிறது
என்னுருவங்
கலைய
எவ்வளவு
காலம்
கடந்து செல்ல வேண்டும்
என்ற நினைவுவர
''சற்றே நகர்''
என்று ஒரு குரல் கூறும். ...
பிரமிள் கவிதைகள்
பிரமிள் ஒளிக்கு ஒரு இரவு- காக்கை கரைகிறதே பொய்ப்புலம்பல் அது. கடலலைகள் தாவிக் குதித்தல் போலிக் கும்மாளம். இரும்பு மெஷின் ஒலி கபாலம் அதிரும். பஞ்சாலைக் கரித்தூள் மழை நுரையீரல் கமறும். அலமறும் சங்கு இங்கே உயிர்ப்புலம்பல். தொழிலின் வருவாய்தான் கும்மாளம். லாப மீன் திரியும் பட்டணப் பெருங்கடல். தாவிக் குதிக்கும் காரியப் படகுகள். இயற்கைக்கு ஓய்வு ஓயாத மகத் சலித்த அதன் பேரிரவு. நிழல்கள் பூமியின் நிழலே வானத் திருளா? பகலின் நிழல்தான் இரவா? இல்லை,...
சுப்பையா பிள்ளையின் காதல்கள்-புதுமைப்பித்தன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 7:10 AM |
வகை:
கதைகள்,
புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்
(1943க்கு முன்பு நன்றி: புதுமைப்பித்தன் கதைகள்; காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு, ஆகஸ்ட் 2000.)
வீரபாண்டியன்பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபயத்திற்காகச் சென்னையை முற்றுகை-யிட்டபொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற `செமன்ட்’ கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான Êஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்.
திருநெல்வேலியிலே,...
இரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 7:10 AM |
வகை:
கட்டுரை,
புதுமைப்பித்தன்,
ஜெயமோகன்

ஜெயமோகன் தல்ஸ்தோயியின் `புத்துயிர்ப்பு’, தஸ்தயேவ்ஸ்கியின் `குற்றமும் தண்டனையும்’ ஆகிய நாவல்களை ஒரேசமயம் படிப்பவர்கள் அவற்றுக்கு இடையேயான ஒற்றுமையை வியப்புடன் கண்டடையக் கூடும். நெஹ்ல்யுடோவின் `குற்றத்தையும் அதன் தண்டனை’-யையும் குறித்து தல்ஸ்தோய் எழுதுகிறார் என்றால் ரஸ்கால்நிகாபின் `புத்துயிர்ப்பு’ குறித்தே தஸ்தயேவ்ஸ்கி எழுதுகிறார். இருநாவல்களிலும் உள்ள வினா ஒன்றுதான். `குற்றம்’ `பாவம்’ என்பதெல்லாம் ஒப்பீட்டளவில் தீர்மானிக்கப்படுபவை. தண்டனையோ முழுமுற்றானது. அப்படியானால் முழுமுற்றாக `குற்றத்தையும்’, `பாவத்தையும்’ வரையறுத்துவிட...
காலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 7:10 AM |
வகை:
கட்டுரை,
சுந்தர ராமசாமி,
புதுமைப்பித்தன்

சுந்தர ராமசாமி (`நோபல் பரிசு பெற்ற சில கலைஞர்களையாவது பின்தங்கச் செய்யும் கலைஞனாகப் புதுமைப்பித்தனை உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இம்முடிவுக்கு நீங்கள் வந்தததற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை விளக்க முடியுமா?’ என்கிற கேள்விக்கு சுந்தர ராமசாமி காலச்சுவடு; இதழ் 10, ஜனவரி 1995-_ல் எழுதிய பதிலின் சுருக்கம்.)
புதுமைப்பித்தன் சிறுகதைகளும் கவிதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவரின் நாடகங்கள் பலவீனமானவை. கட்டுரைகள் அவ்வடிவத்திற்குள் இன்று உலகெங்கும் உறுதிப்பட்டு-விட்ட வாதத்தின் நீட்சி முழுமை...
Jul 19, 2009
கதை மூலம்-கு.ப.ரா
கு. ப. ராஜகோபாலன் உ.வே. சாமிநாதையருக்குப் பிறகு கி. வா. ஜகந்நாதன் கலைமகளின் ஆசிரியரானார். மிகப்பின்னாடிதான் என்றாலும், 1980களில் முதன்முறையாக கலைமகளின் அட்டையில் ஓவியர் மாருதியின் படம் வெளியான போது கலைமகள் வாசகர்கள் ஆச்சர்யப்பட்டு வாயடைத்துப் போனார்கள் என்பார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை. கி.வா. ஜ காலத்திலேவா இது நடந்துவிட்டது! அந்த அளவுக்கு உ.வே.சா தொடங்கிவைத்த பாரம்பரியத்தை கி.வா.ஜகந்நாதன் காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறார். கி.வா.ஜ காலகட்டத்தில்தான் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், க.நா. சுப்பிரமண்யம், சி.சு. செல்லப்பா,...
ஜி. நாகராஜனின் படைப்புலகம்-மனுஷ்யபுத்திரன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:28 AM |
வகை:
கட்டுரை,
மனுஷ்யபுத்திரன்,
ஜி. நாகராஜன்

மனுஷ்யபுத்திரன் (1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை) தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின்...
கிருஷ்ணன் நம்பியின் கதைகள்-நகுலன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:28 AM |
வகை:
கட்டுரை,
கிருஷ்ணன் நம்பி,
நகுலன்

நகுலன் நன்றி: கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் தமிழாலயம் வெளியீடு. நமக்குப் பழக்கமான விஷயங்களைப் பழக்கமான முறையில் காரியத்திறமையால் செய்வதால் சிறப்புப்பெறும் சிறப்பு கிருஷ்ணன் நம்பி கதைகளில் இல்லை. எந்த விஷயங்களையும்...
கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:28 AM |
வகை:
கதைகள்,
ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன் ஜூலை 1972 நன்றி : ஜி. நாகராஜன் படைப்புகள் காலச்சுவடு வெளியீடு.``எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை...
ஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:28 AM |
வகை:
கட்டுரை,
சி. மோகன்,
ஜி. நாகராஜன்

சி. மோகன்நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளை அபாரமாக விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அது வரையான தமிழ்எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கெளரவத்தோடும் வாழும் உலகமது. ஜெயகாந்தனின் படைப்புலகில் இவர்கள் இடம் பெறுகிற போதிலும் அவருடைய மொண்ணையான மதிப்பீடுகளினால் அந்த உலகம் சிதைவுறுவதைப் போலல்லாமல் இயல்பான மலர்ச்சியைக் கொண்டிருக்கும் உலகம் ஜி. நாகராஜனுடையது. அவருடைய இரு நாவல்களுக்கும் தொடக்கமாக முன்வைத்திருக்கும் சிறு குறிப்புகள் அவருடைய...
கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:27 AM |
வகை:
கதைகள்,
புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25.11.1934 )
1
சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.
அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.
அங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.
கூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல் ...
மனித யந்திரம்-புதுமைப்பித்தன்
வலையேற்றியது: Ramprasath
| நேரம்: 6:27 AM |
வகை:
கதைகள்,
புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 )
1
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர்.
அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு...
Subscribe to:
Posts (Atom)
நன்றி..
இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.
http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது
ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம்
அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்
ஜெயமோகன்
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்